Sunday, 23 October 2016
கருணை வேண்டாம்! கொள்கையே வேண்டும்!
ஏய்மஸ்ட் பல்கலைக்கழகத்தில், பன்னாட்டுத் தமிழாசிரியர்களின் மாநாட்டில் ம.இ.கா.தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் சுப்பிரமணியம் நல்லதொரு கருத்தைச் சொன்னார்.
பிரதமர் நஜிப் இந்த சமுதாயத்திற்குக் கருணைக் காட்ட வேண்டாம். கருணை என்னும் நிலை மாறி அது அரசின் கொள்கையாக மாற வேண்டும்.
டாக்டர் சுப்பிரமணியம் பிரதமருக்கு விடுத்த இந்த வேண்டுடுகோளை நாமும் இரு கரம் கூப்பி வரவேற்கிறோம்.
தமிழ்ப்பள்ளிகளுக்கு வழங்கப்படும் நிதி ஒதுக்கீடுகள் பிரதமரின் கருணை அடிப்படையில் இல்லாமல் அது அரசாங்கக் கொள்கையாகப் பிரகடனப்படுத்தப்பட வேண்டும் என்பதே அவரின் வேண்டுகோள்.
மலேசியாவில் தமிழ்க்கல்வி தோன்றி இந்த அக்டோபர் மாதத்தோடு 200 ஆண்டுகள் ஆகின்றன. இனி நமக்குத் தேவை எல்லாம் தமிழ்க்கல்வியின் வளர்ச்சி. அந்த வளர்ச்சி என்பது சரியான முறையில் அமைய வேண்டும். வெறும் கருணை அடிப்படையில் அல்ல! அது அரசாங்கக் கொள்கையாக அமைய வேண்டும்.
நாட்டில் 524 தமிழ்ப்பள்ளிகள் இருப்பதாகக் கூறப்படுகின்றது. பிரதமர் நஜிப் பல கோடிகளை இந்தப் பள்ளிகளின் மேம்பாட்டுக்காகக் கொடுத்துள்ளார். கடந்த வெள்ளிகிழமை வெளியான பட்ஜெட்டில் ஐந்து கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அத்தோடு சேர்த்து தமிழ்ப்பள்ளிகளுக்காக 79 கோடி வெள்ளீயை பிரதமர் நஜிப் இதுவரைக் கொடுத்துள்ளார்.
இத்தனை கோடிகள் கொடுத்தும் தமிழ்ப்பள்ளிகளின் நிலை மாறவில்லை என்றும் ஒரு குற்றச்சாட்டும் உள்ளது. இந்த நிதி ஒதுக்கீடுகள் எந்த எந்தப் பள்ளிகளுக்குக் கொடுக்கப்பட்டன என்னும் விபரங்கள் யாரிடமும் இல்லை! அமைச்சரவையில் இந்தியர்களைப் பிரதிநிதிக்கும் ஒரே தலைவர் என்னும் முறையில், டாக்டர் சுப்பிரமணியம் அவர்கள் இந்த நிதி ஒதுக்கீடுகள் அனைத்தும் முறையாக எல்லாப் பள்ளிகளுக்கும் போய்ச் சேருவதை உறுதி செய்ய வேண்டும். அல்லது தேவையான பள்ளிகளுக்குப் பயன்படுத்தப்படுவதைக் கண்காணிக்க வேண்டும்.
டத்தோஸ்ரீ டாக்டர் சுப்பிரமணியம் சொல்லுவது போல இது வெறும் பிரதமரின் இந்தியச் சமூகத்தின் மேல் உள்ள அனுதாபமாகவோ அல்லது கருணையாகவோ இருக்கக் கூடாது! அது எங்களது உரிமையாக இருக்க வேண்டும். சட்டமாக இருக்க வேண்டும். அது அரசாங்கக் கொள்கையாக இருக்க வேண்டும்.
