கெடா மாநிலம் பாரிசான் கட்சி ஆட்சியில் இருக்கும் வரை பினாங்கு மாநிலத்தில் தண்ணீர் பிரச்சனை எழவில்லை!
அப்போது அனைவரும் மலேசியர். பாரிசான் கட்சி ஆட்சியில் இருந்த போதும் பாஸ் கட்சியினரும் ஆட்சியில் பங்கு பெற்றிருந்தனர். அனைவரும் மலேசியர் என்பது தான் அவர்களது கோட்பாடாக இருந்தது.
ஆனால் ஒரு மாநிலம் தனது கட்டுப்பாட்டுக்குள் வந்தால் என்ன நடக்கும் என்பதை அவர்கள் கெடா மாநிலத்தை ஆட்சி செய்யும் விதத்திலிருந்து தெரிந்து கொள்ளலாம்.
பாஸ் கெடா மாநிலத்தைத் தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்ததுமே இரண்டு இந்து கோவில்களை உடைத்துத் தள்ளினர்! முதலில் தாங்கள் சொர்க்கத்திற்குப் போகும் வழியை உறுதிப்படுத்திக் கொண்டனர். இந்துக் கோவில்களை உடைத்தால் சொர்க்கம். இது அவர்கள் வேதம் சொல்லுவதாக சொல்லி வேதத்தையும் வேதனைக்கு உள்ளாக்குகிறார்கள்!
அதன் பின்னர் பினாங்கு மாநிலத்துடனான நீர் பிரச்சனை. விலையைக் கூட்டுவோம், நீரை நிறுத்துவோம் போன்ற ஒரு காசுக்கும் உதவாதப் பிரச்சனை. நீரை நிறுத்த உங்களுக்குத் தைரியம் உண்டா என்று நாம் கேட்டாலும் உள்ளூற பயப்பட வேண்டியுள்ளது! இவர்கள் நம்ப முடியாதவர்கள். தண்ணீரை நிறுத்திவிட்டு வேதம் இப்படி சொல்லுகிறது என்றால் நாம் என்ன செய்ய முடியும்? நாம் என்ன வேதத்தைப் படிக்கவா போகிறோம்?
மக்களைத் திசை திருப்புவதற்கு பாஸ் கட்சியினர் எதனையும் செய்யத் தயாராய் இருக்கிறார்கள்! அதிலும் குறிப்பாக மதம் என்பதைப் பயன்படுத்துவதே மக்களின் வாயை அடைக்கத்தான்! அது தான் எளிதான வழி.
அவர்களால் எங்கு பினாங்கிற்குத் தண்ணீர் கொடுக்கக் கூடாது என்பதாக எழுதியிருக்கிறது என்பதைச் சுட்டிக்காட்ட முடியும்! நம்மால் அது முடியாது. தோல்வியை ஒப்புக்கொள்ள வேண்டும்!
பாஸ் கட்சியினர் ஆட்சிக்குவருவதை யாரும் விரும்புவதில்லை. அவர்கள் எல்லாக் காலங்கிலும் இனம், மொழி, சமயம் இவைகளை வைத்து மக்களைப் பிரித்துப் பார்ப்பவர்கள். அழிவு சக்திகளோடு தான் அவர்களுடைய தொடர்புகள் இருக்கும். குறிப்பாக ஆப்கானிஸ்தான் நாடுடனான தொடர்பு. அதற்கு ஒரே காரணம் அந்த நாட்டில் பெண்கள் கல்வி கறக முடியாத ஒரு சூழல். இவர்களும் பெண்கள் கல்வி கற்பதை விரும்பாதவர்கள்.
ஆமாம் பினாங்கிற்குத் தண்ணிர் கிடைக்குமா? இது சாதாரண கேள்வி அல்ல. தண்ணீர் பிரச்சனை நாடுகளிடையே இல்லை. அது சுமுகமாக நடந்து கொண்டிருக்கிறது. ஆனால் ஒரு சில நாடுகளில் மாநிலங்களுக்கு இடையே பிரச்சனைகள் இருக்கின்றன. அவர்களோடு நமது நாட்டு கெடா-பினாங்கையும் இப்போது சேர்த்துக் கொள்ளலாம்!
இத்தனை ஆண்டுகள் இல்லாத ஒரு பிரச்சனையைக் கையில் எடுத்திருக்கிறது பாஸ் கட்சி. வருகிற 15-வது பொதுத் தேர்தலோடு இவர்கள் ஆட்டம் முடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது! நல்லதொரு ஆட்சி அமைந்து சரியான பேச்சு வார்த்தை நடத்தி இந்தப் பிரச்சனைக்கு ஒரு தீர்வு காண வேண்டும்.
பிரச்சனைகளுக்குத் தீர்வுகாணாமல் எடுத்ததெற்கெல்லாம் சமயத்தை வம்புக்கு இழுப்பது இவர்களுடைய பாணி.
தண்ணீர் கிடைக்கும் என உறுதியாக நம்பலாம்!
No comments:
Post a Comment