கல்லூரிகளிலிருந்து புதிய கனவுகளோடு வெளியாகும் பட்டதாரிகளே! இதையும் கொஞ்சம் கவனியுங்கள்.
என்ன தான் உங்கள் படிப்பு அனைத்தும் தேசிய மொழியில் இருந்தாலும் நீங்கள் வேலைக்கு மனு செய்யும் போது ஆங்கிலத்தில் தான் மனு செய்ய வேண்டும் என்பது நீங்கள் கல்லூரிகளிலிருந்து வெளியாகும் போதே உங்களுக்கு "கிளிப்பிள்ளை" பாடம் சொல்லிக் கொடுத்திருப்பார்கள்!
அது தவறில்லை தான்! ஆனாலும் நீங்களும் அது சரிதானா அல்லது ஏதாவது மாறுதல்கள் செய்ய வேண்டுமா என்பதைக் கொஞ்சம் அலசி ஆராய வேண்டும். சில பேர் கணினியில் புகுந்து விளயாடுகின்றனர். எல்லாமே சரிதான்.
நமக்கும் கொஞ்சம் பொது அறிவு வேண்டும். நாம் என்ன வேலைக்கு மனு செய்கிறோம்; நாம் சரியாகத்தான் செய்கிறோமா அல்லது புரிந்து கொண்டு தான் செய்கிறோமா என்பதைச் சிந்தித்துப் பார்த்து நாம் செயல்பட வேண்டும்.
சிலர் மனு செய்வதைப் பார்க்கும் போது நமக்கும் பாவமாகத் தான் இருக்கிறது!
இதோ நமது பட்டதாரி மாணவர்களின் சில எடுத்துக்காட்டுக்கள்:
NATIONALITY; BLUE
NATIONALITY: INDIA
POSITION: APPLICATION FOR EXPECTED SALARY
இது போன்ற கோமாளித் தனங்கள் நிறையவே உண்டு!
பட்டதாரிகளே! உங்கள் ஆங்கிலத் திறன் பற்றி நாங்கள் அறிவோம்.பார்க்கப் போனால் உங்கள் ஆங்கில விரிவுரையாளர்களை விட உங்களுக்கு இன்னும் அதிக ஆங்கில அறிவு உண்டு! அவர்கள் உங்களுக்கு மலாய் மொழியில் தான் ஆங்கிலம் போதிக்கின்றனர்! மலாய் மொழியில் தான் பேசுகின்றனர்! நீங்கள் அவர்களை விட பல மடங்குகள் மேல்!
ஆனால் அவர்களோடு உங்களை ஒப்பிடாதீர்கள். அவர்களுக்கு நிரந்திர வேலை உண்டு. அவர்களுடைய ஆங்கிலத்திறனைப் பற்றி அவர்களுக்குக் கவலையில்லை! கல்லுரிகளும் கவலைப்படப் போவதில்லை! அது அவர்களுக்கு அரசியல்! நீங்கள் இப்போது தான் வேலை தேடுகிறீர்கள். ஆங்கிலப் பத்திரிக்கைகளைப் படித்து உங்களது ஆங்கிலத் திறனை வளர்த்துக் கொள்ளுங்கள்.
அரசாங்க வேலை தான் உங்கள் இலக்கு என்றால் இருக்கின்ற ஆங்கிலமே உங்களுக்குப் போதும்! ஆனால் தனியார் துறை என்றால் உங்களிடம் இன்னும் அதிகமாகவே ஆங்கிலத் திறனை எதிர்பார்க்கிறது.
எத்தனையோ விஜய் படங்களைப் பார்க்கிறோம்.எத்தனையோ கமலஹாசன் படங்களைப் பார்க்கிறோம். பல மணி நேரங்களை எப்படி எப்படியோ வீணடிக்கிறோம். நம் வாழ்க்கைக்குத் தேவையான ஒரு முக்கிய மொழியைக் கற்க சில மணித்துளிகளை ஒதுக்கி உங்கள் வாழ்க்கையை மேம்படுத்திக் கொள்ளுங்கள்! குறைந்த பட்சம் எப்படி வேலைக்கு மனு செய்வது என்பதையாவது கற்று, தெளிந்து மனு செய்யுங்கள்.
நீங்கள் வெர்றி பெற வாழ்த்துகள்!
Friday, 29 April 2016
Thursday, 28 April 2016
பெருசா..! பெருசா..!
டொனால்ட் ட்ரம்ப் ...உருவத்தில் மட்டும் பெரியவர் அல்ல. உயரத்தில் மட்டும் பெரியவர் அல்ல. எல்லா...எல்லாவற்றிலும் உயர்ந்த மனிதர்!
சின்ன சின்ன சங்கதிகளை எல்லாம் அவர் யோசித்துப் பார்ப்பதில்லை. எதைச் செய்தாலும் அது பெரியதாக இருக்க வேண்டும். பெரிசா...பெரிசா.. சிந்திக்கும் மனப்போக்குடையவர்.
ஆமாம்! உங்களுக்குப் பணம் தானே வேண்டும்? அப்புறம் ஏன் அதனைப் பிச்சைக்காரத்தனமாக யோசிக்கிறீர்கள்? பெரியதாகவே யோசியுங்கள். பெரிய அளவில் பணம் சம்பாதிக்க வேண்டும் என்று யோசியுங்கள்.
ஆமாம்! டொனால்ட் அப்படியே சிந்தித்து சிந்தித்துப் பழக்கப்பட்டவர். நம்மையும் அப்படியே சிந்திக்கும்படி தூண்டி விடுகிறார்!
