தீபாவளிக்கு இரண்டு நாள் விடுமுறை வேண்டும் எனக் கேட்பதில் தவறு ஏதும் இருப்பதாகத் தெரியவில்லை.
இந்நாட்டின் முக்கிய பெரும்பான்மை இனங்கள் என்றால் அது மலாய், சீனர், இந்தியர் என்று வரிசைப்படுத்தலாம். அந்த இரண்டு இனத்தவருக்கும் பெருநாள் காலங்களில் இரண்டு நாள் விடுமுறை என்பது வழக்கமான ஒன்றாகி விட்டது.
ஆனால் தீபாவளி என்னும் போது என்ன காரணத்தை வைத்து அன்று, ஒரு நாள் விடுமுறை, என்று ஒரு நிலையை உருவாக்கினாகளோ நமக்குத் தெரியவில்லை. எங்கோ ஒரு தவறு நடந்திருக்கிறது. அந்தத் தவற்றை இன்னும் தொடர்ந்து கொண்டே இருக்க வேண்டும் என்று நினைப்பது தீபாவளி கொண்டாடுபவர்களைச் சிறுமைப்படுத்துகின்ற ஒரு செயல் என்று தான் சொல்ல வேண்டும். இதில் பெரிய இனம் சிறிய இனம், உயர்ந்த இனம் தாழ்ந்த இனம் என்றெல்லாம் ஒன்றுமில்லை.
நாம் அனைவரும் மலேசியர், அவ்வளவு தான். அனைத்து இனங்களுக்கும் சம உரிமை உண்டு. மலாய்க்காரர் சீனர் போல இந்தியர்களுக்கும் அந்த உரிமை உண்டு. மூன்று இனங்களுக்கும் அந்த இரண்டு நாள் உரிமை உண்டு. இப்போது ஒரு சாரார் முழுமையாக அந்தத் தீபாவளி பெருநாளை அனுபவிக்க முடிவதில்லை. ஒரு நாள் விடுமுறை. அடுத்த நாள் வேலை! அடுத்த நாள் வேலைக்கு முதல் நாளே தீபாவளி அன்றே மூட்டை முடிச்சுக்களைக் கட்டிக் கொண்டு புறப்பட வெண்டும்! மிகவும் ஒரு இக்கட்டான சூழலில் தான் இந்து பெருமக்கள் தீபாவளியைக் கொண்டாட வேண்டியுள்ளது.
நாம் கேட்பதெல்லாம் மற்ற இனத்தவருக்கு எப்படி அவர்களின் பெருநாளின் போது இரண்டு நாள் விடுமுறையோ அதனையே தீபாவளிக்கும் கொடுக்கப்பட வேண்டும் என்பதே நமது வேண்டுகோள். அதுவும் பெரும்பாலும் தீபகற்ப மலேசியா மட்டுமே.
இதனைத் தொடர்ந்து ஒரு பிரச்சனையாகவே இழுத்தடித்து, நாறடித்துக் கொண்டே போவதைவிட அதற்கு ஒரு முடிவை பக்கத்தான் அரசாங்கம் கொண்டு வர வேண்டும்.
எங்களது உரிமைகள் பல கடந்த காலங்களில் மறைக்கப்பட்டு விட்டன. பறிக்கப்பட்டு விட்டன. ஒடுக்கப்பட்டு விட்டன. இது தொடர்வது யாருக்கும் நல்லதல்ல,
இப்போது நாங்கள் விரும்பிய அரசாங்கம் நாட்டை ஆள்கிறது. நாங்கள் விரும்பிய தலைவர்கள் அரசாங்கத்தில் இருக்கிறார்கள்.
இந்த ஆண்டு இரண்டு நாள் விடுமுறை, நம்புகிறோம்!
No comments:
Post a Comment