மலேசியாவில் தமிழ்ப்பள்ளிகளின் எதிர்காலத்தைப் பற்றியான ஒரு கட்டுரையை மலாக்கா முத்துக்கிருஷ்ணன் தமிழ் மலர் நாளிதழில் எழுதியிருந்தார்.
மிகவும் தெளிவான ஒரு கட்டுரை. தமிழ்ப்பள்ளிக்கூடங்கள் சம்பந்தமாக அரசியல் அமைப்பு என்ன சொல்லுகிறது, எதிர்த்துப் பேசுபவர்கள் நிந்தனைச் சட்டத்திற்கு உள்ளாக்கப்படுவர் என்ப்தெல்லாம் தெளிவாகக் குறிப்பிட்டிருக்கிறார். உள்ளதை உள்ளபடி சொல்லியிருக்கிறார்.
வாழ்த்துகள் நண்பரே! காரணம் இந்தத் தெளிவு என்னிடம் இல்லை. இப்போது தான் நான் அறிய வருகிறேன். நமது சமூகத்தினர் அனைவரும் நமது உரிமைகளைத் தெரிந்து வைத்திருக்க வேண்டும். அதுவும் மொழி என்கிற போது அவசியம் தெரிந்து வைத்திருக்க வேண்டும்.
ஆனால் நிந்தனைச் சட்டம் பாயும் என்று தெரிந்தும் இப்போது அவரவர் விருப்பத்திற்குப் பேச ஆரம்பித்து விட்டார்களே! அது யாருடைய குற்றம்? நாம அம்னோவைத்தான் குறை சொல்ல வேண்டி வரும்! ஆமாம்! அவர்களுடைய ஆண்டு கூட்டங்களில் எத்தனையோ முறை இந்த நிந்தனைப் பேச்சுக்கள் பேசப்பட்டிருக்கின்றன. ஆனால் அவர்கள் மீது எந்தச் சட்டமும் பாயவில்லையே! அப்போதைய அரசாங்கம் அவர்களுக்குப் பாதுகாப்பு கொடுத்தது என்று தாராளமாகச் சொல்லலாம். அதிலும் பினாங்கு "காக்காய்கள்" அதிகமாகவே சத்தம் போட்டன! அவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை! எடுக்கவும் துணிச்சலில்லை! காரணம் மறைமுகமாக அவர்களுக்கு ஆதரவு கொடுத்தனர்!
அரசாங்க ஆதரவு இருப்பதனால் இப்போது யார் வேண்டுமாலும் பேசலாம் என்கிற துணிச்சல் அனைவருக்கும் வந்து விட்டது! அதனால் தான் பாஸ் கட்சியில் உள்ள அம்மையார் ஒருவர் கடுமையான விமர்சனத்துக்கு உள்ளானார். இவர் அரபு மொழிதெரிந்தவர் அனைவரும் அரபு படிக்க வேண்டும் என்கிறார்! நமது நாட்டின் சரித்திரம் அறியாத இது போன்ற பத்தாம்பசலிகள் இருந்தால் நாடு என்ன ஆகும் என்பது நமக்குப் புரியவில்லை! படித்தவர். மேற் கல்வி படித்தவர். பொறுப்பான தொழிலில் உள்ளவர். இனங்களிடையே ஒற்றுமையை வளர்க்க வேண்டியவர்.ஆனால் இவர் பேசுவதோ வெறுப்பைத் தூண்டும் பேச்சு! இவர் என்னஆன்மீகவாதி என்று நமக்குப் புரியவில்லை!
இப்போது நம்மிடையே ஒரு கேள்வி உண்டு. இது போன்று பேசுபவர்களை இன்றைய அரசாங்கம் என்ன செய்யப் போகிறது? இது வரை ஒன்றும் செய்யவில்லை. இனி மேலும் ஒன்று செய்யாது என்றே தோன்றுகிறது!
எது எப்படி இருந்தாலும் சரி தமிழ்ப்பள்ளிகள் தொடரும் என்பதே உண்மை! மாற்றுக் கருத்து இல்லை!
Sunday, 30 June 2019
மலேசிய ஏர்லைன்ஸ் ... என்ன ஆகும்?
