நமக்கும் அதில் மகிழ்ச்சியே. ஆனாலும் நாம் எப்போதுமே இங்கு உள்ள இந்தியர்களின் பிரச்சனைகளிலேயே அதிகம் கவனம் செலுத்துவதால் அந்தப் பிரச்சனை நமக்குப் பெரிதாகத் தோன்றவில்லை.
உள்ளுரில் பிறந்து நாடற்றவர்களாக வாழும் நம் இந்தியர்களின் பிரச்சனையே நமக்கு முதன்மை பிரச்சனையாகத் தோன்றுகிறது. இது போன்று நாடற்றவர்களாக முத்திரைக் குத்தப்பட்ட அனைத்து இனத்தவரிலும் சுமார் 30,000 பேர் இருப்பதாக சொல்லப்படுகிறது.
நம்மைப் பொறுத்தவரை உள்ளுரில் பிறந்தவர்களுக்கு உடனடியாக ஒரு தீர்வைக் காண வேண்டும். குடியுரிமை என்று வரும் போது அதில் பல சிக்கல்கள் இருக்கலாம். ஆனால் அந்தப் பிரச்சனையை ஆண்டுக்கணக்கில் இழுத்துக் கொண்டுப் போவதால் பிரச்சனை பெரிதாகிக் கொண்டே போகும். யாராவது அதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.
உள்துறை அமைச்சர் இதற்கு ஒரு நிரந்தர தீர்வு காண்பார் என்று நம்புகிறோம். இதற்கு முன்னர் உள்ள அரசாங்கம் பொறுப்பாக நடந்து கொண்டிருந்தால் இப்போது இந்தப் பிரச்சனையே எழ வாய்ப்பில்லாமல் போயிருக்கும். ஆனால் யார் வந்தாலும் இழுத்தடிக்கும் போக்கையே கடைப்பிடிக்கின்றனர். அதனால் தான் எந்தக்காலத்திலும் தீர்க்கவே முடியாத பிரச்சனையாக இது தோற்றமளிக்கிறது.
இனி மேலாவது, இன்றைய நடப்பு அரசாங்கம், இந்தக் குடியுரிமைப் பிரச்சனையில் ஒரு நிரந்தரத் தீர்வைக் காணும் என நம்புகிறோம். இதில் பாவப்பட்ட இந்தியர்களே அதிகம் பாதிக்கப்பட்டவர்கள். அதனால் தான் இந்தப் பிரச்சனை இன்னும் இழுத்தடித்துக் கொண்டு போகிறது. இதுவே மற்ற இனத்தவராக இருந்தால் எப்போதோ இந்தப் பிரச்சனை ஒரு முடிவுக்கு வந்திருக்கும்.
நல்லதே நடக்கும் என நம்புவோம்.
No comments:
Post a Comment