UMNO President Datuk Sri Mohamad Hassan
இந்த ஆண்டு 15 வது பொதுத் தேர்தல் நடத்த முடியுமா என்கிற சந்தேகம் இயல்பாகவே எழத்தான் செய்யும்.
காரணம் கொரோனா இன்னும் கட்டுப்பாட்டுக்கள் வரவில்லை. நாளுக்கு நாள் ஏற்றம் கண்டு தான் வருகிறதே தவிர இன்னும் குறைந்தபாடில்லை.
இந்த நேரத்தில் அம்னோ கட்சியினர் - அம்னோ தலைவர் குறிப்பாக - 15-வது பொதுத் தேர்தலை நடத்த பிரதமருக்கு நெருக்குதல் கொடுப்பதாக செய்திகள் உலவுகின்றன.
இன்றைய நிலையில், சரியோ தவறோ, ஏதோ ஓர் அடிப்படையில், அரசாங்கம் தட்டுத் தடுமாறினாலும் சுமூகமாக இயங்கிக் கொண்டிருக்கிறது. அடுத்த 15-வது பொதுத் தேர்தல் வரை அவர்கள் காலத்தை ஓட்ட வேண்டும் என்பது தான் பொது மக்களின் எதிர்பார்ப்பு. இதற்கிடையில் தேர்தல் நடத்த வேண்டும் என்கிற நெருக்கடி அம்னோவுக்கு ஏன் வந்தது என்பதற்கு என்ன காரணமாக இருக்கும்?
ஜொகூர் சட்டமன்றத் தேர்தலில் அம்னோ வெற்றி பெற்றால் பொதுத் தேர்தலை வைக்கும்படி அம்னோ பிரதமருக்கு இன்னும் அதிகமான நெருக்குதல் கொடுக்கும்! அதாவது அவர்களுக்கு இப்போது நல்ல நேரம் என்பது அவர்களின் கணிப்பு என்பதாக எடுத்துக் கொள்ளலாம்!
ஜொகூர் சட்டமன்றத் தேர்தல் என்பது தேர்தலோடு கொரோனாவையும் சேர்த்துப் பார்க்க வேண்டும். ஏற்கனவே நமக்குள்ள அனுபவப்படி இடைக்காலப் பிரதமர் முகமது யாசின் தனது ஆட்சியை எப்படி தக்க வைத்துக்கொண்டு தனது ஆட்சியை நீடித்துக் கொண்டாரோ அப்படி அதே முன்னுதாரணத்தை பிரதமர் இஸ்மாயிலும் பின்பற்றக்கூடிய வாய்ப்பு இருக்கிறது என்று அம்னோ நினைக்கிறது!
இன்னொரு முக்கியமான செய்தியும் உண்டு. இப்போது அமெரிக்காவில் 1MDB வழக்கு நடந்து கொண்டிருக்கிறது. முன்னாள் பிரதமர், முன்னாள் தேசிய வங்கியின் கவர்னர் போன்றவர்களின் பெயர்கள் எல்லாம் அடிப்பட்டுக் கொண்டிருக்கின்றன! இன்னும் என்ன என்ன வகையில் முன்னாள் பிரதமர் நஜிப்பின் பெயர் நாறடிக்கப்படுமோ என்பது பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். அவர் பெயர் நாறடிக்கப்பட்டால் அது இயல்பாகவே அம்னோவின் பெயரும் நாறடிக்கப்படும். அது அம்னோவுக்கு வருகின்ற தேர்தலின் தோல்விக்கு ஒரு காரணியாக அமையும் என்று அம்னோ அல்லது முகமட் ஹாசான் நினைக்கிறார்!
அதனால் அம்னோவில் உள்ள ஊழல்வாதிகளின் பெயர்கள் எல்லாம் இன்னும் அதிகம் வெளிவரும் முன்பே தேர்தலை நடத்திவிட்டால் கொஞ்சம் தப்பிக்கலாம் என்று அம்னோ கணக்குப்போடுகிறது!
ஆனால் மற்ற கட்சிகளும் சரி மக்களும் சரி தேர்தல் எப்போதும் போல குறிப்பிட்ட காலத்தில் பொதுத் தேர்தல் நடத்துவதையே விரும்புகின்றனர். சீக்கிரம் என்பதற்கு எந்த காரணிகளும் இல்லை. உலக மகா ஊழல்வாதிகளை மக்களும் தெரிந்து கொள்ள ஆவலாய் உள்ளனர்.
தேர்தலை உடனடியாக நடத்த வேறு எந்த முகாந்திரமும் இல்லை! அம்னோவில் உள்ள திருடவர்கள் வெளிச்சத்திற்குக் கொண்டு வருவதை அம்னோ விரும்பவில்லை.
பொதுத் தேர்தல் நடத்தப் பெறாது என்பதாகவே நான் நினைக்கிறேன். அதற்கான தேவையும் எழவில்லை. எதிர்க்கட்சிகளும் தேர்தல் தேவை என்று சொல்லவில்லை! மாமன்னரும் அதனை ஏற்றுக்கொள்ள மாட்டார்!
பொதுத் தேர்தல் நடக்காது!
No comments:
Post a Comment