மலேசிய ஏர்லைன்ஸ் நிறுவனம் மூடுவிழா காணும் நிலையில் இருக்கிறது! ஆமாம்! கடனில் தத்தளித்துக் கொண்டிருக்கும் அந்த நிறுவனத்தை என்ன செய்யலாம் என்று யாருக்கும் தெரியவில்லை!
முன்பு வாய் கிழியப் பேசியவர்கள் எல்லாம் இப்போது வாய் மூடி பேசா மடந்தையாகி விட்டார்கள்! ஒருவருக்கும் பேசத் தகுதியில்லை!
இது போன்ற பெரிய நிறுவனங்களையெல்லாம் யார் வேண்டுமானாலும் நடத்தலாம் என்கிற எண்ணத்தை யாரோ ஒரு சிலர் விதைத்து விட்டார்கள்! அப்போது அதைக் கேட்க நமக்கும் ,மகிழ்ச்சியைக் கொடுக்கத்தான் செய்தது.
ஆனாலும் இப்போது புரிகிறது. வெறும் சவடால் தனம் எதற்கும் உதவாது! அனுபவம் வேண்டும். அப்படி இல்லையென்றாலும் முழு ஈடுபாடு வேண்டும். அரசியல் தலையீடு கூடாது. மதங்களைப் புறம் தள்ள வேண்டும். எங்கள் இனம் மட்டும் தான் என்கிற இன வெறி இருக்கக் கூடாது.
மாஸ் விமானத்தின் ஆரம்ப காலம் சிறப்பாகத் தான் இருந்தது என்பதை மறுப்பதற்கில்லை. அப்போது அதற்குத் தலைமையேற்றவர் ஒரு இந்தியர் என்பதாலேயே அவர் ஓரங்கட்டப்பட்டார்! ஒரு பெருந்தொழிலின் ஆரம்ப காலம் என்பது எவ்வளவு சிக்கலானது என்பது நமக்கும் ஓரளவு புரியும். ஆனாலும் அனாவசியமாக அவரை ஒதுக்கிவிட்டு ....... அப்புறம் என்னன்னவோ நடந்தது! கடைசியில் இன்றைய நிலைக்குக் கொண்டு வந்து விட்டது! இப்போது அந்தரத்தில் தொங்கிக் கொண்டிருக்கிறது!
இப்போது மூத்த பத்திரிக்கையாளர் காதிர் ஜாசின் ஒரு கருத்தைச் சொல்லி இருக்கிறார். மாஸ் விமானத்தை ஏர் ஏசியா விமான நிறுவனம் வாங்கினால் என்ன என்று அவர் கேட்டிருக்கிறார். நிச்சயமாக அது ஒரு நல்ல கருத்து என்பதில் ஐயமில்லை. முன்பெல்லாம் இப்படி ஒரு கருத்தைச் சொல்லியிருந்தால் பெரிய ஆர்ப்பாட்டமே நடந்திருக்கும்! இப்போது அந்த ஆர்ப்பட்டவாதிகள் எங்கே போனார்கள் என்று தெரியவில்லை! இப்போது மலேசியாவில் இயங்கிக் கொண்டிருக்கும் விமானங்கள் அனைத்தும் இலாபகரமாகத் தான் ஓடிக் கொண்டிருக்கின்றன! மாஸ் மட்டும் தான் விதிவிலக்கு!
ஏர் ஏசியாவுக்கு அதனை ஏற்று நடத்தும் வாய்ப்பு வந்தாலும் வரலாம் என்றே தோன்றுகிறது. வெளி நாட்டுக்காரர்களுக்கு விற்பதை விட உள்நாட்டு ஏர் ஏசியாவுக்கு விறபதையே பலர் விரும்புகிறார்கள். இது ஒரு மானப் பிரச்சனை நாட்டின் நலன் முக்கியம்.
ஒன்று மட்டும் உறுதி. டோனி பெர்னாண்டஸ் ஏர் ஏசியா வை வாங்கும் போது அவர் எந்த விமான நிறுவனங்களையும் நடத்தவில்லை. விமான சேவைக்குப் புதியவர். வெற்றி பெற்றார் என்றால் அது அவருடைய உழைப்பு. உழைப்பு, உழைப்பு!
டோனி இன்னொரு இரண்டு வெள்ளி நிறுவனத்தை வாங்குவாரா என்று பார்ப்போம்!

Saturday, 29 June 2019
ம.இ.கா.வை நம்பலாமா...?
