செந்தோசா சட்டமன்ற உறுப்பினர் குணராஜ் மூலம் ஒரு செய்தி வெளிச்சத்திற்கு வந்திருக்கிறது.
அவர் கூறிய ஒரு கருத்து நம்மை யோசிக்க வைக்கிறது. இப்போது அமைச்சரவையில் இருக்கும் நமது இந்திய அமைச்சரகளிடையே ஒற்றுமில்லை என்பதை தடாலடியாகப் போட்டு உடைத்திருக்கிறார்! சீபீல்ட் ஆலய விவகாரத்தில் அவர்களின் நடவடிக்கை சரியாக இல்லை என்பது தான் அவர் சொல்ல வந்த செய்தி.
நமக்கும் இது ஆச்சரியத்தை அளிக்கத்தான் செய்கிறது. பதவி ஏற்று ஏழு மாதங்களில் இப்படி ஒரு நிலைமையா என்று நம்மை யோசிக்க வைக்கிறது! அதுவும் முக்கியமான ஒரு விவகாரத்தில் அவர்களிடையே ஒற்றுமை இல்லை. மிகவும் வேதனைக்குரியது. ஆலயப் பிரச்சனை என்பது சாதாரண விஷயம் அல்ல. ஒவ்வொரு மனிதனின் உணவர்களைத் தூண்டுகிற பிரச்சனை.
"அசம்பாவிதம் நடந்த பிறகு துக்கம் விசாரிக்க வருகிறார்கள்" என்பதாக அவர் கூறியிருப்பது சிந்திக்க வேண்டியது மட்டும் அல்ல மிகவும் கடுமையான குற்றச்சாட்டு. இதைத் தான் நமது முன்னாள் ம.இ.கா. தலைவர்கள் செய்து வந்தார்கள். ஒன்றில் மட்டும் அவர்கள் ஒன்றுபட்டார்கள்! "நாம் தலையிட வேண்டாம்! பிரச்சனையை கொஞ்சம் அப்படி இப்படி என்று இழுத்துக் கொண்டு போனால் போதும்! அப்புறம் நமது மக்கள் மறந்து விடுவார்கள்!" என்பது தான் அவர்கள் வகுத்துக் கொண்ட மிகப்பெரிய கொள்கை.
ஆனால்; பக்கத்தான் அரசாங்கத்தில் உள்ள இந்தியத் தலைவர்கள் அப்படியெல்லாம் சிந்திக்க முடியாது. அதனை நாங்கள் பார்த்துக் கொண்டு இருப்போம் என்று அவர்கள் தாங்களாகவே முடிவு செய்து கொள்ள வேண்டாம் என்று நாம் சொல்ல வேண்டிய தருணம் இது.
ஏற்கனவே நாங்கள் ஏமாந்த சமூகம் என்று ம.இ.கா. வால் முத்திரைக் குத்தப்பட்ட சமூகம் நாம். நாம் சொல்ல வருவதெல்லாம் "செய் அல்லது செத்து மடி" என்பது தான். சும்மா குளிர்சாதன அறையில் இருந்து கொண்டு குளிர்ச்சியான வசனங்களை ஒப்புவிக்க வேண்டாம். மீண்டும் மீண்டும் நாங்கள் ஏமாறத் தயராகத் இல்லை என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.
துக்கம் விசாரிக்க வந்தவர்களாக இருந்தாலும் சரி வராதவர்களாக இருந்தாலும் சரி ஒன்றை நினைவுறுத்துகிறேன். பொது வாழ்க்கைக்கு வந்து விட்டீர்கள். உங்கள் கடமையைச் செய்யுங்கள். உங்கள் கடமை என்பது இந்திய மக்களைச் சார்ந்தது. அவர்களின் துன்பங்களில் உங்களின் பங்கு அளப்பரியது. துன்பங்களை நீங்கள் தான் சுமக்க வேண்டும்.. மக்களைச் சுமக்க வைக்க வேண்டாம்.
