ZEE, பாடல்திறன் போட்டியில் பங்கேற்ற அருளினி
Zee தொலைக்காட்சியின் சரிகமப பாடல் திறன் போட்டியில் பங்கேற்ற நம் நாட்டின் அருளினி சிறப்பாகவே தனது திறமையை வெளிப்படுத்தினார் என்பதில் எந்த ஐயமுமில்லை.
பங்கேற்பாளர் அனைவரின் குறிக்கோளும் முதல்பரிசு தான் என்றாலும் அது சாத்தியமில்லை. யாராவது ஒருவருக்குத்தான் அந்த வாய்ப்புக் கிடைக்கும். அருளினிக்கு அந்த வாய்ப்பு இல்லை என்றாலும் அவர் சக போட்சியாளர்களுக்குக் கடுமையானப் போட்டியைக் கொடுத்தார் என்பது தான் முக்கியம்.
ஆனால் இவைகளையெல்லாம் விட அவரின் தன்னம்பிக்கை தான் நம்மை வியக்க வைக்கிறது. அதுவும் இப்போது நாம் நேரிடையாகவே பார்க்கிறோம். சிறு சிறு தொழில்கள் செய்யும் பெண்கள் இன்று பலவகையான விமர்சனங்களுக்கு ஆளாகிறார்கள். அவர்களுடைய கண்ணீர் விடியோக்களை டிக்டோக்கில் பார்க்கிறோம். காரணம் சம்பந்தப்பட்டவர்களை மட்டும அவர்கள் விமர்சிக்கவில்லை அவர்களின் குடும்பத்தையே விமர்சனம் செய்கிறார்கள் என்கிற புலம்பல்களை நாம் பார்க்கிறோம்.
இதற்கெல்லாம் பதில் தான் அருளினியின் தன்னம்பிக்கை பேச்சு. ஆட்டிசம் வியாதியினால் பாதிக்கப்பட்டவர் என்றாலும் பார்வையாளருக்கு அப்படி ஒரு வியாதி அவருக்கு இருப்பதாகவே தோன்றவில்லை. அதனை அவர் பலவீனமாகவே பார்க்காதது எப்படியோ அதே போல நாமும் அதனைப் பலவீனமாகப் பார்க்கவில்லை.
அதுவும் பெண்கள் என்றால் தேவையற்ற விமர்சனங்கள் வரும், கல்லடி விழும், குடும்பங்கள் நடுவீதிக்கு இழுக்கப்படும், உண்மையில் எங்கேயாவது ஓடிப்போவோமா என்று எண்ணங்கள் எல்லாம் வரத்தான் செய்யும். ஆனால் வெற்றிபெற்ற பின்னர் அத்தனையும் மறந்து "நான் அப்போதே நினைத்தேன்!" என்று சொல்லி ஆரத்தழுவுவார்கள். எல்லாம் வேடம் என்பது நமக்குத் தெரியும்.
எல்லா கல்லடிகளையும் பட்டுத் தான் பெண்கள் தலை நிமிர வேண்டும். எந்த நேரத்திலும் தன்னம்பிக்கையை மட்டும் இழந்துவிடக் கூடாது என்பது தான் அருளினியின் மூலம் நமக்குக் கிடைத்த பாடம்.
அவருடைய எதிர்காலம் சிறக்க வாழ்த்துவோம்!
No comments:
Post a Comment