Thursday, 2 November 2017
பாலிவூட் உஸ்தாஸுக்குத் தடை!
மலேசிய இஸ்லாமியப் போதகர் உஸ்தாஸ் பாலிவூட் என்று அழைக்கப்படும் ஹாஸ்லிம் பகாரிம், ஜொகூர் மாநிலத்தில் இஸ்லாமியப் பிராச்சாரத்திற்குத் தடை விதிக்கப்பட்டிருக்கிறார். அதற்கான ஆணையை ஜொகூர் சுல்தான் நேற்று வெளியிட்டார்.
ஹாஸ்லிமின் பேச்சுக்கள் இனங்களுக்கிடையே கருத்து வேற்றுமைகளை உருவாக்குவதோடு மட்டும் அல்லாமல் மனக்கசப்பினையும் ஏற்படுத்தக் கூடியவை. அவருடைய மதப் பிரச்சாரங்கள் அனைத்தும் மத நல்லிணக்கத்தை தகர்க்கக்கூடியவை. அவருடைய முன்னைய பிரச்சாரங்களை வைத்துப் பார்க்கும் போது அந்தப் பிராச்சாரங்கள் மக்களுக்கு ஏற்றதாக இல்லை என சுல்தான் அறிவித்தார்.
மாநில இஸ்லாமிய இலாக்கவின் தலைவர் அப்துல் முத்தாலிப் இது பற்றி கருத்து தெரிவித்த போது ஜொகூர் மாநிலத்தில் இஸ்லாமியப் போதர்களின் பிராச்சாரங்களைக் கண்காணித்து வருகிறோம். பிரச்சாரங்கள் இனங்களுக்கிடையே அல்லது மதங்களுக்கிடையே பிரிவினை ஏற்படுத்துவதை சுல்தான் விரும்பவில்லை என்றார்.
உஸ்தாஸ் பாலிவூட்டோடு, ஜிம்பாப்வேயைச் சேர்ந்த முப்தி இஸ்மாயில் மென்க் என்பவரும் ஜொகூரில் இஸ்லாமியப் பிரச்சாரங்களுக்குத் தடைவிதிக்கப் பட்டிருக்கின்றார்.
அதே போல, சிங்கப்பூர் உள்துறை அமைச்சும் இந்த இரு இஸ்லாமியப் போதகர்களை சிங்கப்பூரில் நுழைய தடை செய்திருக்கிறது. இவர்களால் சிங்கப்புரில் முஸ்லிம் - முஸ்லிம் அல்லாதவரிடையே ஒற்றுமைக்குக் கேடு விளையும் என அது விளக்கம் அளித்திருக்கிறது.
மலேசியத் துணைப் பிரதமரும், உள்துறை அமைச்சருமான டத்தோஸ்ரீ ஸாஹிட் ஹாமிடி இந்த இரு போதகர்களும் நாட்டில் இருக்க, போதிக்க எந்தத் தடையும் இல்லை என அறிவித்திருக்கிறார். அவர்களால் எந்த ஒரு பிரச்சனையும் இல்லை. அவர்கள் நாட்டின் சட்ட திட்டங்களுக்கு உட்பட்டே செயல் படுகிறார்கள் அதனால் அவர்களைத் தடை செய்ய வேண்டும் என்பதற்கான அவசியம் இல்லை எனக் கூறுகின்றார்!
Wednesday, 1 November 2017
தீக்குளிப்பது சரியா...?
சமீபத்தில் இந்திய பாரதீய ஜனதா கட்சியின் தேசியச் செயலாளர் எச்,ராஜா நிருபர்களிடம் பேசும் போது தீக்குளிப்புச் சம்பவங்களுக்குக் காரணமானவர்கள் திராவிடக்கட்சிகள் தான் என்று குற்றம் சாட்டியிருந்தார். அது சரியா, தவறா என்று எனக்குத் தெரியவில்லை. ஆனால் அக்குற்றச்சாட்டு பொய் என்று அப்படியே ஒதுக்கி விட முடியாது.
மற்ற மாநிலங்களில் இல்லாத அளவுக்கு தமிழ் நாட்டில் மட்டும் ஏன் அதிகமான தீக்குளிப்புச் சம்பவங்கள்? ஒரு சில சம்பவங்கள் மிகவும் இக்கட்டான, கடன் தொல்லைகளால், குடும்பப் பிரச்சனைகளால் ஏற்படுகின்றன என்பது உண்மையாக இருந்தாலும் அது ஏன் தீக்குளிப்பாக இருக்க வேண்டும்?
