Thursday 3 March 2022

வயது ஒரு தடையல்ல!

 

      The Oldest Athlete, 102 year-old, Sawang Chanpraman of Thailand bagged two Gold Medals.

"சிட்டுக்குருவிக்கு என்ன கட்டுப்பாடு!" என்பது ஒரு சினிமாப் பாடல்.

வயதான 102 வயது மனிதருக்கு மட்டும் அப்படி என்ன கட்டுப்பாடு?  அவரும் கட்டுப்பாடற்ற மனிதனாக வயதான மனிதர்களுக்கான ஓட்டப் பந்தயங்களில் கலந்து கொண்டு தங்கப்பதக்கங்களை அள்ளிக் கொண்டு வருகிறார்! 

இதெல்லாம் நடக்கக் கூடிய காரியமா  என்று இங்கே நாம் பேசிக் கொண்டிருக்கும் நேரத்தில் தாய்லாந்தைச் சேர்ந்த அந்தப் பெரிசு அடுத்த தங்கப்பதக்குத்தான வேலையை ஆரம்பித்து விடுகிறார்! அடுத்த வேலைகளுக்காக நமது  கவனத்தைச் செலுத்திக் கொண்டு, கவனத்தைச் சிதறடிக்காமல் இருந்தால்  அப்புறம் என்ன நமது அடுத்த வெற்றியை நோக்கித்தான் நமது பயணம் அமையும்!

சாதனைகள் புரிவதற்கு நேரங்காலம் தேவையில்லை. சின்னவர் பெரியவர் என்று வயது வித்தியாசம் இல்லை.  சாதனைகள் புரிய வேண்டும் என்று எப்போது மனதில் தோன்றுகிறதோ உடனே வேலைகளை ஆரம்பித்து விடுவது தான்! அது தான் சாதனை மனிதர்களின்  முதல் வேலை! யாருக்காகவும் காத்திருப்பதில்லை!

தாய்லாந்து நாட்டின் ஓட்டப்பந்தய வீரர் என்றால் - 100 வயது - 105 வயது பிரிவுகளில்,  அவர் சவாங்காக மட்டும் தான் இருக்க முடியும். சவாங் தினசரி தனது 70 வயது மகளுடன் நடைப்பயிற்சி செய்கிறார். வெளியே தோட்டத்தில் சிறு சிறு வேலைகள் செய்கிறார்.

இந்த பயிற்சிகளின் மூலம் தனது உடல் ஆரோக்கியமாக இருப்பதாக அவர் கூறுகிறார். எப்போதும் போல உணவுகள் உண்கிறார். பசி இல்லை என்கிற பேச்சுக்கே இடமில்லை.

பந்தயங்களில் கலந்து கொள்வதற்கு முன்னர் ஒரு வாரத்திற்குப்   பயிற்சியை மேற்கொள்கிறார். இந்த ஒரு வாரத்திற்கு மட்டும் ஒவ்வொரு நாளும் காலை மாலை பயிற்சி செய்கிறார். கூடவே அவர் மகளும் உடன் இருக்கிறார்.

சாவாங் எப்போது நேர்மறையான எண்ணங்களை வளர்த்துக் கொண்டவர். எதிர்மறையான பேச்சுக்கே இடமில்லை.  பந்தயங்களில் கலந்து கொள்ளும் போது எல்லாரும் கூடி தேர் இழுப்பது போல ஒரே மகிழ்ச்சி, ஒரே ஆர்ப்பாட்டம் சின்னஞ்சிறுசுகள் போல் துள்ளிக் கொண்டு பந்தயங்களில் கலந்து கொள்வர்.

வயதானால் என்ன?  இளமையோடு இருக்கக்  கற்றுக்கொள்ள வேண்டியது தான்!

சாவாங் இன்னும் பல வெற்றிகளைக் காண  வேண்டும் என இறைவனை வேண்டுவோம்!


No comments:

Post a Comment