ஒரு சில விஷயங்களை அதுவும் மிகவும் முக்கியமான ஒரு பிரச்சனையை எப்படி அணுக வேண்டும் என்பதையெல்லாம் நமது தலைவர்கள் தெரிந்து கொண்டு தான் செயல்படுகிறார்களா என்பது நமக்குப் புரியவில்லை!
இந்து சங்கத்தின் தலைவர் ஆர்.எஸ். மோகன் ஷான் ம.இ.கா. வினரிடம் ஒரு சில கேள்விகள் கேட்டிருந்தார். அதற்கான பதிலை பொறுப்பான முறையில் விக்னேஸ்வரன் பதில் கொடுத்திருக்க வேண்டும். ஆனால் அவர் அப்படிச் செய்யவில்லை.
அதற்குப் பதிலாக "போடா! உன்னையும் தெரியும், உங்கப்பனையும் தெரியும்! என்கிற மாதிரியான ஒரு பதிலைக் கொடுத்திருக்கிறார்!
இந்து சங்கம் என்பது அரசு சாரா அமைப்பு. அவர்களால் முடிந்ததை அவரகள் செய்கிறார்கள். மற்றபடி அவர்களுக்கு எந்த வருமானமும் இல்லை. அதிகாரமும் இல்லை! அவர்கள் சொல்லுவதை அரசாங்கம் ஏற்றுக் கொள்ளும் என்கிற உத்தரவாதமும் இல்லை! அவர்களுக்கு ஏதோ ஒரு "டத்தோ", "டான்ஸ்ரீ" போன்று பட்டங்கள் கிடைக்கலாம்! அதுவும் அரசாங்கத்தோடு - முன்பு ம.இ.கா. வோடு - இணைந்து செயல் ஆற்றினால் அது நடக்கும். இல்லாவிட்டால் அதுவும் இல்லை!
"இந்துக்களை நட்டாற்றில் விட்டவர்" என்பது மிகவும் கடுமையான ஒரு சொல். ம.இ.கா. இந்துக்களை, இந்தியர்கள் நட்டாற்றில் விட்ட ஒரு கட்சி என்பது தான் மலேசியர்களுக்குத் தெரியும்.
அப்படியே இந்துக்களை நட்டாற்றில் விட்டவர் என்று சொன்னால் அதன் பின்னால் ம.இ.கா. வினர் தான் இருந்திருப்பர்! எந்த ஒரு நல்ல செயல்களுக்கும் தடையாக இருந்தவர்கள் ம.இ.கா.வினர் என்பது தான் நாம் அறிந்த உண்மை!
இப்போது இவர் இப்படிப் பேசுவதால் ம.இ.கா. வினரைப் பற்றியான நமது அபிப்பிராயம் மாறி விடப்போவதில்லை! அவர் பேச்சில் ஒரு விரக்தி தெரிகிறது தவிர மற்றபடி ஒரு மண்ணுமில்லை!
ம.இ.கா., பாஸ் கட்சியை ஆதரிக்கட்டும் அல்லது அவர்கள் கொண்டு வருகின்ற ஷரியா சட்டத்தை ஆதரிக்கட்டும்! ஆனால் அவர்களை ஆதரிக்கத் தான் ஆளில்லை!
அதை மனதில் ஆழமாக பதித்துக் கொண்டால் போகும்!
Sunday, 8 December 2019
Saturday, 7 December 2019
தந்தையின் தியாகம்...!
பிள்ளைகளின் கல்விக்காக பெற்றோர்கள் பலர் எவ்வளவோ தியாகங்கள் செய்கின்றனர்.
அதுவும் பெற்றோர்கள் படித்தவர்களாக இருந்தால் அவர்களை விட இன்னும் நல்ல முறையில் தங்களது பிள்ளைகள் கல்வி கற்க வேண்டும் என்னும் ஆசை இல்லாத பெற்றோர்களே இல்லை. அதனால் தான் இன்று நாம், நமது சமூகத்தில், டாக்டர்களையும், வழக்கறிஞர்களையும், கணக்காளர்களையும், பொறியிலாளர்களையும் பார்த்துக் கொண்டிருக்கிறோம்.