ஒவ்வொரு முறையும் கெஞ்சுவதும், கொஞ்சுவதுனாக இருக்கக் கூடாது. அது அரசாங்கத்தின் சட்டமாக அமைய வேண்டும். ஒரு நாட்டின் குடிமக்கள், மூன்றாவது பெரிய இனம், எல்லாலாக் காலத்திலும் பிச்சை எடுக்கும் சமூகமாக அரசாங்கம் மாற்றத் துணியக் கூடாது! இந்தியர்களும் கௌரவமாக வாழும் சூழலை ஏற்படுத்த வேண்டும்.
இந்தியர்கள் ரௌடிகள், குண்டர்கள் என்னும் ஒரு நிலையே முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதிரின் காலத்தில் மிகச் சிறப்பாக அரங்கேற்றப்பட்டது! அதுவும் ம.இ.கா.வின் உதவியோடு! அனைத்து உரிமைகளையும் நாம் இழந்து விட்டோம்! இழந்த உரிமைகளை இனி நாம் கேட்கக் கூடிய நிலையில் இல்லை! உரிமையாளர்கள் உடைந்து போனார்கள்! ஒன்பதாகப் பிரிந்து போனார்கள்! ஒன்பாதாகிப் போனார்கள்! இனி எந்த உரிமைகளையும் மீண்டும் பெற முடியும் என்னும் நம்பிக்கையும் குறைந்து போய்விட்டது!
இந்த நிலையில் தான் டாக்டர் சுப்பிரமணியம் அவர்கள் "எங்களுக்குக் கருணைக் காட்ட வேண்டாம்; அதனை சட்டமாக்கி உரிமையாகக் கொடுங்கள்" என்கிறார். இப்படிப் பேசியதற்காகவே நாம் அவரைப் பராட்ட வண்டும்!
பொதுவாகவே அரசாங்கத்திடம் எந்தப் பிரச்சனையைப் பற்றியும் ம.இ.கா.வினர் வாய்த் திறப்பதில்லை! இப்போது டாக்டர் அவர்கள் வாய்த் திறந்து ஒரு கோரிக்கையாக அவர் விட்டிருப்பது மிகவும் பாராட்டுதலுக்குறியது!
இப்போதாவது இப்படி ஒரு கோரிக்கை விட்டிருக்கிறாரே நாம் அவரைப் பாராட்டுகிறோம்!
இப்பவும் அவர் வாய் திறவாதிருந்தால் வேகு விரைவில் வெளி நாட்டுச் சக்திகள் நம்மைப் பின்னுக்குத் தள்ளிவிடும்! அரசாங்கத்தின் ஒப்புதலுடனே அது நடக்கும்!
இனி டாக்டர் அவர்கள் இந்தியர்களின் ஒவ்வொரு பிரச்சனையையும் அரசாங்கத்தின் கவனத்திற்குக் கொண்டு செல்ல வேண்டும் என்று கேட்டுக் கொள்ளுகிறோம். உங்களிடையே ஒற்றுமை இல்லையென்றால் சந்தடிச்சாக்கில் இருக்கின்ற அனைத்தையும் இழந்து விடுவோம்!
நீங்கள் நமது பிரதமரிடம் கேட்டுக் கொண்டதைப் போல நமக்குக் கருணை வேண்டாம்! அனைத்தும் சட்டமாகப்பட்டு உரிமையாக வேண்டும்! என்பதை நாங்களும் உங்களுடன் சேர்ந்து ஆதரிக்கிறோம்!
Friday, 21 October 2016
காலை வணக்கம்..!
காலை வணக்கம்! Good Morning! Selamat Pagi!
காலை நேரத்தில் "காலை வணக்கம்!" என்று சொல்லும் போது மனதில் மகிழ்ச்சி ஏற்படுவது இயற்கையே! இதை சொல்லுவதற்குக் கூட சிலரால் முடியாது! பதவியில் உள்ளவன் கீழே உள்ளவனைப் பார்த்து அப்படி சொல்லுவதில்லை! அது அவனுக்குக் கௌரவக் குறைச்சல்! இருக்கட்டும்!
ஆனாலும் வெள்ளைக்காரனுக்கு அது ஒரு பிரச்சனை அல்ல. அவன் எவ்வளவு தான் நம் எதிரியாக இருந்தாலும் அவன் வணக்கம் சொல்லத் தவறுவதில்லை. அது அவனது ரத்தத்தில் ஊறிப்போன ஒன்று. அதனை அவனால் மாற்றிக் கொள்ள முடியாது!
