திராவிடம் வேண்டாம் தமிழா
திராவிடம் இந்நாட்டில் நிறையவே உழைத்துக் களைத்துவிட்டது. இனி மேலும் உழைக்க வேண்டிய சூழல் இல்லை என்பதால் அவர்கள் நமது கலாச்சாரங்கள் மீது தங்கள் கவனத்தைச் செலுத்த ஆரம்பித்துவிட்டார்கள்.
ஆனால் எல்லாவற்றுக்கும் ஓர் அளவு உண்டு. தமிழ் நாட்டில் திராவிடம் பேசிய நாயக்கர்கள் தமிழ் நாட்டை ஆண்டுக் கொண்டிருக்கிறார்கள். தமிழன் வீதியில் நின்று கொண்டு கத்திக் கொண்டிருக்கிறான். ஆட்சி அவன் கையில் இல்லை. மொழியை இழந்துவருகிறான். ஆட்சி மொழி ஆங்கிலமாகிவிட்டது. தமிழ் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருகிறது.
தமிழ் நாட்டில் தொலைக்காட்சிகளில் கூட தமிழர்களுக்கு வாய்ப்பில்லை. சினிமா? வாய்ப்பே இல்லை! பெரும் வியாபாரிகள் நாயக்கர்கள் தான்.
சரி, இதற்கும் அதற்கும் என்ன சம்பந்தம்? எல்லாமே வழிபாட்டில் தான் ஆரம்பித்தது. மூட நம்பிக்கை என்று சொன்னார்கள். கலைஞர், ஸ்டாலின், உதயநிதி நாத்திகர்கள். அவர்கள் வீட்டுப் பெண்மணிகள் அனைவரும் ஆத்திகர்கள். அவர்கள் வீட்டிலேயே அவர்களின் நாத்திகம் எடுபடவில்லை. ஆனால் இவர்கள் இங்கே அதே நாத்திகத்தைப் பேசுகிறார்கள்! எடுபடாத ஒன்றைப் பற்றி பேசுகிறார்கள்.
அதுவும் பாட நேரத்தில் அந்த வழிபாட்டை நடத்துகிறார்களாம். அதனைக் கேள்வி கேட்க இவர்கள் யார். தலைமை ஆசிரியர்களைவிட உங்களுக்கு அதிகம் தெரியுமோ? நீங்கள் சொல்லுவதைப் போல அதனைத் தடை செய்துவிட்டால் அது ஒரு பெரிய சாதனையா? அது இந்த சமுதாயத்திற்குச் செய்யும் துரோக்ம் என்கிற அறிவே உங்களுக்கு வராதா?
திராவிடம் என்கிற சொல்லே நமது இலக்கியங்களில் இல்லை. திராவிடம் தமிழர்களின் எதிரி. தமிழர்களை ஏமாற்றவதற்காக உருவாக்கப்பட்ட ஒரு சொல்.
திராவிடம் என்று தமிழ் நாட்டில் பேசினாலும் சரி நம் மலேசியாவில் பேசினாலும் சரி தமிழர்களை அடிமைப்படுத்தும் ஒரு சொல். திராவிடமே நமக்கு வேண்டாம். தமிழர்களாகவே இருப்போம். நம் கலாச்சாரங்களைக் கட்டிக்காப்போம்.
நாம் நாமாகவே வாழ்வோம்.
No comments:
Post a Comment