தி.மு.க. காலத்தில் தீக்குளிப்புச் சம்பவங்கள் நிகழ்ந்திருக்கின்றன என்பது உண்மை தான். ஆனால் அ.தி.மு.க. காலத்தில் தான் மிக அதிகமாக நிகழ்ந்திருக்கின்றன. அது எப்படி?
தீக்குளிப்புக் கலாச்சாரத்தை வளர்த்தவர்கள் என்றால் அது அ.தி.மு.க. வினராகத்தான் இருக்க வேண்டும். இவர்கள் காலத்தில் தான் மிக அதிகமாகத் தீக்குளிப்புச் சம்பவங்கள் நடந்திருக்கின்றன.
ஜெயலலிதாவுக்கு சிறைத்தண்டனைக் கிடைத்தால் உடனே அவரின் தொண்டர்கள் தீக்குளிக்கிறார்கள்! ஜெயலலிதா மருத்துவமனைக்குப் போனால் உடனே தொண்டர்கள் தீக்குளிக்கிறார்கள்! கட்சிக்காக அல்ல! ஜெயலலிதாவுக்காக! ஜெயலலிதாவின் மேல் தொண்டர்களுக்கு அப்படி என்ன பாசம்? இதில் முக்கியமாகக் கவனிக்க வேண்டியது தீக்குளித்தவரின் குடும்பத்திற்கு உடனடியாக நிவாரணத் தொகையாக ஒரு இலட்சம், இரண்டு இலட்சம் என்று அள்ளிக் கொடுப்பது தான்! தீக்குளித்தால் பணம் கிடைக்கும் என்னும் ஒரு கலாச்சாரத்தை வளர்த்து விட்டவர்கள் அ.தி.மு.க. வினர்! வளர்த்து விட்டது மட்டும் அல்ல தீக்குளிக்க ஊக்கமளித்தவர்களும் அவர்கள் தான்! ஒரு ஏழைத் தொண்டன். வேலை வெட்டி இல்லாதவன். காலங்காலமாக கட்சிக்காக பாடுபட்டவன். தெண்டச் சோறு என்று பெயர் எடுத்தவன் என்ன நினைப்பான்? தீக்குளித்தால் தான் தனது குடும்பத்திற்கு ஏதாவது பண உதவி கிடைக்கும் என்று தான் நினைப்பான்! அது தான் இயல்பு! இப்படித்தான் இந்தத் தீக்குளிப்பு ஒரு தொடர்கதையாக போய்க் கொண்டிருக்கிறது. இதன் பின்னணியில் சட்டமன்ற உறுப்பினர்களின் பங்கும் இருக்கிறது என்றும் நம்பலாம். அவர்களுக்குத் தனது தொகுதியில் இருந்து ஒருவன் அம்மாவுக்காக தீக்குளித்தான் என்பது பெருமைக்குரிய விஷயம்! இவர்களே ஒரு வகையான தூண்டுதலை ஏற்படுத்தி தொண்டர்களைத் தீக்குளிக்க வைக்கிறார்கள் என்பது தான் உண்மை!
இப்போது அம்மா இல்லை. இனி தீக்குளிப்புக்கள் தொடராது என நம்பலாம். சமீபத்தில் நெல்லையில் நடந்த தீக்குளிப்பு என்பது கட்சி சார்புடையது அல்ல! கந்து வட்டியால் மனம் உடைந்து போன சம்பவம். ஆனாலும் இவர்களுக்கு உதாரணம் திராவிடக் கட்சிகள் தான்.
இந்த நேரத்தில் ஒன்றை நினைவு கூற வேண்டும். எச் ராஜா மிகவும் சாதாரணமாக இந்தச் சம்பவங்களுக்கெல்லாம் பெரியார் ஈ.வே.ரா. தான் காரணம் என்று சொல்லி விட்டார். ஒன்றை அவர் சொல்லத் துணியவில்லை. ஜெயலலிதா காலத்தில் தான் அதிகமான தீக்குளிப்பு சம்பவங்கள் நடந்தன! அவர் ஒரு பிராமணப் பெண் என்பதால் கண்முன்னே நடந்தவைகளை விட்டுவிட்டு பெரியார் காலத்திற்கு அவர் போய்விட்டார். யார் செய்தாலும் தவறு தவறு தான் என்பதை ராஜா உணர வேண்டும்!
உணவகங்கள் என்றால் அலட்சியமா..!