நம்முடைய நிலை வேறு. எந்த நல்ல பழக்கங்களையும் நாம் வீட்டில் சொல்லிக் கொடுப்பதில்லை! எங்கு நாம் தவறு இழைத்தாலும் "படி! படி!" என்று குழந்தைகளை வற்புறுத்தி படிக்கவைப்பதில் மட்டும் நாம் தவறு இழைப்பதில்லை!
இளைஞர் ஒருவரைத் தெரியும். காலை நேரத்தில் உணவகத்திற்குள் சுறுசுறுப்பாக நுழைவார். பார்ப்பவர்களையெல்லாம் "காலை வணக்கம்! காலை வணக்கம்! என்பார். மலாய்க்காரர்களைப் பார்த்தால் "செலமாட் பகி!" என்பார். அதுவரை எந்த சலனுமும் இல்லாமல் இருந்தவர்களைத் தனது காலை வணக்கம் மூலம் ஒரு சுறுசுறுப்பை உண்டாக்கிவிடுவார்!
இது போன்ற காலை வேளைகளில் "வணக்கம்" என்னும் போது உடலில் ஒரு சுறுசுறுப்பும், புத்துணர்ச்சியும் ஏற்படுவது இயற்கை. . காலையில் புத்துணர்சி ஏற்படும் போது அது அன்று பூராவும் நமது உடலை உற்சாகமாக வைத்திருக்கும்!
காலை வேளையில் மனம் திறந்து வணக்கம் என்று சொல்லுங்கள். அன்றைய தினம் உங்களைப் பார்த்து அனைத்தும் வணக்கம் என்று சொல்லுவது போல் இருக்கும்!
அந்த நண்பர் நம்மைப் பார்த்து வணக்கம் என்று சொன்னாலும் அன்றைய தினத்தை அன்று பூராவும் அவர் - தன்னை உற்சாகமாக வைத்துக் கொள்ளுகிறார்! கேட்பவர்களை விட சொல்லுபவர் இன்னும் தன்னை உற்சாசாகப் படுத்திக் கொள்ளுகிறார். அது தான் உண்மை.
காலைப் பொழுதை உற்சாகமாக ஆரம்பியுங்கள்! குழந்தைகளிடம் வணக்கம் சொல்லுங்கள்! மனைவியிடன் வணக்கம் சொல்லுங்கள்! நண்பர்களிடம் வணக்கம் சொல்லுங்கள்!
அன்றைய நாளை வணக்கம் சொல்லி உற்சாகமான நாளாக ஆக்கிக்கொள்ளுங்கள்! அனைத்தும் நமது கையிலே!
வணக்கம் தலைவா!
பிச்சை எடுத்தாவது....!
குழந்தைப் பிறந்ததும் ஒவ்வொரு குடும்பத்திலும் மகிழ்ச்சியோ மகிழ்ச்சி! அதைவிட வேறு மகிழ்ச்சி எதனோடும் ஒப்பிட முடியாது! குடும்பத்திற்குக் குதூகலத்தைக் கொண்டு வருவது குழந்தைகள்!
குழந்தைப் பிறந்ததும் நமது மகிழ்ச்சியை எப்படி வெளிபடுத்துகிறோம் என்பதை நாம் பெரும்பாலும் கவனிப்பதில்லை. அது தான் முக்கியம்.
ஒரு குழந்தையின் வளர்ச்சியும், வீழ்ச்சியும் நீங்கள் உதிர்க்கும் உங்கள் சொற்களில் அடங்கியிருக்கிறது என்பதை மறந்துவிடாதீர்கள்.
