அறிஞர் அப்துற் றகீம்
நான் புத்தகப்பிரியன். என்னுடைய புத்தகங்கள் எல்லாம் நானே காசு கொடுத்து வாங்கியவை. தெரிந்தோ தெரியாமலோ எனது ஆரம்பகால புத்தகங்கள் அனைத்தும் தன்முனைப்பு (motivation)புத்தகங்களாகவே அமைந்துவிட்டன. இத்தனைக்கும் அந்த நேரத்தில் தப்பறியும் கதைகள், மர்மக்கதைகள் என்றுதான் எனது சுற்றுவட்டாரம் அனைத்தும் மூழ்கியிருந்தன! நானும் தான்! ஆனால் ஒன்றில் மட்டும் நான் தீர்க்கமாக இருந்தேன். இதுவரை நான் சினிமா புத்தகங்களையோ, துப்பறியும் புத்தகங்களையோ நான் லாசு போட்டு வாங்கிப் படித்ததில்லை! அந்தக்கால கட்டத்தில் துப்பறியும் கதைகளை எழுதி வந்த அனைத்து எழுத்தாளர்களின் பெயர்களையும் நான் இப்போதும் அறிவேன்.
அறிஞர் அப்துற் றகீம் எழுதிய புத்தகம் தான் "வாழ்க்கையில் வெற்றி". ஆனால் அன்றைய நிலையில் அவருடைய மொழிநடை எனக்குப் புரியவில்லை! பின்னர் பல ஆண்டுகள் கழித்து அவர் எழுதிய புத்தகங்கள் அனைத்தையும் வாங்கினேன். அப்போது மிக எளிய நடையில் தமிழ்வாணன் எழுதி வந்தார். அவருடைய நடை தான் என்னைக் கவர்ந்தது. தமிழ்வாணனின் வார இதழான "கல்கண்டு" தான் நான் முப்பது ஆண்டுகளுக்கு மேலாக வாசித்திருக்கிறேன். அவர் எழுதிவந்த துணிவே துணை கட்டுரைகள் எனக்குப் பிடித்தமானவை.
அறிவோம்: மிளகாய் என்பது மிகவும் காரசாரம் என்பதை நாம் அறிவோம். மிளகாய் வகைகளில் பலவகை உண்டு. காரம் அதிகம், குறைவான காரம் அல்லது காரமே இல்லை என்பது தான் அதன் குணம். Chili என்கிற நாட்டிலிருந்து வந்ததால் மிளகாயின் பெயர் ஆங்கிலத்தில் Chilli யாக மாறிவிட்டது! மிளகாய் தமிழர்களின் உணவு அல்ல. நமது பாரம்பரியம் என்பது மிளகு தான். மிளகாய் வருவதற்கு முன்னர் நாம் மிளகைத்தான் பயன்படுத்தினோம். இரண்டுமே காரம் தான். ஆனால் மிளகு எந்தத் தீங்கையும் செய்யாது. மருத்துவ குணமிக்கது.
No comments:
Post a Comment