Monday, 30 May 2016
ஒரு குடும்பத்திற்கு ஒரு வர்த்தகர்!
ஒரு குடும்பத்திற்கு ஒரு வர்த்தகர் என்னும் உயரிய நோக்கத்தை முன்னெடுத்திருக்கிறது எண்ட்ரிகோஸ் நிறுவனம்.
அதன் நிறுவனர் எஸ்.கே.சுந்தரம் அவர்களுக்கு முதலில் நமது வாழ்த்துக்கள். காரணம் தொழிற்துறையில் வேற்றி பெற்றவர்கள் தமது அனுபவங்களையும் அதன் ஏற்றத்தாழ்வுகளையும் தமது இனத்தாரோடு பகிர்ந்து கொள்ளுவது என்பது சாதாரணமான விஷயம் அல்ல. மீண்டும் அவருக்கு நமது பாராட்டுக்கள்!
எண்ரிகோஸ் நிறுவனம் தொடங்கபட்டு 25 ஆண்டுகள் ஆகின்றன. உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் அவர்களது பால்மாவு, நெய், ஐடாப் டீ, சோயா மேட், சுராபி மசாலா பொருட்கள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.
இந்திய இளைஞர்கள் பொருளாதாரத்தில் உயர வேண்டும், ஊக்கப்படுத்த வேண்டும் என்னும் உயரிய நோக்கத்தோடு நாடு முழுவதும் வர்த்தக பயணத்தை மேற்கொள்ளுகிறது எண்ரிகோஸ் நிறுவனம்.
ஒவ்வொரு ஊரிலும் நடைபெரும் வியாபாரக் கருத்தரங்கில் இளைஞர்கள் வியாபாரத்தில் ஈடுபட ஊக்குவிக்கப்படுவர். இந்த வியாபாரக் கருத்தரங்கில் கலந்து கொள்ளும் இளைஞர்களில் 50 பேர் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு சனி. ஞாயிற்றுக் கிழமைகளில் பயிற்சி அளிக்கப்படும் என்கிறார் திரு. சுந்தரம்.
திரு.சுந்தரம் அவர்கள் நல்லதொரு முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார். வருகிற ஜூன் மாதம் முதல், 4 (நான்கு) மாதங்களுக்கு நாடு முழுவதும் 25 நகரங்களில் அவரது வர்த்தகப் பயணம் நடைபெறவுள்ளது. முதல் நிகழ்வு ஜூன் மாதம் 4-ம் தேதி டான்ஸ்ரீ சோமா அரங்கில் காலை 8.30 முதல் மாலை 5.30 வரை நடைபெறும்.
18 வயதிற்கு மேற்பட்ட, வியாபாரத்தில் ஆர்வமுள்ள இளைஞர்கள், வியாபாரத்தில் ஈடுபட்டுள்ளவர்கள், வியாபாரத்தை மேம்படுத்த விரும்பவர்கள் அனைவரும் இந்த கருத்தரங்கில் கலந்து கொள்ளலாம்.
நுழைவு இலவசம். ஆனால் முன்பதிவு அவசியம். முன்பதிவு செய்வோர் மட்டுமே அனுமதிக்கப்படுவர்.
எண்ரிகோஸின் இந்த வர்த்தகப் பயணத்திற்கு மலேசிய நண்பன் நாள் இதழும் மின்னல் எப் எம்மும் பிரதான ஆதரவாளர்கள். அதே சமயத்தில் நமது ஆதரவும் சேர்ந்தால் ஒரு எழுச்சிமிக்க வர்த்தக சமூகத்தை நம்மால் உருவாக்க முடியும்.
மேல் விவரங்களுக்கு இவர்களைத் தொடர்பு கொள்க: மதன் 017-4488556
கார்த்திக் 014-3495900.
நன்றி: நண்பன்
இப்படியும் ஒரு வழியிருக்கு! (2)
பத்தாங்காலி தமிழ்ப்பள்ளியில் பள்ளி மாணவிகளிடம் காலித்தனமாக நடந்து கொண்ட மலாய்மொழி ஆசிரியர் என்ன ஆனார்?
வேறு தமிழ்ப்பள்ளிக்கும் அவர் மாற்றப்படவில்லை. ஆனால் மாநிலக்கல்வி இலாகாவிற்கு அவர் பாதுகாப்பாக மாற்றப் பட்டிருக்கிறார்! அதுவும் தற்காலிகமே! வேறு தமிழ்ப்பள்ளி தோதாக அமையும் வரை அவர் அங்குப் பணிபுரிவார். அவர் மேல் எந்த நடவடிக்கையும் கல்வி அமைச்சு இதுவரை எடுக்கவில்லை!
