முன்னாள் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் இன்றைய எதிர்கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிம் இருவருக்கும் இடையேயான பொது விவாதம் நடைபெறுவதற்கான அறிகுறிகள் தென்பட ஆரம்பித்திருக்கின்றன!
வருகின்ற மே மாதம் 12-ம் தேதி மலாயாப் பல்கலைக்கழகத்தில் நடைபெறுவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருக்கின்றன.
விவாதப் பொருள்: SAPURA ENERGY BERHAD (GLC)
எல்லாம் சரிதான்.நமக்குள்ள கேள்வி என்னவெனில் நஜிப் அப்படி ஒன்றும் வெளிப்படையாக பேசும் மனிதர் அல்லர். நேர்மை என்பது கிஞ்சிற்றும் இல்லாதவர்! இன்றளவும் பொய் தான் அவரின் மூலதனம். இனி மேலும் அவர் அப்படித்தான் இருப்பார்!
விவாதத்திற்கு வரும் போதே விவாதத்தை எப்படி நிறுத்துவது என்பதற்கும் ஏதேனும் திட்டங்கள் வைத்திருப்பார்! இதெல்லாம் ஏற்கனவே நாம் கண்டவை தான்! இந்த விவாதங்கள் முழுமையாக நடைபெறும் சாத்தியமுமில்லை!
விவாதத்திற்கு வரும்போதே கூட்டத்தில் கலாட்டா செய்வதற்கென்றே ஒரு சில அரசியல்வாதிகளும் வருவார்கள்! அதுவும் அம்னோவைப் பற்றி சொல்லவே வேண்டாம்!
ஆனால் இப்போது ஏற்பாடு செய்கின்றவர்கள் ரொம்பவும் நேர்மையாக செயல்படுபவர்கள் போன்ற தோற்றத்தை ஏற்படுத்துகிறார்கள்! சரி! சரியான முறையில் நடந்தால் நாம் அதனை ஏற்றுக் கொள்ளாமல் என்ன செய்யப்போகிறோம்?
நிகழ்ச்சியை ஏற்பாடு செய்பவர்கள் மக்கள் பார்க்க வேண்டும் என்பதற்காக நேரடியாக ஒளிபரப்பும் செய்யப் போகிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த விவாதம் என்பது அரசாங்க சார்பு நிறுவனமான சாப்புரா எனெர்ஜி பெர்ஹட் டிற்குச் சென்ற ஆண்டு ஏற்பட்ட நட்டத்தைப் பற்றியதாகும். சென்ற ஆண்டு மட்டும் அதற்கு ஏற்பட்ட நட்டம் ரி.ம. 8.9 பில்லியன் என்று சொல்லப்படுகிறது. இதனைப் பற்றியான ஒரு விவாதமே வரப்போகின்ற இந்த நிகழ்ச்சி.
பொது விவாதம் நடக்க வேண்டும். அதில் எந்த சந்தேகமுமில்லை. நடக்கட்டும் பார்க்கலாம்!
No comments:
Post a Comment