வாக்களிக்கும் வயதை குறைக்க வேண்டுமென அரசாங்கத்திற்கு வேண்டுகோள் விடுத்திருக்கிறார் இளைஞர், விளையாட்டுத் துறை அமைச்சர் சைட் சாடிக். இப்போது நடைமுறையில் இருக்கும் 21 வயதை 18-ஆக குறைக்கும்படி அவர் ஆலோசனைக் கூறியிருக்கிறார்.
ஏற்றுக்கொள்ளக் கூடிய கருத்தாகவே இதனை நான் கருதுகிறேன். அவர்களுக்குப் போதுமான அரசியல் விழிப்புணர்ச்சி இருக்காது என்கிற கருத்துக்களைப் புறந்தள்ளிவிட்டு அவர்களுக்கு அதற்கான விழிப்புணர்ச்சியை ஏற்படத்தப்பட வேண்டும் என நான் கருதுகிறேன். இப்போதைய இளைஞர்களுக்கு நல்ல விழிப்புணர்ச்சி உண்டு என்பதில் சந்தேகமில்லை.
18 வயது என்பது நல்ல துடிப்பான வயது. நாம் இத்தனை ஆண்டுகள் ஊழலுக்குப் பெயர் போன அரசாங்கத்தோடு அறுபது ஆண்டுகளை நகர்த்தி வந்திருக்கிறோம். நமது வயது அப்படி! "பரவாயில்லை! பரவாயில்லை! காலம் வரும், நேரம் வரும்! இன்னோரு வாய்ப்புக் கொடுப்போம்! இவர்கள் திருந்துவார்கள்!"
ஆனால் அவர்கள் திருந்தவே இல்லை! அதனால் தான் நீண்ட காலம் பதவியிலிருந்த ஒரு அரசாங்கத்தைத் தூக்கி எறிய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது! அதிலும் இளைஞர் பட்டாளம் தான் மூர்க்கத்தனமாக அரசாங்கத்தை எதிர்த்தவர்கள்!
இதுவே 18 வயது இளசுகளாக இருந்தால் எப்போதோ இந்த அரசாங்கத்தை தூக்கி எறிந்திருப்பார்கள்! ஆமாம் அவர்கள் தானே அதிகமாகப் பாதிக்கப்படுபவர்கள்? கல்வியாகட்டும், வேலை வாய்ப்புக்களாகட்டும் ஏதோ ஒரு வகையில் அதிகம் பாதிக்கப்படுபவர்கள் இவர்கள் தான். முக்கியமாக கல்வி என்று வரும் போது அவர்களுக்குப் பலவிதமான பாதிப்புக்கள். கல்லூரிகளில் படிக்கத் தடை, அவர்கள் விரும்பிய பாடங்களை எடுக்கத் தடை, மருத்துவம் முடியாது, தொழில் நுட்பம் முடியாது, அரசாங்கப் பல்கலைக்கழகங்களில் முடியாது. எல்லாம் தனியார், தனியார் தனியார்! அப்படி என்றால் ...? ஏழை, நடுத்தரக் குடும்பங்கள்? இருப்பதை விற்று பிள்ளைகளைப் படிக்க வைக்க வேண்டிய நிலை.
இதனையே எடுத்துக் கொண்டால் போதும். வக்களிப்பது 18 வயது என்றால் இப்படி ஒரு இழி நிலை நமக்கு ஏற்பட்டிருக்குமா? அதனால் இந்த 18 வயது என்பதை, அதுவும் நமது விளையாட்டுத் துறை அமைச்சர் சைட் சாடிக்கின் கருத்தை நாம் ஆதரிப்போம்; வர வேற்போம்!
Friday, 6 July 2018
Thursday, 5 July 2018
ஐயா..! மேகத்தைக் காணோம்...!
நகைச்சுவை நடிகர் வடிவேலுவின் மிகப் பிரபலமான நகைச்சுவையை நாம் அனைவரும் அறிந்திருக்கிறோம்.
"ஐயா! என் கெணத்தைக் காணோம்!"
இப்போது இந்த செய்தியைப் படித்த போது அந்தக் கிணறு தான் ஞாபகத்திற்கு வந்தது! இப்படியும் நடக்குமா என்று அதிசயத்துப் போனேன்! ஆனாலும் இப்படியும் நடக்கிறது என்கிறார் ஈரான் நாட்டு இராணுவத் தலைவர் பிரிகேடியர் ஜெனரல் கோலாம் ரிஸா ஜலாலி ! நம்பவும் முடியவில்லை!. நம்பாமலும் இருக்க முடியவில்லை! நவீன தொழில்நுட்பம் என்பது எதனையும் செய்யும் என்று ஏற்றுக்கொள்ள வேண்டிய நிலையில் தான் நாம் இருக்கிறோம்!
அவரின் குற்றச்சாட்டு என்ன? ஈரான் நாட்டில் சமீப காலமாக மழை பெய்வது குறைந்து போனதற்கு இஸ்ரேல், ஈரான் நாட்டை சூழும் மேகக்கூட்டங்களை இஸ்ரேல் "திருடுவதாக" அவர் குற்றம் சாட்டியிருக்கிறார்! அவர் சொல்லுவதற்கு ஆதாரம் தனது பக்கத்து நாட்டில் எல்லாம் மழை பெய்யும் போது ஏன் ஈரான் நாட்டில் மட்டும் மழை பெய்யவில்லை என்பது தான் அவர் கேள்வி.