தலைவர்களிடையே ஒற்றுமை இல்லை என்றால் சமுதாயத்தை அது பாதிக்கும் என்பதை மறவாதீர்கள். மீண்டும் இந்தத் துக்கம் விசாரிக்கும் வேலை வேண்டாம்! உங்களை நாங்கள் பதவியில் வைத்திருப்பது துக்கம் விசாரிக்க அல்ல! துக்கத்தை தூக்கி எறிய!
Wednesday, 5 December 2018
Sunday, 2 December 2018
வேதா - மாஸ்லீ ...!
பிரதமர் துறை துணையமச்சர் வேதமூர்த்தி, கல்வி அமைச்சர் மஸ்லி இருவரும் சிறப்பாகவே செயலாற்றுகிறார்கள் என்பதாகக் கூறியிருக்கிறார் பிரதமர்.
இதற்கு முன்னர் பிரதமரின் ஊடகத் தலைவர் காதிர் ஜாசின் இந்த இருவரைப் பற்றி எழுதிய கருத்துக்கள் பல்வேறு தரப்பிலிருந்து பலதரப்பட்ட அபிப்பிராயங்களை ஏற்படுத்தின.
இவர்களின் செயல்பாடுகள் சிறப்பாக இல்லை என்பதாக அவர் சாடியிருந்தார். ஒரு வேளை வேதமூர்த்தி இந்து கோவில்களில் தலையீடுவது பற்றி ஏதேனும் சொல்ல வரலாம். அவர் அதனைத் தெளிவாகச் சொல்லவில்லை. அம்னோ தரப்பினர் கூட வேதமூர்த்தியைக் குறை கூறுகின்றனர். அம்னோ சொல்லுகின்ற காரணங்களையே இவரும் சொல்லலாம்! அந்தக் குறை கூறல்களை வைத்தே காதிரும் வேதாவைச் சாடியிருக்கலாம்!
நாம் இங்கு சொல்ல வருவதெல்லாம் ஒன்று தான். பிரதமர் சொல்ல என்ன நினைக்கிறாரோ அதனை காதிர் ஜாசின் முன்னதாகவே சொல்லி அவர்களை எச்சரிக்கிறாரோ! இருவரும் சேர்ந்து தான் இந்த நாடகத்தை நடத்துகிறார்களோ என்னும் ஐயமும் நமக்கு உண்டு!
அமைச்சர்கள் என்னும் முறையில் பிரதமர் அவர்களை எச்சரிக்காமல் கொஞ்சம் விட்டுக் கொடுத்து தனது பத்திரிக்கையாளர் மூலம் செய்திகளைச் சொல்ல வைக்கிறாரோ! இருக்கலாம் அல்லது இல்லாமலும் இருக்கலாம்!
மஸ்லியைப் பற்றி வேறுபட்ட கருத்துக்கள் இருக்கலாம். ஆனால் நம்மைப் பொறுத்தவரை வேதமூர்த்தியைப் பற்றி வேறுபட்ட கருத்துக்கள் இல்லை. இந்தியர்களின் நலனுக்காக ஏற்படுத்தப்பட்ட அமைச்சர் வேதமூர்த்தி. அவரால் முடிந்த வரை சிறப்பாகவே செயல்படுகிறார். இந்தியர்களின் பிரச்சனைகளில் அக்கறை காட்டுகிறார். ஏன்? சீபீல்டு ஆலயத் தகராற்றிலும் அவர் நன்றாகவே செயல்பட்டார்.
ஒரு வேளை தவறுகள் நேரலாம். அவர் அப்படி ஒன்றும் அனுபவப்பட்ட அமைச்சர் இல்லை. தவறுகளைத் திருத்திக் கொள்ளலாம். அது அவரால் முடிந்தது தான்.
அதனால் அம்னோ தரப்பினர் சொல்லுகிறார்கள் என்பதற்காக வேதமூர்த்தியைச் சீண்டிப்பார்ப்பது சரியான அணுகுமுறை அல்ல! இந்திய சமுதாயத்திற்காக அவர் சிறப்பாகவே செயல்படுகிறார். அவர் மேல் நமக்கு நம்பிக்கை உண்டு. அது போல பிரதமரும் அவர் மீது நம்பிக்கை வைக்க வேண்டும்!
