Monday, 1 January 2018
இது தமிழரின் புத்தாண்டு!
இந்தப் புதிய 2018 புத்தாண்டு தமிழரின் மேன்மையைப் புலப்படுத்தும் புத்தாண்டு என்பதில் ஐயமில்லை. இவ்வாண்டு தமிழ் உலகில் எங்கும் வெற்றி! வெற்றி! என்னும் குரல் ஒலிக்கப் போகும் புத்தாண்டு! தமிழர்கள் விழிப்போடும் செழிப்போடும் செயல்படும் புத்தாண்டு!
நமது குரல் திக்கெட்டும் ஒலிக்கும். நமது புகழ் உலகெங்கும் எத்ரொலிக்கும். நமது மொழி இன்னும் அதிகமாகப் பயன்பாட்டுக்கு வரும். தமிழரின் சதனைகள் உலகளவில் பேசப்படும்.
சிறுபான்மை என்றாலும் சிறுத்தையாகச் செயல்படுவோம்! பெரும்பான்மை என்றாலும் பெருநாகமாக உருவெடுப்போம்!
இது தமிழர் ஆண்டு. வரப்போகும் ஆண்டுகள் அனைத்தும் தமிழர் ஆண்டு. இனி தமிழன் முன்னோக்கித் தான் பயணிப்பான். இனிப் பின் வாங்கப் போவதில்லை.
பொருளாதாரம் தமிழர் கையில். இனி அதுவே நமது ஆதாரம். இனி நாம் பிச்சை எடுக்கப்போவதில்லை. மற்றவனுக்கு நாம் வேலைக் கொடுப்போம். தொழில்கள் தொடுங்குவோம். உலகெங்கும் தொழில்களைக் கொண்டு செல்லுவோம். இனி தொழிலே நமது மந்திரம்.
வேலை வேலை என்று அலைந்தது போது. இனி அனைத்தும் சொந்த முயற்சி! இனி தமிழன் என்றால் முயற்சி என்று பொருள். இனி தமிழன் உலகை வெல்வான்! வியாபார உலகை வெல்வான். ஒவ்வொரு தமிழனும் ஒரு யூதனைப் போல! வியாபாராம் வியாபாரம் என்பதே அவன் மூச்சு; அவன் பேச்சு.
தமிழன் வெற்றி பெறுவான். இனி தோல்வி என்பது இல்லை. மீண்டும் அவனது சரித்திரம் எழும். தரித்திரம் விழும். இனி சரித்திரம் படைப்பான். தரித்திரம் தலை தெறிக்க ஓடும்!
நினவிற் கொள்ளுங்கள். இது தமிழன் சரித்திரம் படைக்கும் ஆண்டு. இது வழக்கம் போல வந்து போகிற புத்தாண்டு அல்ல! புதிய சரித்திரம் படைக்கும் புத்தாண்டு.
இது தமிழனின் புத்தாண்டு. புத்தம் புதிய புத்தாண்டு. புறப்பட்டு விட்டான் தமிழன். புதிய உலகம் படைக்க! எழு தமிழா! எழு! சரித்திரம் படைப்போம்! சாதனைப் படைப்போம்! சாகசம் படைப்போம்!
நன்றி! நன்றி! நன்றி!
Labels:
நடப்பு
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment