கட்டம் போட்ட சட்டை கதாநாயகர்கள் என்று தாராளமாகச் சொல்லலாம். அந்த அளவுக்கு இந்த கட்டம் போட்ட சட்டைகள் இந்திய இளைஞர்களிடையே ஆக்கிரமித்துக் கொண்டிருந்தன.
அது ஏதோ ஒரு காலகட்டம். ஆண்டு ஞாபகத்திற்கு வரவில்லை. தமிழ் திரைப்படம் ஒன்றில் கதாநாயகனா அல்லது வில்லனா அதுவும் ஞாபக்த்தில் இல்லை. ஏதோ ஒரு படத்தில் கட்டம் போட்ட சட்டையைப் போட்டுக் கொண்டு அமர்க்களமாக வருவார் ஒரு நடிகர். அந்த நடிகர் யார் என்று என்னால் சொல்ல முடியவில்லை. அந்த அளவுக்கு அந்த ஸ்டைல் இளைஞரிடைய தீவிரமாக பற்றிக்கொண்டது! நான் கூட சிகப்பு நிற கட்டம் போட்ட சட்டை வைத்திருந்தாக ஞாபகம்.
வீட்டில் நிலைமை எப்படியிருந்தாலும் நாட்டில் ஏற்படும் மாற்றங்கள் எல்லாத் தரப்பினரையும் பாதிக்கத்தான் செய்யும். யாரும் விதிவிலக்கல்ல. அது தோட்டம் பட்டணம் என்று பார்ப்பதில்லை.
அறிவோம்: பி.கே.ஆர். கட்சியின் உதவித் தலைவராக தேர்ந்தெடுக்க்ப்பட்ட டத்தோஸ்ரீ ரமணன் வாழ்த்த நினைத்தாலும் இவரும் மற்றவர்களைப் போல "பேசாமடந்தை" தானே? வாய் திறக்க முடியாதவர் போற்றி! போற்றி!
No comments:
Post a Comment