கோரோனா காலத்தில் சிரமங்கள் பல வரும் என்பதில் சந்தேகமே இல்லை.
குடும்பத்தைத் தூக்கி நிறுத்த பணம் தேவை. பொருளாதார வலிமை இருந்தால் தப்பித்துக் கொள்ளலாம். இல்லாதவர்கள் நிலை என்ன?
ஆனால்ஒன்று மட்டும் சொல்லுவேன். கடன் என்பது மட்டும் வேண்டாம். கடனே வேண்டாம் என்றால் "ஆலோங்" ங்கிடம் கடன் வாங்கி குடும்பத்தை நடத்துவதாவது! மறந்து விடுங்கள்!
ஆலோங் என்றாலே அது ஒரு பெரிய குண்டர் கும்பலால் இயக்கப்படும் சட்டவிரோத குழு. குண்டர்கள் இல்லாமல் அவர்களால் தொழில் செய்ய முடியாது. ஒரு முறை கடன் வாங்கினால் அந்தக் கடன் என்பது நிரந்திரம். அதுவும் நீங்கள் கொஞ்சம் நல்ல மனிதராக தெரிந்துவிட்டால் உங்களை எந்த அளவுக்குத் தொல்லை கொடுக்க முடியுமோ அந்த எல்லைவரை அவர்கள் போவார்கள்! "எவ்வளவு அடித்தாலும் தாங்குவான்!" என்கிற நிலைமைக்கு நீங்கள் தள்ளப்படுவீர்கள்!
ஆலோங்கிடம் பணம் வாங்கியவர்களில் பலர் தற்கொலை செய்கின்ற அளவுக்குப் போய்விட்டனர்.செய்தும் கொண்டனர்.
கடன் வேண்டுமென்றால் வங்கிகளை நாடுங்கள். எல்லாமே சட்டப்படியாக இருக்க வேண்டும். இல்லாவிட்டால் உங்களின் நெருங்கிய உறவுகளை நாடுங்கள்.அவர்களும் உங்கள் நிலைமையில் இருந்தால் அவர்களாலும் உங்களுக்கு உதவ முடியாது.
ஆனாலும் எல்லாவற்றிலும் சிறந்தது ஒரு தற்காலிக வேலையையாவது நீங்கள் தேடிக் கொள்ளவேண்டும். அது தான் சிறந்த வழி. உங்கள் குடும்பத்தின் மீது உள்ள அக்கறை உங்களுக்குத்தான் இருக்க வேண்டுமே தவிர வேறு யாருக்கும இருக்கும் என்று எதிர்ப்பார்க்க முடியாது.
நாடு எந்த நிலையில் இருந்தாலும் அதற்காக ஒன்றுமே இல்லை என்று கை கழுவிவிட முடியாது. வாய்ப்புக்கள் இருந்து கொண்டு தான் இருக்கும். அதற்கான் முயற்சிகளிலிருந்து நம்மை விடுவித்துக் கொள்ளவது சரியான முடிவு அல்ல. முடியும் வரை முயற்சிகள் தொடர வேண்டும்.
ஒன்றுக்கும் வழியில்லை என்றால் அதற்கும் பயப்பட ஒன்றுமில்லை. ஏதோ ஒரு நேரடித் தொழிலில் ஈடுபடுங்கள். ஆயிரக்கணக்கான நேரடித் தொழில்கள் நாட்டில் இயங்கிக் கொண்டு இருக்கின்றன. இந்தத் தொழில்கள் பலரை லட்சாதிபதிகளாக்கி இருக்கின்றன. தேவை எல்லாம் உங்கள் உழைப்புத் தான்.
நேரடித் தொழில் செய்வதில் கேவலம் ஒன்றுமில்லை. மக்களைச் சந்திக்க வேண்டும். அவ்வளவு தான்.
மீண்டும் சொல்லுகிறேன். கடன் வாங்கி குடும்பம் நடத்த வேண்டாம். அது உங்கள் சுமையைக் கூட்டும். உங்களைச் சின்னாபின்னாமாக்கி விடும்.
நல்லதொரு முடிவு எடுத்து உங்கள் வாழ்க்கயை ஜெயித்துக் காட்டுங்கள்!
Sunday, 31 May 2020
Saturday, 30 May 2020
இனி என்ன தான் நடக்கும்?
கொரொனா தொற்று நோய் நம்மிடமிருந்து இன்னும் விலகவில்லை. இன்னும் தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது.
நம்முடைய பல தொழில்கள் இன்னும் திறக்கப்படவில்லை. ஒரு சில தொழில் நிறுவனங்கள் வேலையை ஆரம்பித்துவிட்டன. இருந்தாலும் முழு மூச்சாக இன்னும் செயல்படவில்லை. குறைவான தொழிலாளர்களுடன் ஓரளவு செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன.