ஆனால் ஏழ்மை நிலையில் உள்ளவர்களின் நிலை என்ன? எப்பாடுப் பட்டாவது பிள்ளைகளுக்குக் கல்வியைக் கொடுக்க வேண்டும் என்னும் எண்ணம் இப்போதுங்கூட ஒரு சில பெற்றோர்களிடம் இல்லை. பலருக்குக் கல்வியின் அருமை தெரிந்தாலும் வறுமையில் வாடும் ஒரு சிலருக்கு அது எட்டாக் கனியாகவே ஆகி விடுகிறது. ஆனாலும் அவ்வளவு மோசமான நிலைமையில் நாம் இல்லை. மனமிருந்தால் மார்க்கம் உண்டு.
ஒரு முறை, ஒரு பெண்மணியும் அவரது மகளும் ஒரு கடிதம் அடித்துக் கொடுக்கச் சொன்னார்கள். அவரது மகள் தனது ஐந்தாம் பாரத்தை முடிக்காமல் ஏதோ ஒரு பொய் சொல்லி ஒரு நிறுவனத்தில் சேர்ந்து விட்டாராம். பொய் சொன்னார் என்பதற்காக அவரது சம்பளத்தை அவர்கள் கொடுக்கவில்லை. அதனால் அது குறித்து அவர்களுக்கு ஒரு கடிதம் தேவைப்பட்டது. ஏன் ஐந்தாம் பாரம் முடிக்கவில்லை என்று கேட்டேன். ஐந்தாம் பாரம் படிக்கும் போது "அவரது தகப்பனார் தவறிப்போனார் அதனால் என்னால் அவளைப் படிக்க வைக்க முடியவில்லை" என்று அவரது தாயார் பதிலளித்தார். இன்னும் ஏழு மாதங்கள் தான் ஆனாலும் அவரால் படிக்கவைக்க முடியவில்லை! இது தான் நமது தமிழ்க் குடும்பங்களின் நிலை. இங்கு ஏழ்மை என்பதை விட அக்கறையற்ற ஒரு தன்மை என்பது தான் உண்மை!
இதோ பாருங்கள். ஆப்கானிஸ்தான் நாட்டில் வறுமையில் வாடும் ஓரு குடும்பம். பெண்கள் கல்வி கற்றாலே அவர்களைச் சுட்டுத் தள்ளும் ஒரு தீவிரவாதிகள் கூட்டம். இந்த சூழ்நிலையில் ஒரு தந்தை தனது மூன்று பெண் பிள்ளைகளையும் தனது மோட்டார் சைக்களில் ஏற்றிக் கொண்டு தினசரி பன்னிரெண்டு கிலொமீட்டர் பயணம் செய்து பள்ளிக்குக் கூட்டிச் செல்கிறார். அவர்களுடைய வகுப்பு முடியும் வரையில் அங்குக் காத்திருந்து வகுப்பு முடிந்ததும் மீண்டும் அவர்களை வீட்டிற்குக் கூட்டி வருகிறார். இது தான் அவரது தினசரி நடைமுறை வாழ்க்கை.
ஏன் பெண் பிள்ளைகளின் மேல் இந்த அக்கறை? "என் ஆண் பிள்ளைகளைப் போல் அவர்களும் கல்வி கற்க வேண்டும். எனது கிராமத்தில் பெண் டாக்டர்கள் இல்லை. அவர்கள் படித்து வந்து எங்கள் கிராமத்தில் சேவை செய்ய வேண்டும்"
ஒரு தந்தையின் ஆசை இது. பெண் டாக்டர் இல்லாத ஒரு கிராமம். படித்து வந்த சேவை செய்ய வேண்டும்.
தந்தைக்கு உயரிய நோக்கம். அதே சமயத்தில் அவரது தியாகம். தனது கிராம மக்களின் மீது அவருக்குள்ள அக்கறை.
அவரது ஆசை நிறைவேற நமது பிரார்த்தனைகள்!

Friday, 6 December 2019
நல்லதா? கெட்டதா?
பி.கே.ஆர். தலைவரும் அடுத்த பிரதமர் என்று அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்படும் அன்வார் இப்ராகிம் பற்றியான செய்திகள் அதுவும் எதிர்மறையான செய்திகள் ஏதோ ஒரு வகையில் வெளியாகிக் கொண்டு தான் இருக்கின்றன.