தமிழகத்தின் தமிழ் அறிஞர், தமிழ் கடல் நெல்லை கண்ணன் அவர்கள் தனது சொற்பொழிவின் போது உதிர்த்த ஒரு கருத்தை உங்களோடு பகிர்ந்து கொள்ளுகிறேன். தன்னை உயர்ந்தவனாகக் காட்டிக் கொள்ளுபவனும் தன்னைத் தாழ்ந்தவனாகக் காட்டிக் கொள்ளுபவனும் எப்படிப் பட்ட சிந்தனை ஓட்டத்தைக் கொண்டிருக்கிறான் என்பதற்காக இதனைச் சொல்லுகிறேன்
குடும்பத்தில் ஒரு ஆண் குழந்தைப் பிறந்ததும் ஒரு பிராமணன் - அவன் சமையல் வேலை செய்யும் ஏழைப் பிராமணனாக இருந்தாலும் சரி - அவன் வாயிலிருந்து வரும் முதல் வார்த்தை "நம்ம வீட்டுலே ஒரு கலக்டர் பிறந்துட்டான்'டி!" என்று மனைவியைப் பார்த்து சொல்லுவனாம்! அதுவே பெண் பிள்ளையாக இருந்தால் "நம்ம வீட்டுலே ஒரு டாக்டர் பிறந்துட்டா" என்று மகிழ்ச்சியடைவானாம்! அதுவே சராசரி தாழ்ந்த சிந்தனை உடையவன்: 'ஆம்பளப்புள்ள! பயப்படாத! பிச்சை எடுத்தாவது உனக்குக் கஞ்சி ஊத்துவான்!"
நாம் இங்கு பயன் படுத்தும் வார்த்தைகளைச் சாதரணமாக எடுத்துக்கொள்ள முடியாது. நம்மை அறியாமல் நமது அறியாமையால் உதிர்க்கப்படும் வார்த்தைகள் தான்.ஒருவன் தாழ்வதற்கும் உயர்வதற்கும் நமது வார்த்தைகள் தான் காரணம். மனதில் உள்ளது அப்படியே வெளியாகிறது!
நாம் எவ்வளவு தான் தாழ்ந்த நிலையில் இருந்தாலும், நாம் எவ்வளவு தான் ஏழையாய் இருந்தாலும், , சாப்பட்டுக்கே வழியில்லாமல் இருந்தாலும் நமது சிந்தனை மட்டும் தாழ்ந்த நிலையில் இருக்கக் கூடாது என்பது மிக மிக முக்கியம். எல்லாக் காலத்திலும் நமது எண்ணங்கள் உயர்வாகவே இருக்க வேண்டும்.
பாரதி என்ன பணத்திலே மிதந்தவனா? ஒரு வேளை சாப்பாட்டுக்கே வழியில்லை! . ஆனாலும் "எத்தனை கோடி இன்பம் வைத்தாய் இறைவா!" என்று பாடியவன். அப்படி எண்ணங்கள் உயர்வாக இருக்க வேண்டும்.
குழந்தைகள் தானே நாம் சொல்லுவது விளங்கவாப் போகிறது என்று நினைப்பது தவறு. குழந்தைகளுக்கு நீங்கள் என்ன சொல்லுகிறீர்கள் என்பது தெரியும்; புரியும்! பேசத்தான் தெரியாது! வயிற்றிலிருக்கும் குழந்தைக்கே நாம் வெளியே பேசிக் கொள்ளுவது தெரியும் போது, வெளியே இருக்கும் குழந்தைக்குப் புரியாதா, என்ன?
மேலும் இது போன்ற வார்த்தைதைகளை நாம் ஏன் பேச வேண்டும்? நமது சிந்தனைகளில் கூட இது போன்ற எதிர்மறை வார்த்தைகளை நமது சிந்தனைக்கு வருவதை நாம் தடை செய்ய வேண்டும்!
பிச்சை எடுத்தாவது என்று ஏன் சொல்ல வேண்டும்? நாம் என்ன பரம்பரைப் பிச்சைக்காரர்களா? பிச்சை எடுப்பவர்கள் கூட அப்படிச் சொல்ல மாட்டார்கள். ஆனால் சராசரி தமிழன் அதனைத் தாராளமாகப் பயன்படுத்துகிறான்!
நமது தமிழ்ப்படங்கள் சராசரி தமிழனை மிகவும் காயப்படுத்துகின்றன. சினிமா தயாரிப்பாளன் தான் வேற்று மொழிக்காரன். வசனம் எழுதுபவன் தமிழ் அறிந்தவன் தானே? அறிவுள்ளவன் தானே? நேர்மறையான வார்த்தைதைகளைப் பயன்படுத்தக் கூடாது என்பதைக் கூட அறியாதவனா அவன்?
