Friday, 2 September 2016
பசுபதி சார்! உங்களை நாங்கள் நம்புகிறோம்!
பசுபதி சார்! நாங்கள் உங்களை நம்புகிறோம்!
உங்களை நம்பக்கூடாது என ஒரு பத்திரிக்கை வரிந்து கட்டிக்கொண்டு எழுதுவதை நாங்களும் பார்த்துக்கொண்டு தான் இருக்கிறோம்.
அவர்கள் எழுதட்டும். அவர்களை நாம் ஒன்றும் செய்ய முடியாது என்பது அவர்களுக்கும் தெரியும். அதனால் இன்னும் வீர்யத்தோடு எழுதிக் கொண்டிருக்கிறார்கள்.
முதல் நிலையில் இருக்கும் பத்திரிக்கை என்பது அவர்களது பலம். அந்தப் பலத்தை அவர்கள் தக்க வைத்துக்கொள்ள வேண்டும் என்பது அவர்களின் கட்டாயம்! அவர்கள் கீழே விழுந்தால் அவர்களை மிதித்துப் போட நிர்வாகம் தயாராக இருக்கிறது! அதனால் எப்பாடுப் பட்டாவது தங்களைத் தற்காத்துக் கொள்ள வேண்டும்.
அதனால் தான் இது தான் வாய்ப்பு என்று 'பிடி! பிடி!'' என்று பிடித்துக் கொண்டு பிடி கொடுக்காமல் ஓட்டிக் கொண்டிருக்கிறார்கள்! பாவம்! அப்படியாவது அவர்கள் வாழட்டும்!
உங்களைப் பற்றி எங்களுக்குத் தெரியும். உங்களுடைய பணி என்ன என்பது உங்களுக்குத் தெரியும். இது போன்ற சலசலப்புக்களுக்கெல்லாம் நீங்கள் அஞ்ச மாட்டீர்கள் என்பதும் எங்களுக்குத் தெரியும்.
பாவம்! அவர்கள் தொழில் அப்படி! கொஞ்சம் ஏமாந்தால் அவர்கள் இடத்தை இன்னொருவன் பிடித்துக் கொள்ளுவான்! அவர்கள் தான் என்ன செய்வார்கள்? அவர்கள் வாழ்க்கை அப்படித்தான்.யாரைத் தாக்க வேண்டும், யாரைத் தூக்க வேண்டும் என்றெல்லாம் அவர்களிடம் ஒரு பட்டியல் கொடுக்கப்பட்டிருக்கிறது! அதனைத் தான் அவர்கள் பின்பற்றுவார்கள்!
நீங்கள் மட்டும் அல்ல. அவர்கள் பட்டியலில் செம்பருத்தி கா.ஆறுமுகம் போன்றோரும் இருக்கிறார்கள்!. தாக்குவதற்கு மூலை முடுக்குகள் எல்லாம் வலைப்போட்டுக் கொண்டிருக்கிறார்கள்!
அதனால் சொல்லுகிறேன். அவர்களை மன்னியுங்கள். நீங்கள் செய்கின்ற பணி மிக முக்கியமான ஒரு பணி. நமது இளைஞர்கள் குண்டர் கும்பல் கலாச்சாரத்திலிருந்து விடுபட வேண்டும். அதனை நீங்களும் உங்கள் குழுவினரும் மிகச் சிறப்பாகச் செய்கிறீர்கள்> உங்கள் பணி தொடர வேண்டும். உங்களைத் திசை திருப்பும் முற்சிகள் முறியடிக்கப்பபட வேண்டும்.
உங்களின் பணி தமிழுக்கும், தமிழருக்கும், தமிழ்ப்பள்ளிக்கூடங்களுக்கும் தேவை,
பசுபதி சார்! நாங்கள் உங்களை நம்புகிறோம்!
Labels:
நடப்பு
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment