தீபாவளிக்கு இரண்டு நாள் விடுமுறை வேண்டும் எனக் கேட்பதில் தவறு ஏதும் இருப்பதாகத் தெரியவில்லை.
இந்நாட்டின் முக்கிய பெரும்பான்மை இனங்கள் என்றால் அது மலாய், சீனர், இந்தியர் என்று வரிசைப்படுத்தலாம். அந்த இரண்டு இனத்தவருக்கும் பெருநாள் காலங்களில் இரண்டு நாள் விடுமுறை என்பது வழக்கமான ஒன்றாகி விட்டது.
ஆனால் தீபாவளி என்னும் போது என்ன காரணத்தை வைத்து அன்று, ஒரு நாள் விடுமுறை, என்று ஒரு நிலையை உருவாக்கினாகளோ நமக்குத் தெரியவில்லை. எங்கோ ஒரு தவறு நடந்திருக்கிறது. அந்தத் தவற்றை இன்னும் தொடர்ந்து கொண்டே இருக்க வேண்டும் என்று நினைப்பது தீபாவளி கொண்டாடுபவர்களைச் சிறுமைப்படுத்துகின்ற ஒரு செயல் என்று தான் சொல்ல வேண்டும். இதில் பெரிய இனம் சிறிய இனம், உயர்ந்த இனம் தாழ்ந்த இனம் என்றெல்லாம் ஒன்றுமில்லை.
நாம் அனைவரும் மலேசியர், அவ்வளவு தான். அனைத்து இனங்களுக்கும் சம உரிமை உண்டு. மலாய்க்காரர் சீனர் போல இந்தியர்களுக்கும் அந்த உரிமை உண்டு. மூன்று இனங்களுக்கும் அந்த இரண்டு நாள் உரிமை உண்டு. இப்போது ஒரு சாரார் முழுமையாக அந்தத் தீபாவளி பெருநாளை அனுபவிக்க முடிவதில்லை. ஒரு நாள் விடுமுறை. அடுத்த நாள் வேலை! அடுத்த நாள் வேலைக்கு முதல் நாளே தீபாவளி அன்றே மூட்டை முடிச்சுக்களைக் கட்டிக் கொண்டு புறப்பட வெண்டும்! மிகவும் ஒரு இக்கட்டான சூழலில் தான் இந்து பெருமக்கள் தீபாவளியைக் கொண்டாட வேண்டியுள்ளது.
நாம் கேட்பதெல்லாம் மற்ற இனத்தவருக்கு எப்படி அவர்களின் பெருநாளின் போது இரண்டு நாள் விடுமுறையோ அதனையே தீபாவளிக்கும் கொடுக்கப்பட வேண்டும் என்பதே நமது வேண்டுகோள். அதுவும் பெரும்பாலும் தீபகற்ப மலேசியா மட்டுமே.
இதனைத் தொடர்ந்து ஒரு பிரச்சனையாகவே இழுத்தடித்து, நாறடித்துக் கொண்டே போவதைவிட அதற்கு ஒரு முடிவை பக்கத்தான் அரசாங்கம் கொண்டு வர வேண்டும்.
எங்களது உரிமைகள் பல கடந்த காலங்களில் மறைக்கப்பட்டு விட்டன. பறிக்கப்பட்டு விட்டன. ஒடுக்கப்பட்டு விட்டன. இது தொடர்வது யாருக்கும் நல்லதல்ல,
இப்போது நாங்கள் விரும்பிய அரசாங்கம் நாட்டை ஆள்கிறது. நாங்கள் விரும்பிய தலைவர்கள் அரசாங்கத்தில் இருக்கிறார்கள்.
இந்த ஆண்டு இரண்டு நாள் விடுமுறை, நம்புகிறோம்!
Tuesday, 30 October 2018
அம்னோவுக்கு எதிர்காலம் உண்டா...?
இப்போது மலேசியர்களிடம் உள்ள ஒரு கேள்வி "அம்னோ இன்னும் எத்தனை நாளைக்கு உயிர் பிழைக்கும்?" என்பது தான்.
போகிற போக்கைப் பார்க்கின்ற போது அம்னோ இனி தாக்குப் பிடிப்பது கடினம் என்று தான் தோன்றுகிறது! டாக்டர் மகாதிர் அம்னோவை ஒழித்துக்கட்டுவதை முதன்மைக் குறிக்கோளாகக் கொண்டிருக்கிறார்.
இப்போது அம்னோவில் நடக்கின்ற சம்பவங்களைப் பார்க்கின்ற போது அதற்கு சீக்கிரம் ஒரு முடிவு உண்டு என கணிக்கலாம் அம்னோவின் நாற்பது நாடாளுமன்ற உறுப்பினர்கள் வெகு விரைவில் டாக்டர் மகாதிரின் பெர்சாத்து கட்சியில் இணைவார்கள் என பெர்சத்துவின் உச்சமன்ற உறுப்பினர் காதிர் ஜாசின் கூறுகிறார். இந்தச் செய்திக்கும் மகாதிருக்கும் சம்பந்தமில்லை எனச் சொன்னலாம் இது நடக்கக் கூடிய சாத்தியம் உண்டு என அரசியல் பார்வையாளர்கள் கணிக்கின்றனர்.
