The Oldest Athlete, 102 year-old, Sawang Chanpraman of Thailand bagged two Gold Medals.
Thursday, 3 March 2022
வயது ஒரு தடையல்ல!
Wednesday, 2 March 2022
பொதுத் தேர்தல் நடக்குமா?
UMNO President Datuk Sri Mohamad Hassan
இந்த ஆண்டு 15 வது பொதுத் தேர்தல் நடத்த முடியுமா என்கிற சந்தேகம் இயல்பாகவே எழத்தான் செய்யும்.
காரணம் கொரோனா இன்னும் கட்டுப்பாட்டுக்கள் வரவில்லை. நாளுக்கு நாள் ஏற்றம் கண்டு தான் வருகிறதே தவிர இன்னும் குறைந்தபாடில்லை.
இந்த நேரத்தில் அம்னோ கட்சியினர் - அம்னோ தலைவர் குறிப்பாக - 15-வது பொதுத் தேர்தலை நடத்த பிரதமருக்கு நெருக்குதல் கொடுப்பதாக செய்திகள் உலவுகின்றன.
இன்றைய நிலையில், சரியோ தவறோ, ஏதோ ஓர் அடிப்படையில், அரசாங்கம் தட்டுத் தடுமாறினாலும் சுமூகமாக இயங்கிக் கொண்டிருக்கிறது. அடுத்த 15-வது பொதுத் தேர்தல் வரை அவர்கள் காலத்தை ஓட்ட வேண்டும் என்பது தான் பொது மக்களின் எதிர்பார்ப்பு. இதற்கிடையில் தேர்தல் நடத்த வேண்டும் என்கிற நெருக்கடி அம்னோவுக்கு ஏன் வந்தது என்பதற்கு என்ன காரணமாக இருக்கும்?
ஜொகூர் சட்டமன்றத் தேர்தலில் அம்னோ வெற்றி பெற்றால் பொதுத் தேர்தலை வைக்கும்படி அம்னோ பிரதமருக்கு இன்னும் அதிகமான நெருக்குதல் கொடுக்கும்! அதாவது அவர்களுக்கு இப்போது நல்ல நேரம் என்பது அவர்களின் கணிப்பு என்பதாக எடுத்துக் கொள்ளலாம்!
ஜொகூர் சட்டமன்றத் தேர்தல் என்பது தேர்தலோடு கொரோனாவையும் சேர்த்துப் பார்க்க வேண்டும். ஏற்கனவே நமக்குள்ள அனுபவப்படி இடைக்காலப் பிரதமர் முகமது யாசின் தனது ஆட்சியை எப்படி தக்க வைத்துக்கொண்டு தனது ஆட்சியை நீடித்துக் கொண்டாரோ அப்படி அதே முன்னுதாரணத்தை பிரதமர் இஸ்மாயிலும் பின்பற்றக்கூடிய வாய்ப்பு இருக்கிறது என்று அம்னோ நினைக்கிறது!
இன்னொரு முக்கியமான செய்தியும் உண்டு. இப்போது அமெரிக்காவில் 1MDB வழக்கு நடந்து கொண்டிருக்கிறது. முன்னாள் பிரதமர், முன்னாள் தேசிய வங்கியின் கவர்னர் போன்றவர்களின் பெயர்கள் எல்லாம் அடிப்பட்டுக் கொண்டிருக்கின்றன! இன்னும் என்ன என்ன வகையில் முன்னாள் பிரதமர் நஜிப்பின் பெயர் நாறடிக்கப்படுமோ என்பது பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். அவர் பெயர் நாறடிக்கப்பட்டால் அது இயல்பாகவே அம்னோவின் பெயரும் நாறடிக்கப்படும். அது அம்னோவுக்கு வருகின்ற தேர்தலின் தோல்விக்கு ஒரு காரணியாக அமையும் என்று அம்னோ அல்லது முகமட் ஹாசான் நினைக்கிறார்!
அதனால் அம்னோவில் உள்ள ஊழல்வாதிகளின் பெயர்கள் எல்லாம் இன்னும் அதிகம் வெளிவரும் முன்பே தேர்தலை நடத்திவிட்டால் கொஞ்சம் தப்பிக்கலாம் என்று அம்னோ கணக்குப்போடுகிறது!
ஆனால் மற்ற கட்சிகளும் சரி மக்களும் சரி தேர்தல் எப்போதும் போல குறிப்பிட்ட காலத்தில் பொதுத் தேர்தல் நடத்துவதையே விரும்புகின்றனர். சீக்கிரம் என்பதற்கு எந்த காரணிகளும் இல்லை. உலக மகா ஊழல்வாதிகளை மக்களும் தெரிந்து கொள்ள ஆவலாய் உள்ளனர்.