ம.இ.கா.வை நம்புவது என்பதெல்லாம் சாதாரண விஷயமா?
இது வரை ம.இ.கா.வினரை நம்பலாம் என்பதற்கான அறிகுறி எதுவும் இல்லை! எந்தத் தடயமும் கிடைக்கவில்லை!
ஆகக் கடைசியாக படித்த செய்தி நல்ல செய்தியாக இருந்தாலும் திருப்திகரமான செய்தியாக இல்லை. ஏய்ம்ஸ்ட் பல்கலைக்கழகம் ம.இ.கா.வின் கட்டுப்பாட்டில் வந்திருப்பதாக சொல்லப்படுகிறது.
வந்திருக்கலாம். இல்லை என்று சொல்லவில்லை. இவர்களை எப்படி நம்புவது என்று தான் சொல்ல வருகிறேன். இவர்கள் வதந்திகளைப் பரப்புபவர்கள். இவர்கள் சொல்லுவதையெல்லாம் நம்பித்தான் இந்த சமுதாயத்திற்கு இன்று இந்த நிலை! ம.இ.கா.வின் கட்டுப்பாட்டில் வந்திருக்கிறதாஅல்லது ம.இ.கா. வில் உள்ள ஒரு சிலரின் கட்டுப்பாட்டில் வந்திருக்கிறதா என்று நாம் ஐயப்படுவதில் எந்தத் தவறுமில்லை. அந்த அளவுக்குத் தான் அவர்கள் மீது நமக்கு மரியாதை!
ஒரு செய்தி நம்மைக் கவருகிறது! நடந்து முடிந்த எம்ஐடி கூட்டத்தில் வடிவேலு, வீரசிங்கம், கோ.ராஜு, ராகவன் போன்றோர் தோல்வியைத் தழுவியதாக கூறப்படுகிறது. ம.இ.கா. தலைவர் விக்னேஸ்வரனின் அணியினரின் வெற்றி பெற்றனர். அப்படி வெற்றி பெற்றவர்களில் எம்.சரவணன், டி.மாரிமுத்து, எல்.கிருஷ்ணன், டி.மோகன், டி.சிவராஜா, அசோஜன், எஸ்.கே.தேவமணி, பி.கமலநாதன், உஷா நந்தினி ஆகியோர் வெற்றி பெற்றனர்.
இதில் முக்கியமாக கவனத்தில் கொள்ள வேண்டியது முன்னாள் ம.இ.கா. தலைவர் துன் சாமிவேலு இந்தக் கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை. ஆனால் அவர் தேர்தலில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டதாம்!
இங்கே நாம் கவனிக்க வேண்டியது முன்னாள் எம்.ஐ.டி.யின் நிர்வாகத்திற்கும் இப்போது தலைமை ஏற்றிருக்கும் நிர்வாகத்திற்கும் அப்படி என்ன பெரிய வித்தியாசம்? யாராவது ஒருவர் ...ஒரே ஒருவர் ... இவர் யோக்கியமானவர் என்று நம்மால் சொல்ல முடியுமா! அதே குட்டைகள்! அதே மட்டைகள்! இவர்களைப் பார்க்கும் போது ஏதோ கடத்தல் கும்பல் என்கிற எண்ணம் தான் நமக்குத் தோன்றுகிறதே தவிர அப்படி ஒன்றும் சமுதாயத்தைக் காக்க வந்தவர்கள் போல் தோன்றவில்லை!
இல்லை! நான் நம்பவில்லை! ஏதோ அந்தப் பல்கலைக்கழகத்தின் நிர்வாகத்தில் ஒரு சில மாற்றங்கள் ஏற்பட்டிருக்கலாம். அது ம.இ.கா. வின் சொத்தாக மாற்றம் ஏற்பட்டிருக்கும் என்பதை நான் நம்பவில்லை. அது இன்னும் குறிப்பிட்ட ஒரு சிலரின் சொத்தாகத்தான் இருக்கும். அதற்குத் தானே துன் சாமிவேலு தேவைப்படுகிறார்!
இப்போது ம.இ.கா.வின் சொத்துக்கள் அனைத்தும் மக்களின் சொத்துக்கள் அல்ல. தனிமனிதர்களின் சொத்துக்கள்! அவ்வளவு தான்!

Subscribe to:
Posts (Atom)