அரசியலில் எதுவும் நடக்கலாம். அதுவும் அம்னோவில் இருக்கின்ற மேல்தட்டு வர்க்கத்திற்கு எந்த நேரத்திலும் எதுவும் நடக்கலாம் என்று ஒவ்வொருவரும் வயிற்றில் புளியைக் கரைத்துக் கொண்டு ஒவ்வொரு நிமிடமும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்! காரணம் லஞ்சம், ஊழல், வரவுக்கு மேல் செலவு, லண்டனில் ஷாப்பிங், பாரிசில் பசியாறல் என்று சுகபோக வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கும் அவர்களுக்கு இப்போது புகலிடம் ஒன்றே ஒன்று தான். அது தான் டாக்டர் மகாதிரின் பெர்சாத்து கட்சி!
ஆனாலும் பெர்சாத்துவில் அவர்கள் வரவேற்கப்படுகிறார்களே தவிர அவர்களின் ஊழல்கள் வரவேற்கப்படவில்லை! அதனை அவர்கள் ஊழல் தடுப்பு ஆணையத்தில் நிருபித்து நல்ல சுதந்திர மனிதராக பெர்சாத்துவில் வலம் வரலாம். ஆனால் அம்னோவில் கிடைத்த அரவணைப்பு, மரியாதை எல்லாம் இங்குக் கிடைப்பது கடினம்.
அம்னோவுக்கு எதிர்காலம் உண்டா என்னும் கேள்விக்கு இப்போதே நாம் பதில் சொல்லலாம். எதிர்காலம் இல்லை என்றே சொல்லலாம். கட்சியை வழி நடத்த நம்பகமான தலைவர் இல்லை. மக்கள் ஆதரவு பெற்ற தலைவர் இல்லை. பொதுவாக அம்னோவில் உள்ள தலைவர்களைத் திருடர்கள் என்று பார்க்கின்ற அளவுக்கு நிலைமை விபரீதமாகப் போய்விட்டது!
எதிர்காலம் இல்லை!

Monday, 29 October 2018
பெர்சாத்து இன்னொரு அம்னோ..?
டாக்டர் மகாதிர் தலைமையில் இயங்கும் பெர்சாத்து கட்சி இப்போது திசை மாறுகிறதோ என்று எண்ண வேண்டியுள்ளது.
அது ஒரு தனி கட்சியாக அரசாங்கத்தில் இடம் பெறாத கட்சியாக இருந்தால் அது பற்றி யாரு கவலைப்படப் போவதில்லை. அது அவர்களுடைய பாடு என்று விட்டு விடலாம். ஆனால் நிலைமை அப்படி இல்லை.
இருக்கின்ற அம்னோ நாடாளுமன்ற உறுப்பினர்கள் எல்லாம் பெர்சாத்துவில் சேர்வதில் தவறு இல்லை. அம்னோவே ஒன்றுமில்லாமல் போனாலும் தவறில்லை. ஆனால் அங்கிருந்து பெர்சாத்துவில் சேர்ந்து அவர்கள் அமைச்சர்களானால் அது சரியாகப்படவில்லை. அவர்கள் பழைய அம்னோ அமைச்சர்கள் என்பதால் அவர்களுக்குப் பதவி கொடுக்கப்பட வேண்டும் என்பதில் எந்த நீதியும் இல்லை.
அவர்களுக்கு அமைச்சர் பதவி கொடுப்பதும் அவர்கள் கடந்த காலங்களில் செய்த ஊழல்கள் அனைத்தையும் மறைப்பதும் சரியான செயலாகப்படவில்லை.
பெர்சாத்துவில் சேர்பவர்கள் சேரட்டும். அதில் நமக்கு ஒன்றும் கருத்து வேறுபாடில்லை. ஆனால் அவர்களுக்கு எந்தப் பதவியும் - குறிப்பாக எந்த அமைச்சர் பதவியும் - கொடுக்கக் கூடாது என்பதில் பெர்சாத்துவே கவனமாக இருக்க வேண்டும். அவர்கள் சாதாரண உறுப்பினர்களாக இருந்து மக்களுக்குச் சேவை செய்யட்டும். அதனை நாம் வரவேற்போம். சேவை செய்யத் தானே அவர்கள் அரசியலுக்கு வந்தார்கள், அதனால் அவர்கள் அமைச்சர் பதவியை ஏற்காமல் சேவைக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்பது ஏற்றுக் கொள்ளத் தக்கது தானே!
அதோடு மட்டும் அல்ல. அவர்கள் அனைவருமே ஊழல் புரிந்தவர்கள் அல்லர் என்பதாக ஊழல் தடுப்பு ஆணையத்திடமிருந்து நற்சான்றிதழ் பெற்றவர்களாகவும் இருக்க வேண்டும். இது விளையாட்டுத் தனமான காரியம் அல்ல. காரணம் அம்னோ என்றாலே எம்மருங்கிலும் ஊழல் என்றாகிவிட்டது! அக்கட்சியை அப்படியெல்லாம் நம்பிவிட முடியாது.
நாம் சொல்ல வருவதெல்லாம் அம்னோ கட்சியினரை வரவேற்பதில் ஒரு கட்டுப்பாடு இருக்க வேண்டும். அவர்களின் பின்னணி ஆராயப்பட வேண்டும். அவர்களின் சொத்துக்கள், எத்தனை பெண்டாட்டி பிள்ளைகள், எத்தனை பாலியல் பின்னணிகள் அனைத்தும் ஆராய்ந்த பின்னரே அவர்கள் பெர்சாத்துவில் இணைக்கப்பட வேண்டும், அதுவும் சாதாரண உறுப்பினராக!
துங்கு ரசாலி சொல்லுவது போல "கோழிக்கூண்டுக்கள் நரியை விடுவது போல!"
Subscribe to:
Posts (Atom)