இன்று குழந்தைகளின் சித்திரவதை என்பது மிகவும் பரவலாக நடைபெற்றுக் கொண்டு தான் இருக்கிறது. என்ன தான் சட்டம் போட்டாலும் எந்தச் சட்டமும் சித்திரவதைகளை நிறுத்தியதாகத் தெரியவில்லை.
சில குழந்தைகளுக்கு அப்பன்மார்களே எமனாக இருக்கிறார்கள். மனைவியிடம் சண்டை என்றால் குழந்தைகளுக்குத் தான் முதலில் ஆபத்து. குழந்தைகளை வைத்துக்கொண்டு அம்மாமார்களைப் பயமுறுத்துவது என்பது கணவர்களால் கடைப்பிடிக்கப்படும் மிக எளிதான வழி.
பாருங்கள் ஒரு தகப்பனை. தகப்பனும் தாயும் பிரிந்து விட்டார்கள். ஆனால்அவனோ அந்தப் பெண் குழந்தையைத் தாயிடம் ஒப்படைக்காமல் தானே வளர்த்துக்கொள்ள அவனுடன் கொண்டு வந்துவிட்டான். வளர்க்க வேண்டும் என்பது அவனது நோக்கமல்ல. அந்தக் குழந்தையை வைத்துக்கொண்டு அந்தத் தாயைப் பழி வாங்க வேண்டும் என்பது தான் அவனது நோக்கம்.
என்ன செய்தான்? குழந்தை குடிக்கும் பாலில் பெப்சிகோலாவைக் கலக்கிக் குடிக்கக் கொடுத்தான். குழந்தையை அருகில் வைத்துக் கொண்டு சிகிரட்டைப் புகைய விட்டான். குழந்தையின் கழுத்தை அமுக்கித் திணர வைத்தான்.அழும் குழந்தையின் வாயை கைகளால் அடைத்து மூச்சுத்திணர வைத்தான். அந்தச் சிறு குழந்தை அப்பன் கையாலையே எல்லாச் சித்திரவதைகளையும் அனுபவித்தது.
குழந்தை படும் துன்பத்தை அவன் விடியோ படம் எடுத்து அவனது மனைவிக்கு அனுப்பி வைத்தான். தாயால் அதற்கு மேல் பொறுக்க முடியவில்லை.
தாய் சிரியா நாட்டைச் சேர்ந்தவள். தகப்பன் சௌதியைச் சேர்ந்தவன். தாய் உடனடியாகக் காவல்துறையினருக்குப் புகார் கொடுத்தாள். காவல்துறையினர் உடனடியாக நடவடிக்கை எடுத்து அந்தக் கயவனை விலங்கிட்டு விட்டார்கள்! இப்போது குழந்தை தாயிடம்.
தாயே! நீ நீடுழி வாழ்க!
Thursday, 12 January 2017
Wednesday, 11 January 2017
மூளைக்கும் முக்காடா..!
சில சமயங்களில் சில நிகழ்வுகளைப் பார்க்கின்ற போது இவர்களைப் பார்த்து சிரிப்பதா அழுவதா என்று நமக்கு நாமே தலையைச் சொறிந்து கொள்ள வேண்டியிருக்கிறது!
தவறுகளைச் செய்துவிட்டு - இவன் அவனைச் குற்றம் சொல்லுவதும், அவன் இவனைக் குற்றம் சொல்லுவதும் - நமக்கு ஒன்றும் புதிதல்ல! ஏதோ இவன் புத்திசாலி போலவும் அவன் தான் மடையன் என்று சுட்டிக் காட்டுவதும் பல விஷயங்களில் தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது!
ஒவ்வொருவனும் புத்திசாலியைப் போல காட்டிக் கொள்ளுவதில் இவர்களை அடித்துக் கொள்ள ஆளே இல்லை! தவறுகளுக்கு அவர்கள் சொல்லுகின்ற காரணங்களை நாம் கேட்டால் நமக்கே தலையைச் சுற்றும்!
நெடுஞ்சாலயை அனைத்து மலேசியரும் தான் பயன் படுத்துகிறோம். ஆனால் அந்த நெடுஞ்சாலையில் - ஓய்வு எடுக்கும் இடத்தில் - "முஸ்லிம்களுக்கான கழிப்பறை" என்றால் எப்படி இருக்கும்? கழிப்பறைக்குக் கூட இப்படி ஒரு நிபந்தனையா?