ஆனால் பெரும்பாலும் நம்மில் பலருக்கு இது ஒன்றும் நல்ல செய்தி அல்ல. தொழிற்சாலைகள் நூறு விழுக்காடு செயல்பட்டால் தான் நம்மில் பலர் தங்களது குடும்பங்களைக் காப்பாற்ற முடியும். அப்படி ஒரு நிலைமையில் தான் நமது சமுதாயம் இருக்கிறது.
வேலை செய்து தான் பிழைப்போம் என்று நம்பும் சமுதாயத்திற்கு வேறு வழியில்லை. தொழிற்சாலைகள் எப்போது திறப்பார்கள், எப்போது கூப்பிடுவார்கள் என்று காத்துக் கொண்டு தான் இருக்க வேண்டும். ஆனால் அதுவரை குடும்பப் பொருளாதாரம் தாக்குப் பிடிக்க வேண்டுமே! குடும்பத்தில் ஒருவர் கணவனோ மனைவியோ வேலை செய்தால் பாதி வருமானத்திலாவது சமாளிக்கலாம். அல்லது உங்களது நிர்வாகமே பாதி சம்பளத்தில் மீண்டும் உங்களை வேலைக்கு அமர்த்தலாம். அதனை நீங்கள் ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும்.
நாம் சொல்ல வருவதெல்லாம் மனம் தளராதீர்கள் என்பது தான். எந்த சூழ் நிலையிலும் மனம் தளர வேண்டாம். முதலில் ஒரு வருமானத்திற்கு ஏற்பாடு செய்து கொள்ளுங்கள். சொற்ப வருமானமாக இருந்தாலும் அது உங்களுக்கு ஓரளவு நம்பிக்கையை ஏற்படுத்தும்.
வெளி நாடுகளிலிருந்து வந்து இங்கு வேலை செய்கிறார்கள். காரணம் பல காலமாக ஒரு சில வேலைகளை நாம் புறக்கணித்து விட்டோம். இனி நமது கண்ணோட்டத்தை மாற்றிக் கொள்ள வேண்டும். முதலில் வருமானம் அது தான் முக்கியம். அவன் என்ன சொல்வான் இவன் என்ன சொல்லுவான் என்று மற்றவர்களுக்காக நாம் நமது வாழ்க்கையை வீணடித்துக் கொள்ளக் கூடாது. நமது வாழ்க்கைக்கு நாம் தான் முழு பொறுப்பு ஏற்க வேண்டும்.
சென்ற முறை பொருளாதாரச் சரிவு ஏற்பட்ட போது எனது நண்பர் ஒருவரின் சம்பளம் வெகுவாகக் குறைக்கப்பட்டது. அதனை அவர் வேதனையோடு ஏற்றுக் கொண்டார். அதன் பின்னர் அவர் காப்புறுதி துறையில் தன்னை வளர்த்துக் கொண்டு அவருடைய வேலையை விட்டுவிட்டார். இப்போது அவர் பொருளாதாரத்தில் பெரிய அளவில் வளர்ந்து விட்டார்.
ஒரு தீமை வரும் போது ஒரு நன்மையும் சேர்ந்து வரும். அந்த நன்மையை நாம் தான் கண்டு பிடிக்க வேண்டும்.
இனி என்ன தான் நடக்கும்? எல்லாம் நல்லதே நடக்கும்! தேவை நம்பிக்கை மட்டும் தான்!

Friday, 29 May 2020
ஒரு மகளின் பாசம்
கொரனோ தொற்று நோயினால் எத்தனையோ பிரச்சனைகள். எத்தனையோ அசம்பாவிதங்கள், எத்தனையோ மகிழ்ச்சியான தருணங்கள் - இப்படி நடந்து கொண்டு தான் இருக்கின்றன. இன்னும் அதற்கு ஒரு முடிவில்லாமல் தொடர்ந்து கொண்டு தான் இருக்கும் என நம்பலாம்.
சமீபத்தில் நடந்த ஒரு நிகழ்வு பற்றி யோசிக்கும் போது ஒரு பள்ளி மாணவியான, 15 வயது ஜோதி குமாரி ஓர் அசாதாரண நிகழ்வினை நடத்திக் காட்டியிருக்கிறார்! உலகமே வியக்கிறது என்று சொல்லலாம்.
