எனக்குக் கிடைப்பதோ ஒரு நாளைக்குப் . பத்து காசு. அதில் ஐந்து காசு கரிபாப், ஐந்து காசு ஐஸ் தண்ணீர். அவ்வளவு தான். வீடு போய் சேரும்வரை அது தாங்கும். அப்போது சாப்பிட்ட அந்த கரிபாப் இப்போது ஒரு வெள்ளி விற்கிறது! விலை தான் கூடுதலே தவிர சுவையில் ஏமாற்றம்.
பள்ளியில் விற்ற பின்னர் சிரம்பான் பேருந்து நிலையத்தில் "கரிபாப், சத்து மாக்கான் டுவா மௌ!" என்று முழங்கிக் கொண்டிருப்பார்! எப்போதுமே அவருக்கு நல்ல வியாபாரம் இருக்கும்.
ஒரு காலத்தில் நம் தமிழர்கள் செய்து வந்த வியாபாரங்கள் பின்னர் சீனர்களின் கைகளுக்குக் கைமாறியது எப்படி என்பது புரியாத புதிர். இப்போது மெல்ல மெல்ல நம்மவர்களும் மீண்டும் நமது வியாபாரங்களைப் பழைய நிலைக்குக் கொண்டு வருகின்றனர் என்பது நல்ல செய்தி. எல்லாகாலங்களிலும் வாங்கிச் சாப்பிடும் சமுகமாகவே இருப்பது போல் விற்கும் சமூகமாகவும் மாறும் காலம் தொடங்கிவிட்டதே என்பதில் மகிழ்ச்சி.
அறிவோம்: வலுவற்ற ஒரு சமூகம் அல்லது ஏழ்மையில் உழலும் ஒரு சமூகம் அடுத்த வலுவான நிலைக்குத் தன்னை உயர்த்திக் கொள்ள ஒரே வழி கல்வி மட்டும் தான். ஏழ்மையிலிருந்து விடுபட கல்வியே சிறந்த ஆயுதம். கல்வி எப்போதும் நம்முடன் இருக்கும். மற்றவை எதுவும் நிரந்தரமில்லை.
No comments:
Post a Comment