Sunday 6 March 2022

இது உண்மையா?

`2-=199w09tuvwyz 

               டத்தோஸ்ரீ  தனேந்திரன், தலைவர்,  மலேசிய மக்கள் சக்தி கட்சி

மக்கள் சக்தி கட்சி தேர்தலில் போட்டியிடுகிற அளவுக்கு வளர்ந்து விட்டதா என்று நம்மால் நினைத்துக் கூட பார்க்க முடியவில்லை! அதுவும் பாரிசான் கட்சி ஆதரவில்!  ம.இ.கா. காலங்காலமாக அங்கம் வகிக்கும் பாரிசான் கட்சியில்  இவர்களுக்கு இடம் கிடைக்கும் என்கிற நம்பிக்கை எங்கிருந்து துளிர்த்ததோ  என்பதே ஆச்சரியம்!

இவர்களுக்கு முன்னாள் ஆரம்பிக்கப்பட்ட ஐ.பி.எப். கட்சி எததனையோ ஆண்டுகள் பாரிசான்  உள்ளே நுழைவதற்குப் படாதபாடு பட்டும் எதுவும்   ஆகவில்லை!

  ஐ.பி.எப். கட்சிக்காவது  ஒரு அரசியல் பின்னணி உண்டு.  அதனை ஆரம்பித்து வைத்தவர்  முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஜி.பண்டிதன் அவர்கள். அவருடைய தலைமைத்துவ ஆற்றல் மற்றவர்களை வியக்க வைக்கும்!  அவரின் பின்னால் பெரும் இளைஞர் படையே உண்டு! எனினும் அவரால் பாரிசானை ஊடுருவ முடியவில்லை!

டத்தோஸ்ரீ தனேந்திரனுக்கு அப்படி என்ன அரசியல் பின்னணி உண்டு? சொல்லும்படியாக  ஒன்றுமில்லை! அவர் ஒரு துரோக அரசியலிலிருந்து கிளைத்து வந்தவர்! இன்று அவர் வாழ்கின்ற வாழ்க்கை அனைத்தும் அவரின் துரோக அரசியலுக்குக் கிடைத்த சன்மானம்! அவர் கட்சியில் அவர் மட்டும் தான் தெரிகிறார்!

சரி! அப்படியே அவர் வெற்றிபெற்று அரசியலில் ஜொலிப்பார் என்றே வைத்துக் கொள்வோம். என்ன செய்வார்?  தலைவர்களின் காலை விடாப்பிடியாகப் பிடித்துக் கொள்வார்! அவரின் முன்னேற்றத்திற்கு என்ன செய்ய முடியுமோ அதைத்தான் செய்வார்!  அவரின் ஜாதி சங்கத்திற்கு ஏதாவது செய்வார்! இவரிடமிருந்து எதனையும் நாம் எதிர்பார்க்க முடியாது!  துரோக அரசியல் பின்னணியிலிருந்து வந்தவருக்குத் துரோகம் எப்படிச் செய்வது என்று சொல்லியா கொடுக்க வேண்டும்! 

இவரைப் போன்றவர்கள் பொது வாழ்க்கைக்கு வந்து என்ன செய்துவிடப் போகிறார்கள்?  ஏற்கனவே நாம் ஒரு சிலரைப் பார்த்துவிட்டோம். அவர்கள் தங்கள் குடும்பங்களுக்கு நிரந்தர சாபங்களைத்தான் விட்டுச் செல்வார்கள். பொது மக்களின் சாபங்களைப் பெறுபவர்களின் குடும்பங்கள் எக்காலத்திலும் தழைத்தோங்குவதில்லை!

அரசியலுக்கு வருவதில் தவறில்லை. ஆனால் மக்களை ஏமாற்றலாம், ஒரு சமுதாயத்தை ஏமாற்றலாம்,  ஓர் இனத்தை அழித்து, அவர்களை மொழியை அழித்து ஏமாற்றிப் பிழைக்கலாம் என்று நினைத்து அரசியலுக்கு வந்தால்  நீங்கள் அழிவீர்கள். உங்கள் குடும்பம் அழியும்.

கௌரவமாகப் பிழைப்பதற்கு எத்தனையோ வழிகள் உண்டு. அரசியலை வைத்து விளையாட வேண்டாம்! கடைசியில் நீங்கள் தான் ஏமாறுவீர்கள்!

No comments:

Post a Comment