பாட்டி வைத்தியம் என்பது நம் அனைவருக்கும் தெரிந்தது தான். ஆனால் என்ன செய்ய? இப்போது படித்தவர்கள் அதிகமாகி விட்டதால் அதன் மௌசு, இளசுகளிடையே குறைந்துவிட்டது. ஆனாலும் இன்னும் பாட்டி வைத்தியம் உயிர்ப்புடன் தான் இயங்கிக் கொண்டிருக்கிறது. மங்கிப்போய் விடவில்லை என்பது ஆறுதல்.
இது என் தாயார் சொன்னது. நான் பதினெட்டு மாதக் குழந்தையாக இருந்த போது ஏற்பட்ட ஒரு வியாதி. உடல் முற்றிலுமாக செயல் இழந்துவிட்டது. படுத்த படுக்கை தான். போர்ட்டிக்சன். மருத்துவனைக்குக் கொண்டு சென்ற போது டாக்டர் "ஊகூம், இவன்பிழைக்க மாட்டான்" என்று கைவிரித்து விட்டாராம்.
அப்போது பக்கத்து வீட்டு பாட்டி ஒருவர் காட்டுக்குச் சென்று அங்கிருந்து இலைதழைகளைக் கொண்டுவந்து அவைகளைக் கொதித்தண்ணீரில் அவித்து பின்னர் அந்தத் தண்ணீரால் உடல் முழுவதும் நீவி விட்டாராம். பல மாதங்கள் படுத்தே கிடந்தே நான் ஒரு சில மணி நேரங்களில் எழுந்து உட்கார்ந்து விட்டேனாம்! என் தாயார் சொன்ன இலைதழைகளில் கத்தாழை (Aloe Vera) யும் ஒன்று. இன்றும் நாம் இந்தக் கற்றாழையை ஏதோ ஒரு வகையில் பயன்படுத்திக் கொண்டு தான் இருக்கிறோம்.
சரி அதென்ன பாட்டி வைத்தியம்? இது தமிழரிடையே பாரம்பரியமாக வருவது. உலகின் மூத்த குடி என்னும் பெருமை உள்ள மக்களான நமக்கு எந்தவொரு மருத்துவமும் அறியாமலா வாழ்ந்து வந்தோம்? அதன் பயன்பாட்டைக் குறைத்துக் கொண்டோம் என்று வேண்டுமானால் சொல்லலாம்.
அறிவோம்: வாழ்க்கை என்றால் ஆயிரம் இருக்கும் - வாசல் தோறும் வேதனை இருக்கும் - வந்த துன்பம் எதுவென்றாலும் வாடி நின்றால் ஓடுவதில்லை - எதையும் தாங்கும் இதயம் இருந்தால் இறுதி வரைக்கும் அமைதி இருக்கும் - ஏழை மனதை மாளிகை ஆக்கி இரவும் பகலும் காவியம் பாடு - நாளைப் பொழுதை இறைவனுக்கு அளித்து - நடக்கும் வாழ்வில் அமைதியைத் தேடு - உனக்கும் கீழே உள்ளவர் கோடி - நினைத்துப் பார்த்து நிம்மதி நாடு
கவிஞர் கண்ணதான்
No comments:
Post a Comment