இதன் தொடர்பில் மலேசியத் தமிழ்ப்பள்ளிகளின் முதன்மை அமைப்பாளர் பாஸ்கரன் கூறும் போது தனக்கும் இந்த விவகாரத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை எனக் கைவிரித்துவிட்டதாக செய்தி ஒன்று கூறுகின்றது. அதே சமயத்தில் மாநிலத் தமிழ்ப்பள்ளிகளின் அமைப்பாளர் டேனியல் அமலதாஸ் - மேலதிகாரிகளின் உத்தரவின்றி கருத்துரைக்க முடியாது - என்று அவரும் பட்டும் படாமலும் பேசியதாக மேலும் அந்தச் செய்தி கூறுகின்றது. துணைக் கல்வி அமைச்சர் கமலநாதன் தனது அம்னோ எஜமானர்கள் வாய்த் திறக்கச் சொன்னால் தான் வாய் திறப்பார்! ம.இ.கா. தலைவருக்கும் அதே நிலை தான்! குனிந்த தலை இன்னும் நிமிரவில்லை!
இதனிடையே சமூக ஆர்வலர்கள் பலர் அந்த மலாய்மொழி ஆசிரியர் மீது பெற்றோர்கள் காவல்துறையனிரிடம் புகார் செய்ய வேண்டும் என வற்புறுத்துகின்றனர். எந்தப்புகாரும் செய்யாமலேயே காவல்துறையினர் பல பிரச்சனைகளைக் கையில் எடுத்திருக்கின்றனரே, இதனை மட்டும் ஏன் எடுக்கவில்லை, என்று கேட்பவர்களும் உண்டு!
புகார் செய்வது என்பது சாதாரணமாக இருக்கலாம். ஆனால் அதன் விளைவுகளைப் பார்க்க வேண்டும். இது இந்தியர் சம்பந்தப்பட்ட விஷயம். அதிலும் தமிழ்ப்பள்ளி மாணவிகள். காவல்துறையினர் அந்த ஆசிரியரை விசாரிக்கப் போவதில்லை. அந்த மாணவிகளை விசாரிப்பதில் தான் கூடுதல் கவனம் செலுத்துவர். அவர்கள் பெண் போலிஸை வைத்து விசாரிக்கப் போவதில்லை. காவல்துறையினர் அந்த மாணவிகளைக் கேலி கிண்டல்களோடு தான் அவர்கள் விசாரணை நடத்துவர். ஆசிரியரை அவர்களைத் தட்டிக் கொடுப்பர்! ஆக, இந்த நிலையில் பெற்றோர்கள் புகார் செய்வது அவர்களே தங்கள் தலையில் மண்ணை வாரிப்போட்ட கதை தான்!
ஒரு விஷயம் நமக்கு ஆச்சரியமாக இருக்கிறது. ஒரு மலாய் ஆசிரியர் என்பதற்காக எத்தனை தில்லுமுல்லு வேலைகள் மேலிருந்து கீழ் மட்டம் வரை செயல்பட்டுக் கொண்டிருக்கிறது, பாருங்கள்!
கல்வி அமைச்சின் தலையீடு, மாநிலக் கல்வி இலாக்காவின் தலையீடு, தமிழ் அமைச்சர்கள் வாய் திறக்காமல் இருக்கத் தலையீடு, தமிழ்ப்பள்ளிகளின் அமைப்பார்கள் தலையிடாமல் இருக்கத் தலையீடு, பள்ளித் தலமையாசிரியர் தலையிடாமல் இருக்கத் தலையீடு,பெற்றோர் ஆசிரியர் சங்கம் தலையிடாமல் இருக்கத் தலையீடு - அடாடா! - ஒரு கயவனைத் தண்டிக்காமல் இருக்க எத்தனை கட்டுப்கோப்பாக வேலை செய்கிறார்கள்! ஒரு நல்ல காரியத்திற்கு இப்படி கட்டுக்கோப்புடன் வேலை செய்தால் நாம் மகிழ்ச்சி அடையலாம்.
ஓர் ஆசிரியருக்கு இவ்வளவு அடைக்கலம் கொடுக்கும் அதிகாரிகள் ஒரு விஷயத்தை மறந்துவிட்டார்கள். நாளை அவர்கள் வீட்டுப் பிள்ளைகளுக்கு இது நடக்காது என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை! இப்போது அவர்கள் தமிழ்ப்பள்ளி மாணவிகள் என்பதால் மிகவும் அலட்சியும் காட்டுவதும், கேலியும் கிண்டலாகப் பிரச்சனையை அணுகுவதும் அவர்களுக்கு அது ஒரு தற்காலிக மகிழ்ச்சியை அளிக்கலாம். நாளை அதுவே அவர்களுக்கு ஒரு பெரிய தண்டனையாக மாறும் என்பதை அவர்கள் எப்போதும் மனதில் இறுத்திக்கொள்ள வேண்டும்!
