Tuesday 1 March 2022

இனி எப்படி அழைக்கலாம்?

                                    Premier of Sarawak, Tan Sri Pattinggi Abang Johari Tun Openg

சரவாக் முதலமைச்சர்  இன்று முதல் முதலமைச்சர் என அழைக்கப்பட மாட்டார்.

 இனி அவர் Premier of Sarawak  என்று அழைக்கப்படுவார்.  Prime Minister என்றால் அது நமது பிரதமரைத்தான் குறிக்கும் அதில் எந்த மாற்றமுமில்லை.

சரவாக் மாநிலத்தின் இந்தப் புதிய மாற்றத்தை தமிழில் நாம் எப்படி அழைக்கப் போகிறோம்? இத்தனை ஆண்டுகள் நாம் அவர்களை வழக்கம் போல முதலமைச்சர் என்று  தான் அழைத்து வந்தோம்.

நமது தமிழ் ஊடகங்களில் உள்ளவர்கள் பன்மொழி புலமைப்  பெற்றவர்கள். இதற்கும் ஒரு சொல்லை இந்நேரம் கண்டு பிடித்திருப்பார்கள். எல்லாரும் ஜாம்பவான்கள். எல்லாக் காலங்களிலும் மொழிபெயர்ப்பில்  ஈடுபட்டுக் கொண்டிருப்பவர்கள். இது போன்ற சொற்கள் எல்லாம் அவர்களுக்கு மிக சர்வ சாதாரணம்.

எனக்குத் தெரிந்ததெல்லாம் வெறும் வார்த்தயை மாற்றிப் போடுவதுதான்! இதற்கெல்லாம் மண்டையை உடைத்துக் கொள்ள வேண்டியதில்லை! ஆமாம்! சரவாக் பிரதமர் டான்ஸ்ரீ அபாங் ஜொகாரி என்று வாசித்தால் அல்லது எழுதினால்  போதுமானது!  அவரது பெயரைச் சொல்லும் போது இன்னும் கொஞ்சம் தெளிவாக இருக்கும். இன்னும் கொஞ்சம் 'அவர் சரவாக் முதலமைச்சர்' என்பது அழுத்தமாக இருக்கும். அதனால் சரவாக் பிரதமர் டான்ஸ்ரீ அபாங் ஜொகாரி  என்பது பொருத்தமாக இருக்கும் என நான் நினைக்கிறேன். இதற்கெல்லாம் போய் மெனக்கெட்டு தூய தமிழ் சொற்களை எல்லாம் தேடி காலத்தை வீணடிக்க வேண்டியதில்லை! அப்படி செய்பவர்களை நான் குறை கூறவும்  தயாராக இல்லை.  எது தமிழுக்கு நல்லதோ அதுவே நமக்கும் நல்லது.

"தாய்க்கொரு பழி நேர்ந்தால் மகற்கில்லையோ! அன்னை தமிழுக்குப் பழி நேர்ந்தால் உனக்கில்லையோ!"  இது தான் நமது நிலையும்.

சரவாக் மாநிலத்தில் நல்லதொரு மாற்றம் நிகழ்ந்திருக்கிறது. அந்த மாநிலத்தின் வரலாற்றுத் தொடர்ச்சி என்பதகாவே  நாம் அந்த மாற்றத்தைப் பார்க்கிறோம். மலேசிய மாநிலங்களிலிருந்து  தாங்கள் வேறுபட்ட மாநிலம் என்பதைக் காட்டுவதே  அவர்களின் நோக்கம்.  அது சரி என்பதே நமது கருத்தும் கூட.

இன்றிலிருந்து சரவாக் பிரதமர்,  முதலமைச்சர் என்கிற அந்தஸ்திலிருந்து விடுபடுகிறார்! இனி அவர் சரவாக் பிரதமர்! ஒரே அந்தஸ்து தான் என்றாலும் அழைக்கப்படும் முறை வேறு! ஒரு வித்தியாசமும் இல்லையே என்றாலும் வித்தியாசம் உண்டு என்பதே நமது பார்வை!

No comments:

Post a Comment