"நல்ல காலம் பிறக்குது" எனபது குடுகுடுப்பைகாரர்களின் நம்பிக்கையூட்டும் சொற்கள். நம்ம ஊரில் நான் எந்த குடுகுடுப்பைக்காரரையும் பார்த்ததில்லை. எல்லாம் தமிழ் சினிமா மூலம் தெரிந்து கொண்டவைகள் தாம்.
சேவல் கூவுவதைப் பார்த்திருக்கிறோம். அதுவும் நம்பிக்கைத் தரும் வார்த்தையை நமக்குக் கூறுகிறது. நலல நேரம்! நல்ல நேரம்! என்று கூவுகிறது! நாம் தான் அதனைப் புரிந்து கொள்வதில்லை!
அந்த சேவலைப் பாருங்கள். காலையில் எழுந்ததும் என்ன சுறுசுறுப்பு. "நேராமாயிருச்சி" என்று சொல்லி ஊர் மக்களையே எழுப்பி விடுகிறதே! நமக்கு மட்டும் ஏன் அந்த சுறுசுறுப்பு என்பதே வருவதில்லை? காலையில் நாம் காட்டுகிற அந்த சுறுசுறுப்புதான் அன்று மாலை முழுவதும் நம்மோடு இருக்கும் என்பதை நாம் எப்போது உணரப்போகிறோம்?
ஒன்றை கவனித்திருக்கிறீர்களா? சேவல் நடக்கும் போது அதன் கம்பீரம், அதன் ராஜநடை, நலையைத் தூக்கிக் கொண்டு, நெஞ்சை நிமிர்த்திக்கொண்டு நடக்குமே! காலை நேரத்தில் நாமும் அப்படி நடந்தால் எப்படி இருக்கும்? காலையிலேயே கம்பீரமாக நடந்து பழகலாமே. கம்பீரம் இருந்தால் தான் நாலு பேர் நம்மைப் பார்த்துப் புன்னகையாவது புரிவார்களே!
ஒரு சிலர் காலை நேரத்திலேயே உடம்பில் தெம்பே இல்லாமல் நடப்பதைப் பார்க்கிறோம். இதைத்தான் "விடியா மூஞ்சி" என்பார்கள். இவன் முகத்துல முழிச்சாலே தரித்திரம் தான் பிடிக்கும் என்பார்கள்!
காலை நேரம் என்றால் குளித்து, கொஞ்ச அழகு படுத்தி, வேலைக்குப் போவதோ, வெளியே போவதோ பார்ப்பதற்கு அழகாக இருக்கும். காலை நேரம் அப்படித்தான் இருக்க வேண்டும். காலை வேளையில் இந்த சேவல் மட்டும் அல்ல உங்களது நாய், பூனைகளைப் பாருங்கள். சும்மா உடலை ஒரு முறுக்கு முறுக்கி, உடலை ஓருதரம் உதறித்தள்ளி தன்னை சுறுசுறுப்பாக வைத்துக் கொள்ளும். நம்மைச் சுற்றி உள்ள அனைத்தும் சுறுசுறுப்பாக இருக்கும் போது நாமும் அப்படித்தான் இருக்க வேண்டும்.
நல்ல நேரம் பிறக்குது, நல்ல காலம் பிறக்குது!
No comments:
Post a Comment