யார் வீட்டை யார் ஏலமிடுவது? வங்கியின் எகத்தாளம்!
ஒரு பக்கம் ஆலோங்கின் அடாவடித்தனத்தை அடக்க முடியவில்லை! இன்னொரு பக்கம் வங்கிகள் செய்கின்ற அடாவடித்தனம்!
குறிப்பாக வங்கிகள் படிக்காதவர்களை, ஒன்றும் அறியாதவர்களை, அதுவும் அப்பாவிகளைக் குறிவைத்து தாக்குகின்றன!
இங்கு வங்கிகள் என்று சொல்லும் போது அங்கு பணிபுரியும் ஒரு சில நாதாரிகளைத்தான் நான் குறிப்பிடுகிறேன். ஏழை மக்களின் இரத்தத்தை உறிஞ்சுபவர்கள் இவர்கள். கஷ்டப்பட்டு சம்பாதித்த அவர்களின் பணத்தைக் கொண்டு வாங்கிய வீட்டை எந்த கஷ்டமும் படாமல் சம்பந்தப்பட்டவர்களின் வீட்டை அனாவசியமாக இன்னொருவருக்கு விற்கும் திறன் இவர்களுக்கு எங்கிருந்து வந்தது? போதுமான தண்டனைகள் இவர்களுக்குக் கிடைக்காதது தான் காரணம்.
எனக்குத் தெரிந்து இதில் பெரும்பாலும் ஏழை இந்தியர்கள் தான் பாதிக்கப்படுகின்றனர். கேட்க நாதியில்லாத சமூகம் என்று இந்த நாய்கள் நினைக்கின்றனர்!
நான் கேள்விப்பட்ட ஒரு செய்தி. ஒரு நண்பர் தனது வீட்டுக்கான பணத்தைக் கட்டி முடிக்க இன்னும் ஒரு சில மாதங்களே இருந்த நிலையில் அவரைக்கட்ட வேண்டாம் என்று சொல்லி பின்னர் அந்த வீட்டை பணம் கட்டவில்லை என்று சொல்லி வீட்டை ஏலத்திற்கு விற்றுவிட்டார்கள்! இது போன்ற பல சம்பவங்கள் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன. அனைத்தும் இந்தியர்கள் சம்பந்தப்பட்டவைகள் தான். ஏழை மக்கள், படிக்காதவர்கள் சம்பந்தப்பட்டவைகள் தான். படித்தவர்களே ஏமாறும் போது படிக்காதவர்கள் என்ன செய்வார்கள்? அவன் ஏதோ டை கட்டியிருக்கிறான். அதைப்பார்த்து அவனைப் பெரிய மனிதனாக நாம் நினைப்பதால் வருகிற வினை இது!
ஒரு கூட்டுறவு சங்கத்தோடு எனக்கும் ஓரு அனுபவம் உண்டு நான் மாதாமாதம் பணம் அனுப்பினேன். தொடர்ந்து மூன்று ஆண்டுகள். முதல் ஓரிரண்டு மாதங்கள் பணம் அனுப்பியதற்கான இரசீதுகள் வந்தன. அதன் பின்னர் இரசீதுகள் வரவில்லை. மூன்று ஆண்டுகள் முடியும் தருவாயில் அத்தோடு தவணை முடிந்ததாக அவர்களுக்கு அறிவித்தேன். உடனே தொலைபேசி அழைப்பு வந்தது! பணமே அனுப்பவில்லை! எப்படி முடிந்தது! என்று சராமாரியான கேள்விகள்! ரசீது உண்டா என்று கேள்விகள்! மூன்று ஆண்டுகள் நான் அனுப்பிய பணம் கிடைக்கவில்லை. நான் அனுப்பிய கடைசிக் கடிதம் அவர்களுக்குக் கிடைத்துவிட்டதாம். எனினும் அவர்களுடைய சூழ்ச்சிக்கு நான் பலியாகவில்லை!
மேலே படத்திலுள்ள தமிழ்ச்செல்வியும் அவரது கணவரும் எந்த அளவு அந்த வீட்டை வாங்க கஷ்டப்பட்டிருப்பார்கள். கடைசியில் பணம் கட்டவில்லை என்று சொல்லி அந்த வீட்டை ஏலம் விட்டுவிட்டார்களாம். இப்போது PSM கட்சியின் தலையீட்டினால் அந்தப் பிரச்சனை சுமூகமாக முடியும் என எதிர்பார்ப்போம்.
இந்த நேரத்தில் பி.எஸ்.எம். கட்சியினருக்கு ஒரு வேண்டுகோள். தமிழ்ச்செல்விக்கு அந்த வீட்டைத் திரும்ப அவரிடம் ஒப்படைப்பது மட்டும் அல்ல அவருக்கு நஷ்டஈடும் பெற்றுத்தர வேண்டும்.
No comments:
Post a Comment