இதனைக் கல்வி அமைச்சினர் ஒரு விளையாட்டாகக் கருதுவதாகவே நமக்குத் தோன்றுகிறது. பள்ளிகளில் சமயப் பாடங்கள் தினம் தினம் போதித்தாலும் இது போன்ற நிகழ்ச்சிகளும் நடந்து கொண்டு தான் இருக்கின்றன. அதுவும் ஆசிரியர்களே தவறான நடத்தை உள்ளவர்களாக இருப்பதை பார்க்கும் போது சமயப்பாடங்களும் ஒரு கண்துடைப்பு தானோ என்னவோ, தெரியவில்லை!
இந்த மலாய் ஆசிரியரின் பிரச்சனை ஒரு முடிவுக்குக் கொண்டு வரபட்டுவிட்டதாக நான் நினைக்கவில்லை. எவ்வளவு தான் ஓர் ஆசிரியரின் தவறான செய்கைகளை மூடி மறைக்க முயன்றாலும் அது ஒரு நாள் வெடிக்கத்தான் செய்யும்! இதுவே ஒரு சீனப்பள்ளியில் நடந்திருந்தால் இந்நேரம் அந்த ஆசிரியர் எங்கு இருப்பார் என்பதை நம்மால் ஊகிக்க முடியவில்லை! அனைத்து சீன மக்களுமே பொங்கி எழுந்திருப்பார்கள்! தமிழ்ப்பள்ளி என்பதால் அவருக்கு இப்போது நல்ல நேரம்!
பொறுத்திருப்போம்; உண்மை உறங்குவதில்லை!
Saturday, 28 May 2016
இந்தோனேசிய பெண்களா..? ஓர் எச்சரிக்கை!
நம் நாட்டுக்கு வெளி நாடுகளிலிருந்து வேலை செய்ய வருபவர்கள் ஏராளம்! ஏராளம்! அதே போல வெளி நாடுகளிலிருந்து வேலை செய்ய வரும் பெண்களும் கணிசமான அளவில் இருக்கின்றனர். அதிலும் குறிப்பாக இந்தோனேசியப் பெண்களே முதலிடம் வகிக்கின்றனர்.
இங்கு வருகின்ற இந்தோனேசியப் பெண்கள் பலர் இங்குள்ள ஆண்களை விரும்பித் திருமணம் செய்வது என்பது ஒரளவு நடந்து கொண்டு தான் இருக்கிறது. தவறு ஏதும் இல்லை! அது அவர்களது உரிமை.
சில அனுபவசாலிகள் தருகின்ற சில தகவல்கள் நமக்கு மகிழ்ச்சியளிக்கவில்லை. இந்த இந்தோனேசியப் பெண்கள் பலர் வறுமையானப் பின்னணியிலிருந்து வருபவர்கள். அவர்கள் தங்களது குடும்பங்களுக்காக உழைக்க வந்தவர்கள். அவர்கள் குடும்பத்தின் முன்னேற்றம் அவர்களுக்கு முக்கியம்.
இங்கு அவர்கள் திருமணம் செய்து கொண்டாலும் கூட அவர்கள் அவர்களின் குடும்பத்திற்குச் செய்ய வேண்டிய கடமைகளை மறப்பதில்லை. மறக்கவும் முடியாது! மறுக்கவும் முடியாது!
ஆனால் கொடுக்கப்படுகின்ற செய்தி என்னவென்றால் இவர்கள் தங்களது மாந்திரீகத்தின் மூலம் அவர்களின் கணவர்களை அடிமையாக்கி இருவரும் சம்பாதிக்கும் பணத்தை எடுத்து அவர்கள் இந்தோனேசியாவிற்கு அனுப்பி விடுகிறார்களாம்! கணவரோ ஏதோ ஒப்புக்குச் சப்பாணி யாக - பணம் பறிக்கும் இயந்திரமாக - பயன்படுத்திவிட்டு கணவர்களை 'அம்போ' என்று விட்டுவிட்டுப் போய் விடுகிறார்களாம்! அவர்கள் முஸ்லிம்கள் என்பதால் இங்கே விவாரகத்துச் செய்துவிட்டு இந்தோனேசியா போய் புதிய வாழ்க்கையைத் தொடங்கிவிடுகிறார்கள்!
இது பெரும்பாலும் இந்தோனேசிய முஸ்லிம் பெண்கள் மட்டுமே கடைப்பிடிக்கும் ஒரு நடைமுறை. ஆனால் கிறித்துவ, இந்து சமய இந்தோனேசியப் பெண்களிடம் இது போன்ற நடைமுறை இல்லை. காரணம் விவாவகரத்து என்பது அவர்களிடம் இல்லை!
அனைத்து இந்தோனேசியப் பெண்களும் இப்படித்தான் என்று சொல்ல வரவில்லை. ஆனால் எச்சரிக்கையாயிருப்பது நல்லது அல்லவா!
Subscribe to:
Posts (Atom)