இன்றைய நிலையில் நமது இந்திய உணவகங்கள் எதிர் நோக்குகின்ற பிரச்சனைகள் நமக்குத் தெரியாமல் இல்லை. குறிப்பாக உணவகங்கள் ஆள் பற்றாக்குறையை எதிர்நோக்குகின்றன. உள்ளூர் மக்கள் உணவுகங்களில் வேலை செய்வதை விரும்புவதில்லை. விரும்பக் கூடாது என்று நினைத்தே பல உணவகங்கள் செயல் படுகின்றன! தமிழ் நாட்டுக்காரன் இளிச்சவாயன் - சம்பளம் ஏதும் கொடுக்காமலேயே - வேலை வாங்கலாம் என்று இன்று பல உணவக "முதாலாளிகள்" நினைக்கின்றனர்! உண்மையில் அவர்கள் உணவகத் தொழிலைச் சேர்ந்தவர்கள் அல்ல. பணம் பறிக்கும் பறக்கும் கும்பல்கள்!
வேலைச் செய்யும் தொழிலாளர்களுக்கும் போதுமான சம்பளம் கொடுப்பதில்லை. முக்கிக்கொண்டும், முனகிக்கொண்டும் வேலை செய்பவனிடம் தரமான வேலை வாங்க முடியாது. இப்படித்தான் பல உணவகங்கள் செயல்படுகின்றன. இது போன்று செயல்படுகின்ற உணவகங்கள் தான் சுகாதார இலாக்கவினால் அடிக்கடி தொந்திரவுக்கு உள்ளாகின்றன. இரண்டு வாரம் மூன்று வாரங்கள் சுத்தமில்லை என்று இழுத்து மூடப்படுகின்றன. உணவகங்கள் மூடப்பட்டால் நமக்கும் வருத்தமே. காரணம் ஒரு தொழிலில் ஈடுபட்டிருக்கும் ஒருவரின் வருமானம் பாதிக்கப்படுகின்றது. ஆனால் உணவகங்கள் சுத்தத்திற்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும். அதில் எந்த வித மாற்றுக் கருத்தும் இல்லை. பணத்தையும் கொடுத்து, நோயையும் வாங்கிக்கொள்ள யாரும் தயாராக இல்லை.
ஏன் இவ்வளவு பீடிகை? சமீபத்தில் ஓர் இந்திய உணவகம், சுகாதார அதிகாரிகளால் மூன்று வாரங்களுக்கு இழுத்து மூடப்பட்டது. எத்தனையோ ஆண்டுகளாக நடைபெறும் ஓர் உணவகம் அது. இத்தனைக்கும் சுகாதார அதிகாரிகளும் சாப்பிடுகின்ற உணவகம்! அதனாலோ என்னவோ முதாலாளியார் ரொம்பவும் நம்பிக்கையுடன் இருந்துவிட்டார்! ஆனால் மற்றவர்களுக்கு என்ன வந்தது? ஒருவர் வாட்ஸ்ஸப்பில் படங்களைப் போட்டு நாறடித்து விட்டார்! காப்பியில் பூச்சி ஒன்று கிடந்ததை படம் பிடித்து அத்தோடு சமயலறை அசிங்கங்களையும் வெளியுலக்குக் கொண்டு வந்து விட்டார்! வாட்ஸ்ஸப்பில் வந்த பிறகு சுகாதாரத் துறை நடவடிக்கை எடுக்க வேண்டிய கட்டாயம்! அதனால் தான் உணவகத்திற்கு மூன்று வார விடுமுறை!
சமீபத்தில் நான் குளுவாங் நகர் சென்றிருந்த போது அங்கிருந்த ஒர் உணவகத்தைப் பார்த்த போது - இதெல்லாம் நமது தரத்திற்கு ஏற்றதல்ல - என்னும் எண்ணம் தான் வந்தது. சுத்தம் என்பது சாப்பிடுகின்ற இடம் மட்டும் அல்ல. சமயலறை, கழிவறை அனைத்தும் சுத்தமாகத்தான் இருக்க வேண்டும். இதிலெல்லாம் நாம் எந்த இணக்கப்போக்கையும் கொண்டிருக்க முடியாது.
"எங்களுக்கு ஆள் பற்றாக்குறை, எங்களையெல்லாம் சுத்தமாக வைத்துக் கொள்ள சொல்வது சரியல்ல" என்று சொல்லிக் கொண்டிருக்க முடியாது! ஆள் பற்றாக்குறை என்பதெல்லாம் சும்மா மக்களை ஏமாற்றும் வேலை! சம்பளம் ஒழுங்காகக் கொடுத்தால் உள்நாட்டுக்காரன் கூட வேலை செய்வான்.
நமக்குப் பிடிக்கிறதோ, இல்லையோ உணவகத்திற்குச் சுத்தமே முதலிடம். சுத்தமில்லாத உண்வகங்கள் நிரந்தரமாக இழுத்து மூடப்பட வேண்டும் என்பதே நமது அவா!

Subscribe to:
Posts (Atom)