முன்பு காலத்தில் முடிவெட்ட ஐம்பது காசு என்பது என்ன அதிசயமா என்று கேள்வி எழலாம்.
அப்படி எல்லாம் சொல்ல இயலாது. நான் முடி வெட்டிக்கொள்ள ஆரம்பித்த காலத்தில் ஐம்பது காசுக்கு வெட்டியதாக ஞாபகமில்லை. நான் வெட்டுவது பெரும்பாலும் முடிவெட்டும் நிலையங்களாக இருந்ததினால் அங்கே ஐம்பது காசுக்கு வேலையில்லை. ஒரு வேளை குழந்தைகளுக்கு இருந்திருக்கலாம்.
ஆனால் எங்கள் பள்ளியில் ஒரு திட்டத்தைக் கொண்டு வந்தார்கள். பள்ளியிலேயே ஒருவர் கடை திறந்தார். அங்கே முடி வெட்டினால் ஐம்பது காசு திட்டத்தைக் கொண்டு வந்தார். அது மாணவர்களுக்கு வரப்பிரசாதமாகவே அமைந்தது. அவரது கடையில் எப்போதும் கூட்டமாகவே இருக்கும். பள்ளி மாணவர்களுக்கு முடி வெட்டுவது ஒரே மாதிரி தான். வித விதமாக இருக்க வாய்ப்பில்லை.
ஒருவர் தான் முடி வெட்டுவார். இப்போது நினைத்துப் பார்க்கும் போது வியப்பைத் தருகிறது. அந்தப் பெரியவர் முயற்சி எடுத்து பள்ளியோடு பேச்சுவார்த்தை நடத்தி கடை போட்டாரே அதனைப் பாராட்டத்தான் வேண்டும். இப்போது அது போன்ற முயற்சிகள் வங்காள தேசிகளிடம் கைமாறி விட்டதோ என்று தோன்றுகிறது. வேலையே தெரியாமல் தொழில் செய்கிறார்கள்! கேட்டால் அது "அவர்கள் சாமர்த்தியம்" என்கிறார்கள்!
அறிவோம்: பொதுவாக எண்களை, அதாவது 0 1 2 3 4 5 6 7 8 9 என்னும் எண்களை அரபு எண்கள் என்கிறோம். அது எங்கள் நாட்டு எண்கள் இல்லை என்று அரபு நாடுகள் சொல்லிவிட்டன. அது இந்து நாட்டிலிருந்து வந்த எண்கள் என்று சொல்கின்றன. இந்து நாடு என்றால் இந்தியா. அது தமிழர்கள் பயன்படுத்திய எண்கள் என்று இன்றுவரை தமிழ் நாடு அரசு வெளிப்படையாகச் சொல்லவில்லை. திராவிடர்கள் தமிழ் நாட்டை ஆண்டால் இது தான் நடக்கும்!
No comments:
Post a Comment