இதென்னடா புதுசு என்று இப்போது தான் முதன் முதலாக கேள்விப்படுகிறேன். அட நான் விரும்பி சாப்பிடும் 'கரிபாப்' புக்குக் கூடவா இப்படி ஒரு சோதனை? எல்லாம் காலத்தின் கோலம் என்பதைத்தவிர வேறு என்ன சொல்ல?
உணவு பொருள்களைத் தயாரிப்பவர்களுக்கு ஒரு தராதரம் வேண்டும். சுத்தம் சுகம் தரம் என்பது பாலர்பள்ளி பாடம். இப்போது அதனையெல்லாம் சொல்லிக் கொடுக்க ஆளில்லை. ஏன் வீட்டில் கூடவா ஆளில்லை?
மேல்நாடுகளில் இப்படியெல்லாம் நடப்பதில்லை என நம்பலாம். அவர்கள் உணவு என்று வரும் போது கடுமையான கட்டுப்பாடுகளை வைத்திருக்கிறார்கள். இங்குக் கட்டுப்பாடுகள் இருந்தாலும் அதனை இலகுவாகச் சரி செய்துவிடலாம். கையில் காசு இருந்தால் போதும் என்கிற நிலைமை!
என்னடா இது? ஒரு கரிபாப் கூடவா நிம்மதியாக சாப்பிட முடியவில்லை? அதிலேயும் சிகிரெட் துண்டுகளா? என்ன தான் இவர்கள் நினைக்கிறார்கள் என்பது நமக்கும் புரியவில்லை. பணமும் கூடுதலாக வாங்குகிறார்கள். சிகிரெட்டையும் கலப்படம் செய்கிறார்கள்! தவறுகள் நடக்கலாம். ஆனால் சாப்பிடும் பொருள்களில் தவறுகள் நடக்கக் கூடாது என்று யார் இவர்களிடம் சொல்லுவது?
உணவுத் துறைகளில் உள்ளவர்கள் மக்களைப் பற்றி என்ன தான் நினைக்கிறார்கள்? ஒன்று மட்டும் நமக்குப் புரிகிறது. சுகாதார அதிகாரிகளால் இவர்கள் கண்காணிக்கப் படுவதில்லை. அதனால் இவர்கள் தனிக்காட்டு ராஜாக்களைப் போல செயல்படுகிறார்களென்பது மட்டும் தெரிகிறது.
பாதிக்கப்பட்ட நபர் அந்த கரிபாப் விற்பனையாளரிடம் அந்த கரிபாப்பை திரும்ப கொடுத்த போது அவர் சிரித்துக் கொண்டே வாங்கிய மூன்று வெள்ளியைத் திருப்பிக் கொடுத்து விட்டாராம். அவ்வளவு தான்.
தறிகெட்ட அரசாங்கம் இருந்தால் இப்படித்தான் நடக்கும்!
No comments:
Post a Comment