மலேசிய உலாமாக்கள் சங்கம் சொல்ல வருவது நமக்குப் புரிகிறது. இஸ்ராயேலுக்கு ஆதரவான நிறுவனங்களைப் பறக்கணியுங்கள் என்பது சரியானது தான். நாம் எந்த வகையிலும் இஸ்ராயேலை ஆதரிக்கப் போவதில்லை.
ஆனால் நாம் ஒரு சிக்கலான நிலையில் இப்போது இருக்கின்றோம். இன்று நாட்டில் வேலையில்லாப் பிரச்சனை என்பது மிக மோசமான நிலையில் இருக்கின்றது. நமது மக்கள் வேலை தேடி வெளிநாடு போகின்றனர். இன்று நமது அண்டை நாடான சிங்கப்பூர் தான் நமது மக்களுக்கு வேலைகளைக் கொடுத்துக் கொண்டிருக்கிறது.
இங்கு இருக்கின்ற வாய்ப்புக்களையெல்லாம் வெளிநாட்டவருக்குத் தாரைவார்த்தைக் கொடுத்து விட்டோம். அது நமது அரசியல்வாதிகளின் தாராள மனதைக் காட்டுகிறது. ஆனால் இப்போது நாம் சிங்கப்பூரிடம் கையேந்துகிறோம்.
நாம், சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் பொருட்களை வேண்டாமென்றால் புறக்கணிக்கலாம். வேண்டுமா வேண்டாமா எனபதைப் பொது மக்களிடமே விட்டுவிடுங்கள். தடை போடாதீர்கள். யாரையும் தூண்டிவிடாதீர்கள்.
இதனை நீங்கள் சராசரி மனிதர்களின் கோணத்திலிருந்து பார்க்க வேண்டும். இந்த நிறுவனங்களில் வேலை செய்பவர்களின் குடும்பங்களையும் ஒரு கணம் யோசித்துப் பார்க்க வேண்டும். அவர்கள் வேலை பார்த்தால் தான் சோறு வேலையில்லாவிட்டால் துணி கூட மிஞ்சாது! அவர்களெல்லாம் மாதம் முடிந்தால் சம்பளம் பெறுபவரில்லை. சாப்பாடு அவர்கள் மேசைக்கு வராது. அனைத்தையும் கவனத்தில் கொள்ள வேண்டியிருக்கிறது.
அவர்கள் நிறுவனங்கள் நடக்கட்டும். அவர்களின் பொருட்கள் வேண்டுமா வேண்டாமா என்பதை மக்களே தீர்மானிக்கட்டும்.
No comments:
Post a Comment