நினைக்கும் போதே அருவருப்பைத் தருகிறது. ஆனால் இதனை வைத்தே பிழைப்பு நடத்துகிறார்கள் வியாபாரிகள் என்றால் அவர்களை என்ன செய்வது?
சிந்தித்துப் பார்க்கும் போது இவர்களின் வியாபாரங்களைச் சுகாதாரத்துறை இத்தனை ஆண்டுகள் எப்படி விட்டு வைத்தது என்று கேடக வேண்டி உள்ளது. இத்தனை ஆண்டுகள் இவர்கள் வியாபாரம் செய்ய எப்படி அனுமதித்தது?
இதற்கு முற்றிலுமாக பழியை ஏற்கவேண்டியவர்கள் சுகாதாரத்துறை தான். அவர்களுக்குத் தெரியாமலா இத்தனை ஆண்டுகளாக அவர்கள் செயல்பட்டு வந்திருக்கிறார்கள்? சுகாதாரத்துறையின் செயல்பாடுகளைத்தான் நாம் சந்தேகிக்க வேண்டியுள்ளது.
இதனை நாம் சாதாரணமாக எடுத்துக்கொள்ள முடியவில்லை. மனிதர்கள் சாப்பிடும் உணவுகளில் இப்படி விஷத்தை ஏற்றி விற்பனைக்குக் கொண்டு வருகிறார்கள் என்றால் அவர்களுக்கு அந்த அளவு தைரியத்தைக் கொடுத்தது யார்> பொது மக்கள் இத்தனை ஆண்டுகள் எலியின் கழிவுகளையும் சேர்த்துத்தான் சாப்பிட்டு வந்திருக்கிறார்கள். இதனைப் நாம் எப்படி எடுத்துக் கொள்வது?
அவர்கள் மீது குற்றம் சாட்டி இர்ண்டு வாரங்கள் கடையை மூடுவதால் பிரச்சனைகள் தீர்ந்து விட்டதாக சுகாதாரத்துறை எண்ணுகிறதோ? அவர்களுக்குத் தண்டையனாக ஒரு சிறிய தொகையைக் கட்டச்சொல்லி அப்படியே அனைத்தையும் மூடிவிடுவதால் இது மீண்டும் நடக்காதா?
இதுவல்ல தண்டனை. அந்தக்கடையை நடத்தும் முதலாளிக்கு குறைந்தபட்சன் ஐந்து ஆண்டுகளாவது சிறைத்தண்டனை கொடுத்து அவர்களை உள்ளே தள்ள வேண்டும். அந்த அளவுக்கு அது மிகவும் கொடுரமான ஒரு குற்றம்.
அது சரி மலாக்காவில் மட்டுமா இப்படி? மற்ற மாநிலங்களில் நிலைமை என்ன நிலையில் இருக்கிறது என்பது தெரியவில்லையே? எல்லாம் சரியாகத்தான் இருக்கிறது என்றால்....? நம்ப முடியவில்லையே!
No comments:
Post a Comment