ஆனாலும் ஈரானின் வானிலை ஆய்வு மையத்தின் தலைவர் ஆஹாட் வாசிஃ இந்தக் கூற்றைப் புறந்தள்ளுகிறார்! இப்படியெல்லாம் நடப்பதற்கு வாய்ப்பில்லை என்கிறார் அவர். ஈரான் நாட்டில் நீண்ட நாட்களாகவே மழை இல்லை; வறண்டு கிடக்கிறது. இப்படி மேகத்தைத் திருடுவது, பனியைத் திருடுவது என்று பேசுவது நமது கையாலாகத்தனத்தைக் காட்டுகிறதே தவிர பிரச்சனைக்குத் தீர்வை நோக்கிச் செல்லப் போவதில்லை என்கிறார் வானிலை ஆய்வு மையத்தின் தலைவர்.
ஆமாம், ஈரானில் இப்படிப் பேசப்படுவது ஒன்றும் புதிதல்ல! மேகத்தைத் திருடுவது, பனியைத் திருடுவது, மழையைத் திருடுவது என்பதெல்லாம் இஸ்ரேல் நாட்டைக் குற்றம் சாட்டும் போக்கே தவிர தங்களது நாட்டின் பிரச்சனையைக் களையும் நோக்கமில்லை! அதற்கான முன்னெடுப்பும் இல்லை!
பிரச்சனையைத் தீர்க்கும் வரை இப்படியே புலம்பிக் கொண்டிருக்க வேண்டியது தான்! கடைசியில் பாதிக்கப்படுபவர்கள் மக்கள். மக்களா? அவர்கள் யார்!
Wednesday, 4 July 2018
ஏன் மூன்று அமைச்சர்கள்....?
நாடு சுதந்திரம் பெற்ற பின்னர் வந்த அமைச்சரவையில் இரு இந்திய அமைச்சர்கள் இருந்தார்கள். அதன் பின்னர் ஒன்றாக அது குறைந்தது.
இப்போது பக்காத்தான் அமைச்சரவையில் இந்தியர்களின் அங்கத்துவம் மூன்றாக அதிகரித்திருக்கிறது. நாடு சுதந்திரம் பெற்ற போது நாம் கேட்காமலேயே இரண்டு கிடைத்தது. இடையில் கிடைத்த இரண்டையும் வேண்டாமென்று நாமே ஒதுக்கிவிட்டு ஒன்றாக இருப்பதில் மகிழ்ச்சி கொண்டோம்! இப்போது பக்காத்தான் அரசாங்கத்தில் நாம் எதிர்பாராமலேயே மூன்றாக கிடைத்ததும் மீண்டும் மகிழ்ச்சி அடைகிறோம்!
ஏன் நமக்கு இரண்டோ அல்லது மூன்று அமைச்சர்களோ தேவை என்று நாம் யோசித்ததுண்டா? அமைச்சர்கள் என்றால் அவர்கள் அனைத்து மலேசியர்களுக்கும் அமைச்சர்கள் தான். அவர்கள் இந்தியர்களுக்கு மட்டும் அல்ல. ஆனால் இரண்டு அமைச்சர்கள் என்னும் போது குறைந்தபட்சம் இரண்டு அமைச்சர்களும் கலந்து ஆலோசித்து இந்திய சமுதாயத்தின் முன்னேற்றத்திற்காக சில நன்மைகளைக் கொண்டு வர முடியும். ஒரு மூளையை விட இரண்டு மூளைகள் சேர்ந்தால் இன்னும் சிறப்பாக இயங்கு முடியும் அல்லவா. அது தான் காரணம்.
ஒரு அமைச்சர் நம்மைப் பிரதிநிதித்த போது அவரால் நம்மைப் பற்றி சிந்திக்க முடியவில்லை. அவரால் மத்திய அரசாங்கத்தை மட்டும் தான் பிரதிநிதிக்க முடிந்தது. இந்தியர்களைப் பற்றி சிந்திக்க நேரமில்லை. அதன் விளைவுகள் என்ன? அவர் செய்ய வேண்டிய வேலைகளைக் குண்டர் கும்பல்கள் செய்ய ஆரம்பித்து விட்டன! அப்போது இந்திய சமுதாயத்திற்கு ஏற்பட்ட அந்த அடி இது நாள் வரை தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது!
இப்போது தான் ஒளி தெரிய ஆரம்பித்திருக்கிறது. பச்சை விளக்கு எரிய ஆரம்பித்திருக்கிறது மூன்று அமைச்சர்கள்! குண்டர் கும்பல்கள் ஒளிய ஆரம்பித்திருக்கின்றன எனச் சொல்லலாம். இனி அவர்கள் முற்றிலுமாக ஒழிக்கப் படுவார்கள் என நம்பலாம்.
இப்போது குண்டர் ஒழிப்பு வேலைகளை அமைச்சர்கள் கையில் எடுத்திருக்கிறார்கள். அவர்களின் தேவைகளை அரசாங்கம் கொடுக்க வேண்டும். வேலை வாய்ப்புக்களை ஏற்படுத்த வேண்டும். சீர்திருத்தப் பள்ளிகளுக்கு அனுப்ப வேண்டும். போதைப்பித்தர்களுக்கு மறு வாழ்வு அளிக்க வேண்டும். இன்னும் காலித்தனம், குண்டர் கும்பல் நடவடிக்கையில் ஈடுபடுவோர் என்று பலர் இருக்கின்றனர்.
இவர்களையெல்லாம் சரியான பாதையில் கொண்டு செல்ல இந்த மூன்று அமைச்சர்களால் முடியும் என நம்பலாம். நமது சமுதாயத்திற்கு அவப்பெயரைக் கொண்டு வரும் இவர்களுக்கு ஒரு நல்ல எதிர்காலம் அமையும் என நம்புகிறோம்!

Subscribe to:
Posts (Atom)