ஆரம்ப காலத்தில் எனக்கும் வானொலி ஒலிபரப்புகளுக்கும் எந்த சம்பம்தமும் இல்லை.
எனது இடைநிலைக் கல்வியின் போது ஒரு மாணவர் வந்து சேர்ந்தார். அவர் படிப்பைவிட ரேடியோ ஒலிபரப்புகளுக்கு அடிமையாக இருந்தார். எனக்கும் அவரின் பழக்கம் ஏறக்குறைய ஒட்டிக் கொண்டது என்று சொல்லலாம். அதாவது அவர் இல்லாமல் வானொலியில் "நேயர் விருப்பம்" இல்லை என்று சொல்லும் அளவுக்கு அவரது பெயர் ஒவ்வொரு நிகழ்ச்சியிலும் மூன்று நான்கு தடவை ஒலிபரப்பாகும்! அதெல்லாம் பெரிய சாதனை என்று நாங்களும் நினைத்துக் கொள்வோம்!
அப்பொழுது "பாரதி அச்சகம்" பள்ளி பக்கத்திலேயே இருந்ததால் நானும் நேயர் விருப்பம் கார்டுகளை வாங்கி வானொலி இரசிகனாகி மாறிவிட்டேன்! அப்போது சிங்கப்பூர் வனொலி தான் மிகவும் பிரபலம். அப்புறம் தான் மலாக்கா வானொலி, கோலாலம்புர் வானொலி, ஜொகூர் வானொலி. இவைகளில் மலாக்கா, ஜொகூர் இரண்டும் பகுதி நேர ஒலிபரப்புகள். அது மட்டும் அல்ல. புதுடில்லியிலிருந்து ஒலிபரப்பாகும் "ஆகாசவாணி" யையும் சேர்த்துக் கொள்ளலாம். எப்படியோ நாமும் அதில் கரைந்து போனோம்!
படிப்பில் திறமை இல்லாததால் இப்படித்தான் கவனம் சிதறிப்போனது! ஆனாலும் அதிலும் சில வெளி உலக அனுபவங்கள்!
அறிவோம்: நீங்கள் வானொலி நிகழ்ச்சிகளை அல்லது கைப்பேசியைப் பயன்படுத்துகிறவராகவோ இருந்தால் ஒன்றை மட்டும் தவற விடாதீர்கள். செய்திகளைக் கேட்பது அத்தியாவசியம். இன்றைய பல பெண்கள் நாட்டில் நடப்பதை அறியாமல் பிரச்சனைகளுக்கு உள்ளாகிறார்கள். அதனால் செய்திகள் என்பது தவிர்க்க முடியாதவை.
No comments:
Post a Comment