இது நாட்டின் 530-வது தமிழ்ப்பள்ளி. பெருமைக்குரிய விஷயம் தான் அதே சமயத்தில் மாணவர் பற்றாக்குறையால் ஒரு சில பள்ளிகள் இணைக்கப்படும் சாத்தியமும் உண்டு.
இந்தப் புதிய பள்ளிக்கு என்ன பெயர் வைக்கலாம் என்கிற பேச்சும், இல்லையென்றால் விவாதமும், நம்மிடையே நடந்து கொண்டு தான் இருக்கிறது. வெளிப்படையாக இல்லையென்றாலும் துன் சாமிவேலு அவர்களின் பெயர் ம.இ.கா.வினரால் பரிந்துரைக்கப்படுகிறது என்று தான் சொல்ல வேண்டும். அது இயல்பானது தான். காரணம் சுங்கை சிப்புட் தொகுதி என்பது ம.இ.கா.வின் தொகுதி . அந்தத் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தவர் துன் அவர்கள். அதுவும் முப்பத்து நான்கு ஆண்டுகள். நீண்ட காலம் தான்.
பொதுவாகவே பள்ளிகளுக்குப் பெயர் வைக்கும் [போது அரசியல்வாதிகளின் பெயர்களை வைப்பதை நான் விரும்புவதில்லை. ஆனால் அது தான் நடந்து கொண்டிருக்கிறது. கல்வி அமைச்சும் அதைத்தான் விரும்புகிறது.
பள்ளிகளுக்கு தமிழ் அறிஞர்களின் பெயர்களை வைப்பதுதான் சிறப்பானது. ஆனால் இன்றைய நிலைமையில் அரசியல்வாதிகளே தங்களை அறிஞர்களாகவே கருதுவதால் அந்த வாய்ப்பும் கிடைப்பதில்லை. நீதி, நேர்மை, ஒழுக்கம் இவைகளையும் அரசியல்வாதிகள் சொந்தம் கொண்டாடுவதால் அவர்களை விட்டால் ஆளில்லை என்கிற நிலைமை ஏற்பட்டுவிட்டது!
சுங்கை சிப்புட் அரசியல் கட்சிகளைவிட அங்குள்ள மக்கள் என்ன நினைக்கிறார்கள் என்பது தான் மூக்கியம். ஆனால் அவர்களையும் எதுவும் நினைக்க விடமாட்டார்கள் அரசியல்வாதிகள்! அரசியல்வாதிகளின் கைகள் தான் ஓங்கி நிற்கிறது! அதனால் நாமும் பெயரில் என்ன இருக்கிறது என்று விட்டுவிட வேண்டியது தான்!
No comments:
Post a Comment