Friday 4 March 2022

குற்றப்பரம்பரையா?

 


பொதுவாக குற்றப்பரம்பரையினர்  யார் என்று கேட்டால் என்னால் பதில் சொல்ல இயலாது.

காரணம் அவர்கள் யார் என்பது எனக்குத் தெரியாது. அவர்களைப் பற்றி நான் படித்ததில்லை. அப்படி  ஒரு பரம்பரை நமது நாட்டில் இருக்கிறதா என்பதை அறியாத போது அவர்களைப் பற்றி தெரிந்து கொள்ள ஆவல் எழவில்லை. 

தமிழ் நாட்டில் அப்படி ஒர் இனம் இருப்பதாகக் கேள்வி. அது பற்றி நான் அக்கறை காட்டியதும் இல்லை.  இப்போது யோசித்துப் பார்த்தால் தமிழ் நாட்டிற்குள் நுழைந்து தமிழர்களை அடக்கி ஆள வந்தவர்கள் தான்  குற்றப்பரம்பரையினர்  என்று நான் நினைக்கிறேன். ஏனென்றால்  தமிழர் நாட்டில் ஏற்பட்ட அனைத்துக் குழப்பங்களுக்கும்  துரோகங்களுக்கும்  இவர்கள் தான் காரணம்! அவர்களுடைய துரோக வரலாறு இன்னும்  தொடர்கிறது! நாம் அவர்களுக்கு மண்டியிட்டு சேவகம் செய்கிறோம்!

இன்றைய நிலையில் குற்றப்பரம்பரையினர் என்று யாரையாவது குற்றம் சொல்ல வேண்டும் என்றால்  எனக்குள்ள ஒரே  தேர்வு  அரசியல்வாதிகள் தான்! 

முன்பு ஒரு காலத்தில் குற்றப்பரம்பையினரின் பின்னணி என்ன, சாதனைகள் என்ன, சோதனைகள்  என்ன, வேதனைகள் என்ன  என்பதை ஏட்டில் தான் படித்துத் தெரிந்து கொள்ள வேண்டும். ஆனால்  இப்போது இந்த நவீன குற்றப்பரம்பரையினர்களான அரசியல்வாதிகளைப் பற்றி பெரிய ஆராய்ச்சிகள் எதுவும் தேவையில்லை. நம் கண்முன்னே அனைத்தும் நடந்து கொண்டிருக்கின்றன.

இன்று அரசியல் பெயரைச் சொல்லி மாபெரும் குற்றப் பரம்பரையினர் உருவாகிக் கொண்டிருக்கிறார்கள். இது எல்லா  இனங்களிலும் நடந்து கொண்டு தான் இருக்கிறது. ஆனால் இந்த நவீன குற்றப்பரம்பரையினர் இந்தியர்களிலும் கணிசமாக வளர்ந்து கொண்டிருக்கின்றனர்!

நமக்குத் தெரிந்தவரை நாம் இதற்கு முன் ஊழல் என்றால் நாம் அதிகம் அறிந்திருக்கவில்லை.  நமக்கு  வெளிச்சம் போட்டுக் காட்டியவர் ம.இ.கா. முன்னாள் தலைவர் சாமிவேலு தான். அந்தக் காலக்கட்டத்தில் தான் ஊழல் என்றால் என்னவென்று  அனைவருக்கும் தெரிய ஆரம்பித்தது! அவர் கூட இருந்தவர்கள் அனைவருமே இந்தக் குற்றப்பரம்பரையின் வாரிசுகள்! இந்தக் குற்றப்பரம்பரை இப்போது யாரும் எதிர்பார்க்க முடியாத அளவுக்கு செழித்து வளர்ந்துவிட்டது.

இந்தக் குற்றப்பரம்பரையினரின் வாரிசுகளும் தாங்கள் யாருக்கும் இளைத்தவர்கள் இல்லை என்பதை நிருபித்து வருகின்றனர்! அரசியலில் ஒருவர் நுழைகிறார்  என்றாலே முதலில் அவர் இந்த வாரிசுகளில் ஒருவராக இருக்க வேண்டும். குற்றம் செய்யத் தெரிந்திருக்க வேண்டும். குற்றப்பரம்பரையினர் சட்டம் பயின்றிருக்க வேண்டும். பரம்பரை தொடர்வதற்கு இதெல்லாம் ஒரு தகுதியாக எடுத்துக் கொள்ளலாம்.

குற்றப்பரம்பரை என்பது அரசியல்வாதிகளைத்தான் குறிக்கும்! இதனை நாம் உறுதியாக நம்பலாம்!

No comments:

Post a Comment