குத்தகையாளனைக் குற்றம் சொல்லுகிறது நெடுஞ்சாலை! குத்தைகையாளன் அந்த அளவுக்குப் படிக்காதவனா? அறிவு இல்லாதவனா? தவறுகளைச் செய்து கொண்டே "இனி நிகழாதவாறு பார்த்துக் கொள்ளுகிறோம்!" என்று சொல்லிக் கொண்டே மீண்டும் அதே தவறுகளைச் செய்வதும், எப்போது தான் இது போன்ற தவறுகளுக்கு முடிவு வரும்?
ஒன்று புரிகிறது. வெகு விரைவில் நெடுஞ்சாலை முஸ்லிம்களுக்கு மட்டும் என்னும் அறிவிப்பு வரும் என எதிர் பார்க்கலாம்!!

வெட்கமே இல்லாத ஜென்மங்கள்!
ஆனால் அதுவே தொடர்கதையாக தொடர்ந்தால்.....? என்னவென்று சொல்லுவது? என்ன வெட்கங்கெட்ட ஜென்மங்கள் என்று தான் நமக்குத் தோன்றும்.
இப்போதும் இந்த நிகழ்ச்சி இந்தியாவின் ஓரிசா மாநிலத்தில் நடந்தேறியிருக்கிறது. இதற்கு முன்பும் - நாம் கேள்விப்பட்டவரை - முதன் முதலாக இதே மாநிலத்தில் தான் கணவர் ஒருவர் இறந்து போன தனது மனைவியைத் தோளில் சுமந்து சென்றதாக செய்திகள் வெளியாகின.
இதற்கு முன்னும் இது நடந்து இருக்கலாம். ஆனால் செய்திகள் வெளியாகவில்லை. இப்போது இருக்கும் நவீன தொழில் நுட்பங்கள் உடனடியாகச் செய்திகளை வெளிக்கொணர்ந்து விடுகின்றன.
இதில் நாம் குறிப்பாகப் பார்க்க வேணடியவை தங்களைப் படித்தவர்கள் என்று நினைப்பவர்கள் எவ்வளவு கீழ்த்தரமாக நடந்து கொள்ளுகிறார்கள் என்பது தான். மனிதாபிமானமே இல்லாத ஈன ஜென்மங்களாக இவர்களால் எப்படி நடந்து கொள்ள முடிகிறது?
ஏழைகள் என்றால் அல்லது தாழ்த்தப்பட்டவர்கள் என்றால் அவர்கள் இப்படித்தான் நடத்தப்பட வேண்டுமா?
இறந்த போன ஏழு வயது குழந்தையை ஒரு தகப்பன் 15 கிலொமீட்டர் தூரம் சுமந்து கொண்டு செல்வது என்பது சாதாரண விஷயம் அல்ல.
முன்பு நமக்குக் கிடைத்த செய்தி - இறந்து போன தனது மனைவியை கணவர் தோளில் சுமந்து கொண்டு போனதாக வந்தது - ஆனால் இது போன்ற செய்திகள் வரும் போது சம்பந்ததப்பட்ட மருத்துவமனை என்ன நடவடிக்கை எடுத்தது அல்லது சுகாதார அமைச்சு என்ன நடவடிக்கை எடுத்தது அல்லது மாநில அரசாங்கம் என்ன நடவடிக்கை எடுத்தது அல்லது நடுவண் அரசு என்ன நடவடிக்கை எடுத்தது என்று ஒன்றுமே தெரியவில்லை. நடவடிக்கை எடுத்திருந்தால் இது போன்ற சம்பவங்கள் மீண்டும் மீண்டும் நடப்பதற்கு வழியில்லை.
இந்தச் செய்தியைக் கேள்வியுற்ற அரபு நாட்டு அரசர் ஒருவர் அந்த ஏழைக்கு பண உதவி செய்ததாக செய்திகள் வெளியாயின. எங்கோ இருக்கும் ஒருவருக்கு இந்தியாவில் நடக்கும் அசிங்கங்கள் தெரிகின்றன. ஆனால் தனது மாநிலத்தில் நடக்கும் இந்த அசிங்கத்தை சுகாதார அமைச்சருக்குத் தெரியவில்லை!
யார் என்ன செய்வது? இது போன்ற ஒரு படத்தை எடுத்து சமுகவலைத்தளங்களில் போடுபவர்கள் கொஞ்சம் மனிதாபிமனத்தோடு நடந்து கொள்ள வேண்டும். நாலைந்து பேர் சேர்ந்து கொஞ்சம் பணம் போட்டு இந்தப் பிரச்சனையைத் தீர்த்து வைக்கலாம்.
இனி இது போன்ற செய்திகள் வராமலிருக்க இறைவனை வேண்டுவோம்.
Subscribe to:
Posts (Atom)