வேதா, இன்னும் சிறப்பாக செயல்பட வாழ்த்துவோம்!

Saturday, 1 December 2018
நிலத்தை வாங்க முடியுமா...?
"சீபில்டு ஆலய நிலத்தை நாமே வாங்கிவிட்டால் என்ன?" என்று ஒரு எண்ணத்தை தூவி இருக்கிறார் பிரபல தொழிலதிபர் வின்சன் டான்.
நூறு ஆண்டுகளுக்கு மேல் அந்த நிலத்தில் வீற்றிருக்கும் அந்த சீபில்டு ஆலயம் இந்துக்களிடமே இருக்க வேண்டும் என்றால் அது இந்து மக்களுக்குச் சொந்தமாக வேண்டுமென்றால் அந்த நிலம் வாங்கப்பட வேண்டும் என்பது தான் அவர் சொல்லுகின்ற ஒரு தீர்வு.
அந்த நிலம் 1.1 ஏக்கர் என்று சொல்லுப்படுகிறது. அதன் விலை சுமார் ஒன்றரை கோடி வெள்ளி மதிப்பு பெறும். இப்போது புரிகிறதா ஏன் அந்த நிலத்தை மேம்பாட்டார்கள் விட்டுக்கொடுக்க தயாராக இல்லை என்பதை?
அந்த நிலத்தை வாங்க வேண்டுமென்றால் அதற்கு ஒரு நிதியைத் திரட்டியாக வேண்டும். அதற்கும் வழிகாட்டியிருக்கிறார் வின்சன் டான். அவரே முன்வந்து 5 இலட்சம் வெள்ளியை வழங்கி அந்நிதியைத் தொடக்கி வைத்திருக்கிறார். அத்தோடு இன்னும் இரு வர்த்தக பிரமுகர்களும் தலா 5 இலட்சம் வெள்ளி கொடுத்து அந்நிதியை 15 இலட்சமாக உயர்த்தியிருக்கின்றனர். இவர்கள் அனைவரும் சீனர்கள் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
இதொரு நல்ல ஆரம்பம் என்று எடுத்துக் கொள்ளலாம். இந்திய தொழிலதிபர்களும் நாட்டில் பல பேர் இருக்கின்றனர். அவர்கள் நினைத்தால் ஒரு கோடியோ, ஒன்றரை கோடியோ என்பதெல்லாம் ஒரு பெரிய தொகையே அல்ல. ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ள வர்த்தக சபைகளைச் சேர்ந்த வர்த்தகர்கள் இணைந்தால் ஒரு சில நாள்களிலேயே இந்தத் தொகையை எட்டிவிடலாம். அத்தோடு பொது மக்கள். இது முடியும் என்று நாம் நம்பலாம்.
இப்போது இந்த கோவில் விஷயத்தில் அரசாங்கத்தின் வழிகாட்டுதல் நிச்சயம் தேவை. இப்போதே தலைமை பீடம் யாருக்கு என்கிற ஒரு வேகம் தெரிகிறது. இது தேவை இல்லாத ஒன்று.
இப்போது இந்த நிலப் பிரச்சனைக்கு ஒரு தீர்வைக் காண்போம். கோவிலை வைத்துக் கொண்டு கலவரம் பண்ணுவதெல்லாம் பிரச்சனையைத் தீர்க்க உதவாது.
அமைதியின் மூலம் தான்-பேச்சுவார்த்தயின் மூலம் தான்-அனைத்துப் பிரச்சனைகளையும் தீர்த்தாக வேண்டும்.
இது தொழிலதிபர் வின்சன் டான் கொடுத்த ஒரு யோசனை. வரவேற்கப்படுமா என்பதைப் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்!

Subscribe to:
Posts (Atom)