சில சமயங்களில் சில நிகழ்வுகளைப் பார்க்கின்ற போது இவர்களைப் பார்த்து சிரிப்பதா அழுவதா என்று நமக்கு நாமே தலையைச் சொறிந்து கொள்ள வேண்டியிருக்கிறது!
தவறுகளைச் செய்துவிட்டு - இவன் அவனைச் குற்றம் சொல்லுவதும், அவன் இவனைக் குற்றம் சொல்லுவதும் - நமக்கு ஒன்றும் புதிதல்ல! ஏதோ இவன் புத்திசாலி போலவும் அவன் தான் மடையன் என்று சுட்டிக் காட்டுவதும் பல விஷயங்களில் தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது!
ஒவ்வொருவனும் புத்திசாலியைப் போல காட்டிக் கொள்ளுவதில் இவர்களை அடித்துக் கொள்ள ஆளே இல்லை! தவறுகளுக்கு அவர்கள் சொல்லுகின்ற காரணங்களை நாம் கேட்டால் நமக்கே தலையைச் சுற்றும்!
நெடுஞ்சாலயை அனைத்து மலேசியரும் தான் பயன் படுத்துகிறோம். ஆனால் அந்த நெடுஞ்சாலையில் - ஓய்வு எடுக்கும் இடத்தில் - "முஸ்லிம்களுக்கான கழிப்பறை" என்றால் எப்படி இருக்கும்? கழிப்பறைக்குக் கூட இப்படி ஒரு நிபந்தனையா?
குத்தகையாளனைக் குற்றம் சொல்லுகிறது நெடுஞ்சாலை! குத்தைகையாளன் அந்த அளவுக்குப் படிக்காதவனா? அறிவு இல்லாதவனா? தவறுகளைச் செய்து கொண்டே "இனி நிகழாதவாறு பார்த்துக் கொள்ளுகிறோம்!" என்று சொல்லிக் கொண்டே மீண்டும் அதே தவறுகளைச் செய்வதும், எப்போது தான் இது போன்ற தவறுகளுக்கு முடிவு வரும்?
ஒன்று புரிகிறது. வெகு விரைவில் நெடுஞ்சாலை முஸ்லிம்களுக்கு மட்டும் என்னும் அறிவிப்பு வரும் என எதிர் பார்க்கலாம்!!
No comments:
Post a Comment