Monday, 25 April 2016
கேள்வி - பதில் (9)
கேள்வி
தமிழகத் தேர்தலில் முதலமைச்சர் ஜெயலலிதாவை ஒர் இரும்புப் பெண்மணி என்பது போன்று வர்ணிக்கிறர்களே! உண்மை தானோ?
பதில்
உண்மை தான்! அவர் ஒருவர் தான் தமிழகத் தேர்தலில் தனி ஒரு பெண்மணியாக அத்தனை ஆண்களையும் எதிர்த்து வெற்றி கொண்டு வருகிறார் என்பதனைப் பார்க்கும் போது அது உண்மையாகத்தான் தோன்றுகிறது!
அவர் தேர்தலில் வெற்றிபெற்று ஆட்சி அமைத்தால் ஐந்து ஆண்டுகளில் பல்லாயிரம் கோடிகளை அவரால் சம்பாதிக்க முடிகிறது! பல்லாயிரம் கோடிகளை ஒருவர் சம்பாதிக்கும் போது அவரை இரும்பு, கரும்பு என்று நாம் சொல்லாவிட்டாலும் அந்தச் துணிச்சல், தைரியும் அனைத்தும் தானாக வந்து விடும்!
கண்ணதாசன் ஒரு பாடல் வரியில் "கையிலே பணம் இருந்தால் கழுதைக் கூட அரசனடி" என்று எழுதியிருப்பார்! நம்மிடம் ஒரு கோடி இருந்தால் நாம் கூட நம்மை இரும்பாகத் தான் நினைத்துக் கொள்ளுவோம்! பல கோடிகள் சம்பாதிப்பவர் எப்படி இருப்பார்? ஆணவம், திமிர் அனைத்தும் இருக்கத்தானே செய்யும்! அதனைத்தான் இரும்பு என்கிறோம்! அதுவும் பெண்ணாக இருப்பதால் கொஞ்சம் அதிகப்படியாகவே சொல்லுகிறோம்!
ஆனாலும் நாட்டுக்கு நல்லது செய்திருந்தால் அவரை இரும்புப் பெண்மணி என்று அழைப்பதில் நமக்கு ஆட்சேபனை இல்லை. செய்தவைகளோ அத்தனையும் ஊழல்கள்! ஏமாற்று வேலைகள்! அவர் இரும்புப் பெண்மணி அல்ல! ஊழல்களின் இரும்புக் கோட்டை!
Labels:
கல்கண்டு
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment