உள்துறை அமைச்சர் நாடாளுமன்றத்தில் கொடுத்த விளக்கம் அதிர்ச்சியளிப்பது தான் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
நம் நாட்டில் ஒவ்வொரு நாளும் இரண்டு சிறார்கள் காணாமல் போகிறார்கள் என்கிற செய்தியை சாதாரணமாக எடுத்துக்கொள்ள முடியவில்லை.
கடந்த 2020 ஆண்டிலிருந்து போன மாதம் செப்டம்பர் வரை தினசரி இரண்டு சிறார்கள் காணாமல் போயிருக்கின்றனர். என்றாலும் அவர்களில் 98 விழுக்காடு சிறார்கள் காவல்துறையினரால் மீடகப்பட்டிருக்கின்றனர் என்பது நல்ல செய்தியாக இருக்கிறது. அவர்கள் அனைவரும் 18 வயதுக்குக் கீழ்பட்டவர்கள்.
இதனை யாருடைய குறைப்பாடு என்று சொல்லுவது? ஊர் உலகத்தைக் குறை சொல்லுவதை விட்டு நம்முடைய, நம்முடைய பெற்றோருடைய குறைப்பாடு என்பதை ஒப்புக்கொள்ள வேண்டும்.
இந்நாட்களில் நம்மைச் சுற்றி ஏகப்பட்ட வெளிநாட்டினர் வேலை செய்து வருகின்றனர். அவர்களில் பலர் அவர்களின் நாடுகளில் குற்றப்பின்னணியோடு வந்தவர்கள். அவர்கள் எங்கிருந்தாலும் தங்களது புத்தியைக் காட்டத்தான செய்வார்கள். அதோடு உள்நாட்டில் உள்ளவர்களும் அவர்களோடு கைகோர்த்துச் செயல்படுவதையும் நாம் பார்க்கிறோம்.
அதனால் கவனம் என்பது பெற்றோர்களுக்குத்தான் இருக்க வேண்டும். இன்றையநிலையில் பெற்றோர்கள் இருவருமே வேலை செய்கிறார்கள். அதனால் வீட்டில் பெரியவர்கள் இருந்தால் கொஞ்சம் பாதுகாப்பாக இருக்கும். வேறு யாரும் அவ்வளவாக அக்கறையுள்ளவர்களாக இருக்கப் போவதில்லை.
இந்த செய்தி கொஞ்சம் அதிர்ச்சியான செய்தி தான். ஆனால் பெற்றோர்களுக்கு அது ஓர் எச்சரிக்கை. பெற்றோர்கள் தங்களது பொறுப்பை தட்டிக்கழிக்க முடியாது. பொறுப்பு உங்களுடையது தான்.
நமது பொறுப்பை நாம் உணர்வோம்.
No comments:
Post a Comment