Saturday, 6 January 2018
அத்தான்..! என் அத்தான்...!
அத்தான்! என்னும் சொல் எப்போது வழக்கத்திற்கு வந்தது? நிச்சயமாக இது சினிமாவில் இருந்து தான் நம்முடைய பேச்சு வழக்கத்திற்கு வந்தது என்பது மட்டும் நமக்குத் தெரியும்.
அத்தான் என்னும் சொல் வருவதற்கு முன் மனைவி, கணவனை எப்படி அழைத்தார்? மாமா! என்பது வழக்கமான சொல். அதனை விடுத்து ஏங்க! ஏங்க! என்பதாக இருக்கலாம்! சினிமாவில் சுவாமி! என்னும் சொல் காதில் விழுந்ததாக நினைவுகள் உண்டு!
பழைய சினிமாக்கள் பெரும்பாலும் புராணப் படங்களாகவே தயாரிக்கப்பட்டு வெளி வந்ததால் சுவாமி என்னும் சொல் தவிர்க்கபடாததாகவே தொடர்ந்து வந்தன. அத்தோடு மேலும் சில சொற்களும் புராணக் காலத்துச் சொற்கள் தொடர்ந்து பயன்படுத்தப் பட்டன.
சான்றுக்கு: பிராணநாதா, ஸ்வாமி, சஹியே, தவஸ்ரேஸ்டரே என்பது புராணப் படங்களுக்கு ஏற்ற சொற்களாகவே இருந்தன. ஆனாலும் அந்தக் காலக் கட்டத்திலும் கூட ஒரு புதுமையைப் புகுத்தினார் புரட்சிக்கவிஞர் பாரதிதாசன். அவர் கதை வசனம் எழுதிய "ஆயிரம் தலை வாங்கிய அபூர்வ சிந்தாமணி" படத்தில் தான் அவர் "அத்தான்" என்னும் சொல்லைப் பயன்படுத்தினார். அதன் பின்னர் அவரே காதல் காவியம் என்று வர்ணிக்கப்பட்ட "பொன்முடி" என்னும் படத்திலும் "அத்தான்" என்னும் சொல்லைப் பயன்படுத்தினார். அதன் பின்னர் தான் அத்தான் என்னும் சொல்லை சினிமா உலகினர் பயன் படுத்த ஆரம்பித்தனர். அது இப்போது பொது மக்கள் பயன்படுத்தும் சொல்லாகவும் ஆகிவிட்டது.
இப்போதெல்லாம் :வாடா! போடா!" என்னும் சொல்லைப் பெண்கள் பயன்படுத்துகின்றனர். நமக்கு ஒன்றும் ஆட்சேபணை இல்லை! எல்லாம் குறுகிய கால மயக்கம்! அந்த வார்த்தையை எப்போதும் பயன்படுத்த முடியாது! மயக்கம் தெளிந்த பிறகு சகஜ நிலைக்கு வந்து விடுவார்கள்!
அத்தான்...! என் அத்தான்...! இதுவே நமது பண்பாடு!
Labels:
நடப்பு
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment