சிகிரெட்டுகளைப் பிள்ளைகளிடம் கொண்டு சேர்க்க இந்த சிகிரெட் கம்பனிகள் எந்த எந்த வழிகளைப் பின்பற்றுகிறார்கள், பாருங்கள். மின் சிகிரெட்டுகள் இப்போது பல்வேறு வடிவில் வருகின்றன. அதனைப் பெற்றோர்கள் புரிந்து கொள்ள வேண்டும். "என் பிள்ளை சிகிரெட் பிடிக்கமாட்டான்" என்று அப்பாவித்தனமாகச் சொல்லிக் கொண்டிருக்காதீர்கள். இப்போதெல்லாம் பிள்ளைகள் வீட்டில் அப்பாவி வெளியே அடப்பாவி! அலட்சியம் வேண்டாம்.
எப்படியும் பிள்ளைகள் பெற்றோரின் கண்காணிப்பில் தான் இருக்கின்றனர். இனி கொஞ்சம் வேலை அதிகமாக இருக்கலாம். அவர்களுடைய புத்தகப்பைகளைக் கொஞ்சம் சோதிக்க வேண்டி வரும். ஏன்? சிலுவார் பாக்கெட்டுகள், சட்டை பாக்கெட்டுகள் இவைகளைத் தினசரி சோதித்துப் பார்க்க வேண்டி வரும்.
பிள்ளைகளுக்குத் தாராளமாக பணம் கொடுத்தால் வேண்டாத பழக்கங்கள் எல்லாம் வந்து சேரும். இதைத்தான் முதலில் பெற்றோர்கள் உணர வேண்டும்.
பொதுவாக மாணவர்களுக்கு Marker Pen, UHU Gum போன்றவை தேவைப்படாத ஒன்று. ஒரு வேளை தொழில் கல்வி பயிலும் மாணவர்களுக்குத் தேவைப்படலாம். மற்றபடி பள்ளி மாணவர்களுக்குத் தேவை இல்லை.
இன்றைய நிலையில் சிகிரெட்டுகளை எப்படி மாணவர்களிடம் கொண்டு சேர்க்கலாம் என்று சிகிரெட் வியாபாரிகள் படாதபாடுபட்டுக் கொண்டிருக்கின்றனர். பெற்றோர்களோ தங்களது பிள்ளைகள் எந்தக் கெட்டப்பழக்கத்துக்கும் அடிமையாகிவிடக் கூடாது என்று பிரார்த்தனைச் செய்து கொணடிருக்கின்றனர். ஆனால் எப்படியோ வியாபாரிகள் தான் வெற்றி பெறுகின்றனர். அந்த அளவுக்கு 'பொருட்கள்' சந்தையில் கிடைக்கின்றன. கடுமையான தண்டனைகள் இல்லை. என்ன செய்ய?
பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
No comments:
Post a Comment