எனது முதல் ஆங்கிலப் புத்தகம் இது தான். அந்தக் காலத்திய பதிப்பு இப்படித்தான் இருந்தது.
அப்போது பள்ளியில் பரிட்சை முடிந்த நேரம். சிரம்பானில் ?பிளாஸா" தியேட்டர் ஒன்று இருந்தது. அங்கு எப்போதும் ஏதாவது ஆங்கிலப்படங்கள் ஓடிக் கொண்டிருக்கும். எல்லாம் பழைய படங்களாகவே இருக்கும். கட்டணமும் குறைவாக இருக்கும். அந்தத் தியேட்டரின் வெளியே ஒரு சிறிய புத்தகக்கடை. அனைத்தும் ஆங்கிலப் புத்தகங்களாகத்தான் விற்பனையில் இருக்கும்.
அங்கு வாங்கப்பட்டது தான் இந்த எனது முதல் ஆங்கிலப் புத்தகம் Dale Caenegie எழுதிய How to Win Friends and Influence People. அதன் பின்னர் பல ஆங்கிலப் புத்தகங்கள் எல்லாம் டேல் கார்னெகி எழுதியவை. அப்போது சிரம்பானில் ஆங்கிலப் புத்தகக்கடைகள் ஏதும் இருந்ததாகத் தெரியவில்லை. இதை விட்டால் திமியாங் 'கத்தே' தியேட்டரில் ஒரு சிறிய புதகக்கட்டை. சிரம்பானில் ஒரே தமிழ் புத்தகக்கடை என்றால் . அன்றும் இன்றும், என்றும் அது பவுல் ஸ்திரீட்டில் அமைந்துள்ள "ரெங்கசாமி புத்தக நிலையம்" தான். அங்கு தான் எனது அனைத்துத் தமிழ் புத்தகங்களையும் வாங்கினேன்.
இதுவரை நான் வாங்கிய புத்தகங்கள் சுமார் ஆயிரம் இருக்கலாம். ஓர் நூல்நிலையத்திற்குப் பல புத்தகங்கள் போய்விட்டன.. இப்போது என்னிடம் இருப்பவை எல்லாம் சுய முன்னேற்றம் (self-improvement) புத்தகங்கள் மட்டுமே.. அந்தப் புத்தகங்கள் என்னை ஈர்த்தது போல வேறு புத்தகங்கள் என்னை ஈர்க்கவில்லை!
ஒரு மனிதனின் உயர்வுக்குப் புத்தகங்கள் பெரும் பங்காற்றுகின்றன. வாழ்க்கையில் எந்த நேரத்திலும் புத்தகங்கள் கைகொடுக்கும்.
அறிவோம்: "யானை படைகண்டு சேனை பல வென்று" என்று கவியரசு கண்ணதாசனின் பாடலைக் கேட்டிருப்போம். உலகிலேயே யானை படை வைத்திருந்தவர் சோழப்பேரரசர் ராஜராஜ சோழன் மட்டும் தான். வேறு எந்த அரசரும் யானை படை வைத்திருந்ததாக வரலாறு இல்லை.
No comments:
Post a Comment