பத்துமலைத் திருத்தலத்தில் பக்தர்கள் குவிந்தனர்!
பத்துமலை தேவஸ்தானம் சுமார் இருபது இலட்சம் பகதர்கள் வருகை தருவர் என மதிப்பிடுகிறது. அதற்கு மேலும் போகலாம். நல்ல பருவ நிலை என்றால் யாரையும் நிறுத்திவிட முடியாது.
வழக்கம் போல தேவஸ்தானம் 'எது செய்ய வேண்டும், எது செய்யக் கூடாது' என்று அறிவித்துக் கொண்டுதான் இருக்கிறது. நம் மக்களுக்கு அவ்வளவு சீக்கிரத்தில் எதுவும் காதுக்கு எட்டப் போவதில்லை!
குடித்துவிட்டு காவடி ஆட்டம் ஆடிய காலிகளைக் காவல்துறை கைது செய்திருப்பதாகத் தகவல். காவடிகளுக்கும் காவடிகளுக்கும் மோதலாம். அதுவும் கூட வருங்காலங்களில் குண்டர் கும்பல் கலாச்சாரமாகக் கூட மாறலாம். முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும்.
தங்க நகைகளை அணிந்து கொண்டு வரவேண்டாம் என்று சொன்னாலும் யாரும் கேட்பதில்லை. குமரிகள் கேட்டாலும் பாட்டிகள் கேட்பதில்லை போலத் தோன்றுகிறது. பாட்டியின் சங்கிலியை அறுத்த பெண்மணி ஒருவர் கையும் களவுமாகப் பிடிபட்டிருக்கிறார். இது நாள் வரை திருடன் என்றால் வெளிநாட்டவரைத் தான் நாம் நினைத்துக் கொண்டிருந்தோம். இவரும் வெளிநாட்டுக்காரர் தான், ஸ்ரீலங்காவைச் சேர்ந்தவர் என்று தெரிகிறது. நாம் எதிர்பார்க்கவில்லை ஒரு பெண்மணி இப்படிச் செய்வார் என்று. மிக சோகம்.
வழக்கம் போல இப்போதும் நிர்வாகத்தின் மீது ஒரு குற்றச்சாட்டு உண்டு. வெளிநாட்டவர்களுக்குச் பத்துமலையில் வியாபாரம் செய்ய இடங்களை அள்ளி அள்ளிக் கொடுத்திருக்கிறதாம் நிர்வாகம். வியாபாரக் கண்கொண்டு பார்த்தால் அது தவறில்லை. நமது இனம் என்று பார்த்தால் அது தவறு தான். நம் இன முன்னேற்றத்தைப் பற்றி நிர்வாக எந்தக் கவலையும் படவில்லை என்று தெரிகிறது. கவலைப்பட வேண்டிய இடத்தில் டான்ஸ்ரீ நடராஜா இல்லை என்பதும் தெரிகிறது. வாழ்க அவரின் இனப்பற்று!
எப்படியோ பத்துமலை என்பது இந்து பகதர்களுகான சிறப்பான திருத்தலம் இந்த அளவு கூட்டம் மலேசியாவில் வேறு எந்தவொரு திருத்தலத்திலும் கூடுவதில்லை. அதில் வருகின்ற வருவாய் முற்றிலுமாக தமிழர்களின் நலனுக்காகப் பயன்படத்தப்பட வேண்டும் என்பதே நமது நோக்கம்.
இந்த ஆண்டும் முருகப்பெருமான் தமிழ் மக்களுக்கு தனது ஆசிரை வழங்குவாராக!
No comments:
Post a Comment