மலேசியர்கள் ஒரு சில விஷயங்களை விளையாட்டாக` எடுத்துக் கொள்கின்றனர்.
அதில் ஒன்று தான் 'பொம்பா' எனப்படும் தீயணைப்பு துறை. ஒரு சில தினங்களுக்கு முன்னர் ஒரு சிறிய தீ விபத்து. அதனை அங்குள்ளவர்களே அணைத்து விடலாம். அவ்வளவு சாதாரண விபத்து. ஆனால் அதற்காக தீயணைப்புப் படையினரையே அழைத்து 'கசா,முசா' செய்துவிட்டனர்! ஒரு வேளை அவர்கள் செய்ததற்குப் பயம் காரணமாக இருக்கலாம்!
இப்போதோ அதீத வெயிற் காலம். தாங்க முடியாத அளவுக்கு வெக்கை. தீ என்றால் அனைவருக்குமே பயம் ஏற்படுகிறது! எப்படி தீ ஏற்படுகிறது என்கிற விபரமே இல்லை. எப்படியோ தீ ஏற்பட்டுவிடுகிறது. அது சிறிதா,பெரிதா என்று யோசிக்க நேரமில்லை. பக்கம் பக்கம் வீடுகள். வீடுகள் சேதமடையலாம். அதனால் பொம்பா வை அழைப்பது பாதுகாப்பு என்கிற நிலையில் தான் ஒரு வேளை அங்குள்ள வீட்டார் அழைத்திருக்கலாம்.
நம்முடைய ஆலோசனை எல்லாம் வெயில் காலங்களில் தீ மூட்டாதீர்கள். அப்படி செய்வதென்றால் தணணீரைப் பாதுகாப்புக்காக வைத்துக் கொள்ளுங்கள். கொஞ்சம் மீறினால் தண்ணிரைக் கொண்டு நெருப்பை அணைத்து விடுங்கள்.
ஆனால் இது போன்ற வெயில் காலங்களில் தீ இடுகின்ற பழக்கம் வேண்டாம். இது போன்ற நேரத்தில் தான் தீயணைப்புத் துறையினர் இங்கும் அங்கும் மிகவும் பரபரப்பாக இருக்கின்ற நேரம். அந்த நேரத்தில் இப்படி தேவையற்ற விஷயங்களில் தீயணைப்பு வீரர்களைத் திசை திருப்புவதை நாம் தவிர்க்க வேண்டும். அப்படி செய்வதால் நமக்குத்தான் ஆபத்து என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
நாம் வாழும் இடத்தில் தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம், நாம் தேவையற்ற முறையில் அவர்களைத் திசை திருப்புவதால், சில அவசரமாக செல்ல வேண்டிய இடங்களுக்குச் செல்ல முடியாமல் அவர்கள் தாமதாக வருவதற்குப் பொது மக்கள் தான் காரணமாக இருக்கிறார்கள் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
ஏன் நமது குழந்தைகள் கூட பெற்றோருக்குத் தெரியாமல் சும்மா தமாஷ் பண்ணுவதற்கு தீயணைப்பு நிலையங்களுக்குக் கூப்பிட்டு விளையாடுவதை முன்பெல்லாம் நாம் கேள்விப்பட்டிருக்கிறோம். இப்போது கைப்பேசிகள் வந்துவிட்ட நிலையில் விளையாட்டுத்தனமான அவசர அழைப்புகள் வருவது குறைந்திருக்கும் என நம்புகிறோம்.
தீயணைப்பு நிலையங்கள் என்னும் போது, பொது மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் அவர்களை தேவையற்று அழைப்பதின் மூலம் அவர்கள் தங்கள் பணிகளைச் செய்ய விடாமல் தடையாக, தடைக்கல்லாக இருக்கிறோம்.
தீயணைப்பு என்பது நாட்டின் முக்கியமான ஒரு துறை. அதுவும் இது போன்ற வெயிற் காலங்களில் அவர்களுடைய சேவை என்பது நாட்டிற்கு முக்கியத் தேவை உண்டு. அவர்களின் நேரத்தை வீணடித்து விடாதீர்கள் என்பது தான் நமது கோரிக்கை.
No comments:
Post a Comment