தேர்தலை உடனடியாக நடத்த வேறு எந்த முகாந்திரமும் இல்லை! அம்னோவில் உள்ள திருடவர்கள் வெளிச்சத்திற்குக் கொண்டு வருவதை அம்னோ விரும்பவில்லை.
பொதுத் தேர்தல் நடத்தப் பெறாது என்பதாகவே நான் நினைக்கிறேன். அதற்கான தேவையும் எழவில்லை. எதிர்க்கட்சிகளும் தேர்தல் தேவை என்று சொல்லவில்லை! மாமன்னரும் அதனை ஏற்றுக்கொள்ள மாட்டார்!
பொதுத் தேர்தல் நடக்காது!
Tuesday, 1 March 2022
இனி எப்படி அழைக்கலாம்?
சரவாக் முதலமைச்சர் இன்று முதல் முதலமைச்சர் என அழைக்கப்பட மாட்டார்.
இனி அவர் Premier of Sarawak என்று அழைக்கப்படுவார். Prime Minister என்றால் அது நமது பிரதமரைத்தான் குறிக்கும் அதில் எந்த மாற்றமுமில்லை.
சரவாக் மாநிலத்தின் இந்தப் புதிய மாற்றத்தை தமிழில் நாம் எப்படி அழைக்கப் போகிறோம்? இத்தனை ஆண்டுகள் நாம் அவர்களை வழக்கம் போல முதலமைச்சர் என்று தான் அழைத்து வந்தோம்.
நமது தமிழ் ஊடகங்களில் உள்ளவர்கள் பன்மொழி புலமைப் பெற்றவர்கள். இதற்கும் ஒரு சொல்லை இந்நேரம் கண்டு பிடித்திருப்பார்கள். எல்லாரும் ஜாம்பவான்கள். எல்லாக் காலங்களிலும் மொழிபெயர்ப்பில் ஈடுபட்டுக் கொண்டிருப்பவர்கள். இது போன்ற சொற்கள் எல்லாம் அவர்களுக்கு மிக சர்வ சாதாரணம்.
எனக்குத் தெரிந்ததெல்லாம் வெறும் வார்த்தயை மாற்றிப் போடுவதுதான்! இதற்கெல்லாம் மண்டையை உடைத்துக் கொள்ள வேண்டியதில்லை! ஆமாம்! சரவாக் பிரதமர் டான்ஸ்ரீ அபாங் ஜொகாரி என்று வாசித்தால் அல்லது எழுதினால் போதுமானது! அவரது பெயரைச் சொல்லும் போது இன்னும் கொஞ்சம் தெளிவாக இருக்கும். இன்னும் கொஞ்சம் 'அவர் சரவாக் முதலமைச்சர்' என்பது அழுத்தமாக இருக்கும். அதனால் சரவாக் பிரதமர் டான்ஸ்ரீ அபாங் ஜொகாரி என்பது பொருத்தமாக இருக்கும் என நான் நினைக்கிறேன். இதற்கெல்லாம் போய் மெனக்கெட்டு தூய தமிழ் சொற்களை எல்லாம் தேடி காலத்தை வீணடிக்க வேண்டியதில்லை! அப்படி செய்பவர்களை நான் குறை கூறவும் தயாராக இல்லை. எது தமிழுக்கு நல்லதோ அதுவே நமக்கும் நல்லது.
"தாய்க்கொரு பழி நேர்ந்தால் மகற்கில்லையோ! அன்னை தமிழுக்குப் பழி நேர்ந்தால் உனக்கில்லையோ!" இது தான் நமது நிலையும்.
சரவாக் மாநிலத்தில் நல்லதொரு மாற்றம் நிகழ்ந்திருக்கிறது. அந்த மாநிலத்தின் வரலாற்றுத் தொடர்ச்சி என்பதகாவே நாம் அந்த மாற்றத்தைப் பார்க்கிறோம். மலேசிய மாநிலங்களிலிருந்து தாங்கள் வேறுபட்ட மாநிலம் என்பதைக் காட்டுவதே அவர்களின் நோக்கம். அது சரி என்பதே நமது கருத்தும் கூட.
இன்றிலிருந்து சரவாக் பிரதமர், முதலமைச்சர் என்கிற அந்தஸ்திலிருந்து விடுபடுகிறார்! இனி அவர் சரவாக் பிரதமர்! ஒரே அந்தஸ்து தான் என்றாலும் அழைக்கப்படும் முறை வேறு! ஒரு வித்தியாசமும் இல்லையே என்றாலும் வித்தியாசம் உண்டு என்பதே நமது பார்வை!