அதுவும் அவரை பற்றியான பாலியல் ரீதியான செய்திகள் தொடர்ந்த வண்ணம் உள்ளன.
ஏன், எதனால் என்றெல்லாம் நம்மால் யோசிக்க முடியவில்லை. தொடர்ந்தாற் போல வந்து கொண்டிருக்கிறது. அவருக்குத் தொடர்ந்து ஓர் அவப்பெயரை ஏற்படுத்த வேண்டும் என்பதாக இது போன்ற செய்திகள் உருவாக்கப்பட்டு உள்நோக்கத்தோடு உலா வந்து கொண்டிருக்கிறது!
இப்படியெல்லாம் செய்திகளை உருவாக்கி, பணத்தை வாரி இறைத்து, இந்த செய்திகளின் பின்னால் ஒளிந்து கொண்டிருக்கிறார்களே இவர்களை நாம் ஒன்றும் செய்ய முடியாது என்கிற எண்ணம் அவர்களுக்கு உண்டு. ஒன்று இவர்கள் எப்படியோ சட்டத்தின் பிடியிலிருந்து ஒவ்வொரு முறையும் தப்பி விடுகின்றனர். கடுமையான தண்டனை எதுவும் இதுவரை அவர்களுக்குக் கிடைக்கவில்லை.
சரி, இப்படியெல்லாம் செய்திகள் வருகின்றனவே அது அன்வாரை எந்த அளவுக்குப் பாதிக்கும்?
ஓரளவும் பாதிக்காது என்பது தான் நமது கருத்து! ஒரு மனிதரைப் பற்றி இது போன்ற செய்திகள் முதன் முறையாக வந்தால் நமக்கு அது ஆச்சரியத்தைக் கொடுக்கும்! அதுவும் பிரபலமான மனிதர் என்றால் இன்னும் கொஞ்சம் அதிகமாகவே ஆச்சரியத்தைக் கொடுக்கும்!
ஆனால் அன்வார் பற்றிய செய்திகள் என்பது அப்படியல்ல. இந்த ஒரே குற்றச்சாட்டு மீண்டும் மீண்டும் அதே குற்றச்சாட்டு என்பது சராசரியாக சிந்திக்கும் மனிதன் கூட விழுந்து விழுந்து சிரிப்பான்! ஒரு மனிதன் ஒரு முறை தவறு செய்யலாம். ஆனால் மீண்டும் மீண்டும் அதே தவறை ஒரு மனிதன் செய்கிறான் என்றால் யாராவது நம்புவார்களா? அப்படித்தான் அன்வார் கதையு ம். முதல் கதையையே நம்ப ஆளில்லை. ஆனால் தொடர்ந்து தொடர்ந்து அது போன்ற செய்திகளே வருகின்றன. அப்படியென்றால் அன்வாரின் எதிரிகள் எந்த அளவுக்கு அவருக்குக் கெட்ட பெயர் ஏற்படுத்த முடியுமோ அந்த அளவுக்கு அவருக்குக் கெட்ட பெயரை ஏற்படுத்தி அவர் பிரதமர் பதவிக்கு வர முடியாதபடி செய்கின்றனர் என்பது தெளிவாகத் தெரிகிறது!
ஆனாலும் இப்போது நடப்பது என்ன? இப்போது மக்களே அன்வார் மீது ஓர் அனுதாபம் ஏற்படுகின்ற ஒரு சூழலை அவருக்கு எதிரான செய்திகள் ஏற்படுத்துகின்றன. அதுவும் குறிப்பாக இந்த பாலியல் அவதூறு செய்திகள் அவருக்கு இன்னும் மக்களின் ஆதரவைத் தேடித் தருகின்றன என்பது தான் உண்மை!
இது போன்ற கெட்ட செய்திகள் அன்வாருக்கு மக்களிடையே நல்ல செய்திகளாக மாறுகின்றன! அவருக்கு மக்களின் செல்வாக்கு இன்னும் அதிகரிக்கிறது என்பது தான் உண்மை!
வர வேற்போம்!
Subscribe to:
Posts (Atom)