ஒரு சில விஷயங்களை அதுவும் மிகவும் முக்கியமான ஒரு பிரச்சனையை எப்படி அணுக வேண்டும் என்பதையெல்லாம் நமது தலைவர்கள் தெரிந்து கொண்டு தான் செயல்படுகிறார்களா என்பது நமக்குப் புரியவில்லை!
இந்து சங்கத்தின் தலைவர் ஆர்.எஸ். மோகன் ஷான் ம.இ.கா. வினரிடம் ஒரு சில கேள்விகள் கேட்டிருந்தார். அதற்கான பதிலை பொறுப்பான முறையில் விக்னேஸ்வரன் பதில் கொடுத்திருக்க வேண்டும். ஆனால் அவர் அப்படிச் செய்யவில்லை.
அதற்குப் பதிலாக "போடா! உன்னையும் தெரியும், உங்கப்பனையும் தெரியும்! என்கிற மாதிரியான ஒரு பதிலைக் கொடுத்திருக்கிறார்!
இந்து சங்கம் என்பது அரசு சாரா அமைப்பு. அவர்களால் முடிந்ததை அவரகள் செய்கிறார்கள். மற்றபடி அவர்களுக்கு எந்த வருமானமும் இல்லை. அதிகாரமும் இல்லை! அவர்கள் சொல்லுவதை அரசாங்கம் ஏற்றுக் கொள்ளும் என்கிற உத்தரவாதமும் இல்லை! அவர்களுக்கு ஏதோ ஒரு "டத்தோ", "டான்ஸ்ரீ" போன்று பட்டங்கள் கிடைக்கலாம்! அதுவும் அரசாங்கத்தோடு - முன்பு ம.இ.கா. வோடு - இணைந்து செயல் ஆற்றினால் அது நடக்கும். இல்லாவிட்டால் அதுவும் இல்லை!
"இந்துக்களை நட்டாற்றில் விட்டவர்" என்பது மிகவும் கடுமையான ஒரு சொல். ம.இ.கா. இந்துக்களை, இந்தியர்கள் நட்டாற்றில் விட்ட ஒரு கட்சி என்பது தான் மலேசியர்களுக்குத் தெரியும்.
அப்படியே இந்துக்களை நட்டாற்றில் விட்டவர் என்று சொன்னால் அதன் பின்னால் ம.இ.கா. வினர் தான் இருந்திருப்பர்! எந்த ஒரு நல்ல செயல்களுக்கும் தடையாக இருந்தவர்கள் ம.இ.கா.வினர் என்பது தான் நாம் அறிந்த உண்மை!
இப்போது இவர் இப்படிப் பேசுவதால் ம.இ.கா. வினரைப் பற்றியான நமது அபிப்பிராயம் மாறி விடப்போவதில்லை! அவர் பேச்சில் ஒரு விரக்தி தெரிகிறது தவிர மற்றபடி ஒரு மண்ணுமில்லை!
ம.இ.கா., பாஸ் கட்சியை ஆதரிக்கட்டும் அல்லது அவர்கள் கொண்டு வருகின்ற ஷரியா சட்டத்தை ஆதரிக்கட்டும்! ஆனால் அவர்களை ஆதரிக்கத் தான் ஆளில்லை!
அதை மனதில் ஆழமாக பதித்துக் கொண்டால் போகும்!
No comments:
Post a Comment