நாம் மனது அளவிலும் அந்தப் பிச்சைக்காரத்தனத்தை வளர்த்துக் கொள்ளக் கூடாது. அதே சமயத்தில் குழந்தைகளுக்கு அதனை அடிக்கடி ஞபாகப்படுத்த்க் கூடாது.
குழந்தைகளுக்கு நல்ல செய்திகளைக் கொடுங்கள். நல்லதை மட்டும் பேசுங்கள். டாக்டராக வரவேண்டும், வழக்கறிஞராக வரவேண்டும், பிரதமராக வரவேண்டும், முதலைமைச்சரகா வரவேண்டும், அரச அதிகாரியாக வரவேண்டும் என்று சிறு குழந்தையிலிருந்தே சொல்லிச் சொல்லி ஊக்கமூட்டுங்கள். அப்படி ஒன்றுமே தெரியவில்லை என்றால் பெரிய உத்தியோகம் பார்க்க வேண்டும் என்று சொல்லி வளருங்கள்! எதைச் சொன்னாலும் அது உயரிய குறிக்கோளாக இருக்க வேண்டும்.
அது சரி! இப்படியெல்லாம் சொல்லி வளர்த்தால் அவன் அப்படியே ஆகிவிடுவானாக்கும் என்று கேட்பவர்கள் இருக்கத்தான் செய்வார்கள். ஆமாம், அந்தப் பிராமணர் அப்படி சொல்லுகிறாரே அதற்காக பிரமாணர்கள் எல்லாம் கலக்டர் ஆகிவிட்டார்களா, இல்லை! அப்படி ஒரு எண்ணத்தை உருவாக்கக் காரணம் அவனது எண்ணங்கள் கீழ் நோக்கிப் போகக் கூடாது என்பது தான் அதன் நோக்கம். இது இல்லையென்றால் வேறொன்று, அதன் மூலம் உயர்வது.
ஆனால் "பிச்சை எடுத்தாவது!" என்னும் எண்ணத்தை வளர்த்தால் என்ன ஆகும்? அவனைச் சுற்றி கீழ்த்தட்டு மக்களாகவே இருப்பர். கீழே போகப்போக மக்கள் இன்னும் கீழ்நிநிலையை நோக்கியே பயணம் செய்வர்! அவன் தேர்ந்தெடுக்கும் வேலையும் கீழான வேலையாகவே இருக்கும். அவனைச் சுற்றி குடிகாரக் கூட்டமாகவே இருக்கும். அவன் எல்லக் காலங்களிலும் வறுமைக் கோட்டிலேயே நடந்து கொண்டிருப்பான்.
பாருங்கள்! ஒரு சொல் எப்படி ஒரு குழந்தையை மாற்றிவிடுகிறது! கபாலி படத்தை இயக்கிய பா. ரஞ்சித் அவர்களின் தாயாரிடம் ஒரு கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு அவர் சொன்ன பதில்: என் பையன் பெரிய ஆளாக வருவான் என்று எனக்கு அப்பவே தெரியும்! ஆமாம்! அவர்கள் பிள்ளைகள் எல்லாம் நன்கு படித்து நல்ல நிலையில் இருக்கிறார்கள். அவர் ஒரு ஏழைத் தாய். ஆனாலும் அது எப்படி அவரால் முடிந்தது? அவர் குழந்தைகளுக்குக் கொடுத்த ஒரே செய்தி: நல்லா படித்து நல்லா வா! அது தான் அவர் கொடுத்த செய்தி.
அது போதுமே! அப்படிச் சொன்னாலே போதும்! வேறு ஒன்றும் வேண்டாம்! தொடர்ந்து மந்திரம் போல் பிள்ளைகளின் காதில் ஓதிக் கொண்டே இருங்கள்! நன்கு படித்து, நல்லா வா!
உங்கள் குழந்தைகள் உன்னத நிலையை அடைய வாழ்த்துகள்!

Subscribe to:
Posts (Atom)