டொனால்ட் அமரிக்காவில் மிகப்பெரிய தொழிலதிபர். ஹொட்டல்கள், சூதாட்ட மையங்கள், தொலைக்காட்சி தயாரிப்பு, சொத்துக்கள் விற்பனையாளர், எழுத்தாளர் என்று பன்முகம் கொண்ட மனிதர். கடைசியாக அரசியலிலும் காலடி எடுத்து வைத்திருக்கிறார். அமெரிக்க ஜனாதிபதியாக வருவாரா என்று பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
டொனால்டின் தந்தையாரின் தொழில் தச்சுத் தொழில். பின்னர் மலிவான வீடுகளைக்கட்டி அவைகளை நடுத்தர குடும்பங்களுக்கு விற்றும், வாடகைக்கு விட்டும் வந்தவர். ஆரம்பக் காலத்தில் டொனால்டும் அவருடன் சேர்ந்து தனது திறமைகளை வளர்த்துக் கொண்டவர். பின்னர், தனக்கு ஒரு பாதை, தனக்கு ஒரு வழி என்று பெரியதாக யோசிக்க ஆரம்பித்தார்.
அவர் தந்தையார் இறந்த போது அவரின் சொத்து மதிப்பு நானூறு மில்லியன் என்று மதிப்பிட்டாலும் அது மற்ற வாரிசுகளுக்கும் சேர்த்துத் தான். ஆனாலும் இப்போது டொனால்டின் சொத்துக்கள் அனைத்தும் அவரே சம்பாதித்தவை.
அதன் பின்னர் தான் வானளாவிய கட்டடங்கள், பிரமாண்ட .. பிராமாண்டமான பல கோடிகோடிகளைத் தாண்டும் திட்டங்கள் என்று அவர் செய்யாதவை ஒன்றுமில்லை. இப்படிப் பிரமாண்டங்களுக்கு நடுவே அவருக்குப் பலமான அடியும் விழுந்திருக்கிறது! அனைத்தையும் இழந்து, கையைப் பிசைந்து கொண்டு நிற்கையில் ஒரு விருந்துக்குப் போக வேண்டிய கட்டாயம். அங்கு அவர் ஒரு வங்கியாளரைச் சந்திக்க வேண்டி நேர்ந்தது. அந்த வங்கியாளர் டொனால்டுக்குத் தேவையான அறிவுரைகளை வழங்கி அவர் மீண்டும் தொழிலுக்குத் திரும்ப ஊக்கமூட்டினார். அதன் பின்னர் அவருக்கு அனைத்தும் வெற்றியே!
அந்தத் தோல்விக்குப் பின்னர் டொனால்டு நமக்குக் கொடுக்கும் அறிவுரை என்ன? "படித்துக் கொண்டே இருங்கள். தொழில் சம்பந்தமான புத்தகங்களைப் படித்துக் கொண்டே இருங்கள். உங்களுக்கு எங்காவது ஒரு பொறி தட்டும். அது போதும் மீண்டும் உங்களை எழுச்சிபெற செய்ய!"
பெருசோ! சிறுசோ! தோல்வி என்பது டொனால்ட் ட்ரம்ப்புக்கும் உண்டு! நமக்கும் உண்டு! மனம் தளராமல், வெற்றி பெறுவது தான் நமது நாட்டமாக இருக்க வேண்டும்!

Monday, 25 April 2016
கேள்வி - பதில் (9)
கேள்வி
தமிழகத் தேர்தலில் முதலமைச்சர் ஜெயலலிதாவை ஒர் இரும்புப் பெண்மணி என்பது போன்று வர்ணிக்கிறர்களே! உண்மை தானோ?
பதில்
உண்மை தான்! அவர் ஒருவர் தான் தமிழகத் தேர்தலில் தனி ஒரு பெண்மணியாக அத்தனை ஆண்களையும் எதிர்த்து வெற்றி கொண்டு வருகிறார் என்பதனைப் பார்க்கும் போது அது உண்மையாகத்தான் தோன்றுகிறது!
அவர் தேர்தலில் வெற்றிபெற்று ஆட்சி அமைத்தால் ஐந்து ஆண்டுகளில் பல்லாயிரம் கோடிகளை அவரால் சம்பாதிக்க முடிகிறது! பல்லாயிரம் கோடிகளை ஒருவர் சம்பாதிக்கும் போது அவரை இரும்பு, கரும்பு என்று நாம் சொல்லாவிட்டாலும் அந்தச் துணிச்சல், தைரியும் அனைத்தும் தானாக வந்து விடும்!
கண்ணதாசன் ஒரு பாடல் வரியில் "கையிலே பணம் இருந்தால் கழுதைக் கூட அரசனடி" என்று எழுதியிருப்பார்! நம்மிடம் ஒரு கோடி இருந்தால் நாம் கூட நம்மை இரும்பாகத் தான் நினைத்துக் கொள்ளுவோம்! பல கோடிகள் சம்பாதிப்பவர் எப்படி இருப்பார்? ஆணவம், திமிர் அனைத்தும் இருக்கத்தானே செய்யும்! அதனைத்தான் இரும்பு என்கிறோம்! அதுவும் பெண்ணாக இருப்பதால் கொஞ்சம் அதிகப்படியாகவே சொல்லுகிறோம்!
ஆனாலும் நாட்டுக்கு நல்லது செய்திருந்தால் அவரை இரும்புப் பெண்மணி என்று அழைப்பதில் நமக்கு ஆட்சேபனை இல்லை. செய்தவைகளோ அத்தனையும் ஊழல்கள்! ஏமாற்று வேலைகள்! அவர் இரும்புப் பெண்மணி அல்ல! ஊழல்களின் இரும்புக் கோட்டை!
Subscribe to:
Posts (Atom)