இப்போதும் ஊழல்கள் குறைந்து விட்டதாக எந்த அறிகுறியும் இல்லை. என்னவோ சிலர் பிடிபடுகிறார்கள். சிலர் தப்பித்து விடுகிறார்கள். ஆனாலும் மேட்டுக்குடி மக்கள் அரசியலை வைத்து ஏற்கனவே கோடிகோடியாக குவித்தவர்கள் இருக்கிறார்கள். அவர்கள் மீது கைவைக்க முடியவில்லை.
அப்படியே கைவைத்தாலும் அவர்களைக் கைது செய்ய முடியவில்லை.. காரணம் அரசியல் திருடன் தான் மாட்டிக் கொள்ளாதவாறு மிக எச்சரிக்கையாய் இருப்பான்!
எப்படியோ ஊழல்வாதிகளின் மேல் கைவைக்க முடியாது என்று தெரிந்துவிட்டது. அவர்களிடமிருந்து பணத்தையும் கறப்பது அவ்வளவு எளிதல்ல.
ஒரே வழிதான் உண்டு. அது தான் அவர்களை மண்டியிட வைக்கும்.. அவர்களின் சொத்துக்களின் மீது கைவயுங்கள். சொத்துக்களிலிருந்து எந்த வருமானமும் வராதவாறு முடக்கிவிடுங்கள். முற்றிலுமாக அரசாங்க சொத்துக்களாக அவை மாற வேண்டும். அப்போது தான் இந்தக் கொள்ளைக்காரர்களுக்குப் புத்திவரும். வேறு வழிகளில் இவர்களைத் திருத்த வழியில்லை! இந்த அரசியல்வாதிகளிடம் உள்ள சொத்துக்களே போதும் இந்த நாட்டில் உள்ள பொருளாதார சிக்கல்களைத் தீர்த்துவிடும்!
இவர்களிடம் எந்த தயவு தாட்சண்யத்தையும் எதிர்ப்பாரக்கக் கூடாது. அது தான் நாட்டு நலனுக்கு நல்லது. இவர்கள் பதவியில் இருந்தபோது மக்கள் நலனில் எந்த அக்கறையையும் காட்டவில்லை. பணம் ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டு செயல்பட்டனர். இப்போது அவர்களுக்குத் தண்டனை, அவ்வளவுதான்.
வேறுவகையில் நாம் இவர்களைத் தண்டிக்க முடியாது. திருத்தவும் முடியாது. ஆனால் இவர்களுக்குத் தண்டனை அவசியம். அரசன் அன்று கொல்வான் தெய்வம் நின்று கொல்லும் என்பதிலும் இவர்களுக்கு நம்பிக்கையில்லை.
அரசாங்கம் மனம் வைத்தால் ஊழலை ஒழிக்க முடியும். முடியாது என்பதாக ஒன்றுமில்லை.
No comments:
Post a Comment