இந்தியாவின் பிகார் மாநிலத்தைச் சேர்ந்தவர் ஜோதி குமாரி. அவரது தந்தை ஒரு ரிக்ஷா ஓட்டுனர். அவர் பணி புரிந்த இடமோ டில்லி அருகே உள்ள ஒரு பட்டணத்தில். அப்போது அவருக்கு ஏற்பட்ட ஒரு விபத்தில் அவரால் தனது பணியினை செய்ய முடியாமல் முடங்கிப் போனார்.
அப்போது அவரைப் பார்க்க அவர்களது குடும்பத்தினர் வந்திருந்தனர். அவரைப் பார்த்து விட்டு அவர்கள் திரும்பிப் போய்விட்ட நிலையில் மகள் ஜோதி மட்டும் தந்தையைப் பார்த்துக் கொள்ள அங்கேயே தங்கி விட்டார்.
அந்த நேரத்தில் கொரனோவால் ஏற்பட்ட ஊரடங்கினால் தனது தந்தையை பீகாருக்கு கொண்டு செல்ல வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு உள்ளானார் ஜோதி குமாரி. அடுத்து ஓர் அசாதாரண முடிவெடுத்தார்.
கையில் இருந்த பணத்தைக் கொண்டு ஒரு சைக்கிளை வாங்கினார். தந்தையை சைக்கிளின் பின்னால் உட்கார வைத்தார். ஆரம்பித்தது சைக்கிள் பயணம்!
பயணம் சாதாரணமானது அல்ல. 1200 கிலோ மீட்டர் பயணம். ஏழு நாள்கள் தொடர் பயணம். அதில் இரண்டு நாள்கள் பட்டினி. உணவுக்கு வழியில்லை. ஆனாலும் முன் வைத்த காலை பின் வைக்கவில்லை அந்த இளம் வீராங்கனை! துணிச்சல் மிக்கவர். இப்போது அவரை இந்த உலகமே பாராட்டுகிறது.
என்ன தான் அதனை ஒரு வெற்றியாக நினைத்தாலும இப்படி ஒரு நிலைமை அவருக்கு ஏற்பட்டதை நினைக்கும் போது மனம் ஏற்கவில்லை.
இந்த நிகழ்விலிருந்து நாம் என்ன கற்றோம்? எந்தப் பக்கம் இருந்தும் ஆதரவு இல்லை. யாரும் உதவுக் கூடிய நிலையில் இல்லை. "நம் கையே நமக்கு உதவி!" அவ்வளவு தான்! அதனைத் தான் ஜோதி குமாரி செய்திருக்கிறார். ஒரு வேதனையிலும் ஒரு சாதனைப் படைத்திருக்கிறார்.
அவரின் எதிர்காலம் சிறக்க வாழ்த்துவோம்!

Thursday, 28 May 2020
கொரோனாவின் பாதிப்பு!
நண்பர்களே!
நீண்ட நாள்களாக எழுத வாய்ப்பில்லாமல் போய்விட்டது. மன்னிக்கவும்.
கொரோனா தொற்று நோய் எப்படி உலகையே புரட்டிப் போட்டு விட்டதோ அப்படியே எனது வாழ்க்கையையும் புரட்டிப் போட்டுவிட்டது! மார்ச் மாதம் 16ஆம் தேதிக்குப் பிறகு நானும் வீட்டிலேயே முடங்கிப் போய்விட்டேன்.பிறகு இம்மாதம் ஹரிராயா அன்று தான் வெளியே போய் வந்தேன். இப்போதும் அதே நிலைதான், வயதின் காரணமாக!
நான் ஒரு பெரும் தவறு செய்து விட்டேன். எனக்கு அலுவலகத்தில் கணினி உள்ளது. அதனால் வீட்டில் கணினி வைத்துக் கொள்ளவில்லை. இன்று தான் கணினியை வீட்டிற்குக் கொண்டு வந்தேன். அதனால் தான் உங்களைச் சந்திக்க இயலவில்லை. மன்னிக்கவும்.
நான் எப்போது வேலைக்குச் செல்ல முடியும் என்று சொல்ல முடியவிலை. காரணம் நான் தினசரி மக்களைப் பார்ப்பவன். அது சரியாக வராது என்பதால் வீட்டோடு அடங்கிக் கிடக்கிறேன்!
அறுபது ஆண்டு காலம் வேலை செய்தவன். இனியும் தொடருவேன். காத்துக் கிடக்கிறேன்.
வெகு விரைவில் கொரோனா தொற்று நோயிலிருந்து இந்த உலகம் விடுபடும். நமது நாடும் விடுபடும்.
மீண்டும் பழையபடி அனைத்தும் செயல்பட இறைவனை இறைஞ்சுவோம்!

Subscribe to:
Posts (Atom)