அதன் ஆரம்பம் எனக்கு ஞாபகத்திற்குக் கொண்டுவர முடிய இல்லை. ஏறக்குறைய 1965/66-ம் ஆண்டுகளில் இருக்கலாம். அப்போது வானொலி தான் வீடுகளில் பிரபலம். ஆனால் வானொலிப் பெட்டிகள் பழுது அடைந்து விட்டால் சீனர்களிடம் தான் தஞ்சம் அடைய வேண்டும்.
அப்போது தான் தோட்டப்புறங்களில் உள்ள இந்திய இளைஞர்களுக்கு வானொலி பழுது பார்க்கும் பயிற்சி ஆரம்பிக்க வேண்டும் என்கிற ஒரு சூழல் ஏற்பட்டது. அதன்படி சிரம்பான் மினவுதல் மாதா தேவாலயத்தில் பாதிரியாராக இருந்த அருள்திரு ஃபாதர் பீட்டர் அதன் பொறுப்பினை ஏற்றுக்கொண்டார்.
ஆரம்ப காலத்தில் அந்த ரேடியோ பயிற்சியில் சுமார் முப்பது இளைஞர்கள் கலந்து கொண்டனர். இந்தப் பயிற்சி நடந்து கொண்டிருந்த காலகட்டத்தில் அதனை ITN முருகன் என்பவர் வாங்கி அந்தப் பள்ளியை தொழிற்பள்ளியாக மாற்றி அமைத்தார். அதன் பின்னர் அப்பள்ளி மீண்டும் கைமாறியது. அப்போது நெகிரி செம்பிலான் ம.இ.கா. மாநிலத் தலைவராக இருந்த டத்தோ பொன்னையா அவர்கள் அதனை ம.இ.கா.வின் சொத்தாக தேசிய அளவில் கொண்டு வந்தார். அது தான் பின்னர் ஃடப் கல்லுரியாக மாறியது. இது ஒரு சிறிய சுருக்கம். அவ்வளவு தான்.
இங்கு நாம் சொல்ல வருவது: சிறு துளி பெருவெள்ளம் என்பார்கள். ஆரம்பிக்கப்பட்ட நோக்கம் நல்ல நோக்கமாக இருந்ததால் முப்பது இளைஞர்களோடு ஆரம்பிக்கப்பட்ட பள்ளி இன்று ம.இ.கா.வினரால் ஃடப் கல்லுரியாக வானளவு உயர்ந்து நிற்கிறது.
கடைசியாக ஒன்று. ரேடியோ பயிற்சிக்காக சென்றவர்கள் பின்னர் நிறுவனங்களில் என்ஜினியராகப் பணிபுரிந்தனர்! அப்போது என்ஜினியர்கள் சொல்லும்படியாக இல்லாத காலம்.
அதனால் தான் கைத்தொழில் ஒன்றை கற்றுக்கொள் என்றார்கள் பெரியவர்கள்.
No comments:
Post a Comment