Friday, 29 January 2016
சொத்துக்கள் வாங்குகிறீர்களா...?
நீங்கள் ஏதேனும் சொத்துக்கள்வாங்குகிறீர்களா? எதற்கும் கொஞ்சம் எச்சரிக்கையாக இருங்கள்.
மலாய்க்காரர்களின் சொத்துக்களை அவர்கள் பிற இனத்தவர்களிடம் விற்க முடியாது என்று சட்டமே உண்டு. அப்படி ஒரு சட்டம் இல்லையென்றால் அவர்களுடைய பூர்விக நிலங்கள் எல்லாம் இந்னேரம் மற்ற இனத்தவர்களிடம் கை மாறி இருக்கும்!
அது போல சீனர், இந்தியர் நிலங்கள் எல்லாம் எந்தப் பிரச்சனையும் இல்லை. ஆனால் சீனர்கள் அவர்கள் சொத்துக்களை பிற இனத்தவரிடம் விற்பதில்லை. அது அவர்களிடம் உள்ள எழுதப்படாத சட்டம்.
இந்தியர்கள் இவைகளுக்கெல்லாம் அப்பாற்பட்டவர்கள். தங்களின் நிலங்களையோ, வியாபார மையங்களையோ இந்தியர்களைத் தவிர மற்ற இனத்தவர்களுக்குத்தான் விற்பனைச் செய்வார்கள்! குறிப்பாகச் சீனர்களிடம். அதிலே ஒரு உள் நோக்கம் உண்டு. தமிழன் ஒருவன் முன்னேறுவதை இன்னொறு தமிழன் விரும்பமாட்டான். அங்கே ஒரு பொறாமை ஒளிந்து கொண்டிருக்கும். அதனால் தான் சீனன் பிழைத்துவிட்டுப் போகட்டும். இவனுக்கு நாம் ஏன் விற்க வேண்டும்? என்னும் பொறாமைக் குணம் அவனுக்கு வந்து விடுகிறது.
சீனர்கள் தங்கள் சொத்துக்களை மற்ற இனத்தவர்களிடம் விற்க மாட்டர்கள் என்பதை மேலேக் கண்டோம்.
ஆனால் அவர்களிடமிருந்தும் நாம் சொத்துக்களை வாங்குகிறோம்; விற்கிறோம். எல்லாம் நடந்து கொண்டுதான் இருக்கிறது. பயப்பட என்ன இருக்கிறது? என்று தான் நமக்குத் தோன்றும். சீனர்கள் தங்கள் சொத்துக்களை மற்ற இனத்தவருக்கு விற்பதில்லை என்பது நூறு விழுக்காடு உண்மை. அப்படி விற்காதவர்கள் ஏன் இந்தியர்களிடம் விற்கிறார்கள்? என்பதை நாம் யோசிக்க வேண்டும்.
அவர்கள் விற்கின்ற சொத்தில் ஏதோ வில்லங்கம் இருக்கிறது என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். அதில் ஏதோ பிரச்சனை இருக்கிறது என்பது தான் அர்த்தம்.
சில ஆண்டுகளுக்கு முன் நண்பர் ஒருவர் ஒரு சீனரிடமிருந்து நிலம் ஒன்றை வாங்கினார். அது பட்டணத்தில் அமைந்த ஒரு நிலம். நண்பருக்கு ஏகப்பட்ட கனவுகள். ஒர் இளிச்சவாய சீனன் இப்படி பட்டணத்தில் உள்ள ஒரு நிலத்தை விற்றுவிட்டானே என்று அவருக்கு ஏகப்பட்ட சந்தோஷம்.
நிலம் வாங்கி ஒர் ஆண்டு கூட ஆகவில்லை. அரசாங்கம் அந்த நிலத்தை சாலை அமைப்பதற்காக எடுத்துக் கொண்டார்கள். அவருக்குக் கிடைத்த அந்த நிலத்திற்கான நஷ்டஈடு அவர் போட்ட பணத்தில் பாதிதான்.
இந்நேரத்தில் நான் சொல்ல விழைவது ஒன்று தான். சீனர்கள் தங்கள் நிலங்களையோ பிற சொத்துக்களையோ சீனர்களிடம் மட்டும் தான் விற்பார்கள். அவர்கள் பிற இனத்தவர்களிடம் விற்க மாட்டார்கள். அவர்கள் அப்படி விற்கிறார்கள் என்றால் அதன் பின்னணியை ஆராயுங்கள். விபரம் தெரிந்தவர்கள் ஒரு பத்து பேரையாவது விசாரித்து விட்டு அதன் பின்னர் ஒரு முடிவுக்கு வாருங்கள்.
இன்னொரு அனுபவத்தையும் நான் இந்த நேரத்திலே பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.
வியாபாரம் செய்ய கடை ஒன்றை பார்த்தாயிற்று. ஒப்பந்தமும் போட்டாயிற்று. அனைத்தும் சரி தான். ஒர் இரண்டு மாதங்கள் ஆன பின்னர் அந்த சீன நண்பர் கடையை விற்க நினைக்கிறேன். நீங்கள் வாங்கிக் கொள்ளுங்களேன் என்று எங்களுக்கே அந்தக் கடையைச் சிபாரிசு செய்தார். நல்ல செய்தி தான். கொஞ்சம் நேரம் கொடுங்கள் என்று அவரிடம் கேட்டு விட்டு எல்லாவற்றையும் அலசி ஆராய்ந்து பார்த்தோம். அப்போது தான் ஒர் உண்மை வெளியாயிற்று. உண்மையைச் சொன்னால் அந்த நபர் அந்தக்கடையின் உரிமையாளரே அல்ல! அவர் ஒர் இடைத்தரகர்!அவ்வளவு தான்!ஆனாலும் அவர் எங்களை விடுவதாக இல்லை. இதெல்லாம் ஒரு பிரச்சனையே அல்ல. வழக்குரைஞர் மூலம் சரியான முறையில் ஒப்பொந்தம் போட்டுவிட்டால் அப்புறம் யாரும் ஒன்றும் செய்ய முடியாது என்று அவருடைய 'அனுபவங்களை' எல்லாம் நம்மிடம் கொட்டித் தீர்த்தார். உரிமையாளர் வெளி நாட்டில் இருப்பதால் அவர் மீண்டும் இங்கு வரப்போவதில்லை என்றெல்லாம் சொல்லிப் பார்த்தார். ஊகூம்..! நாங்கள் அசைந்து கொடுக்கவில்லை. பிறகு கிடைக்கின்ற வாடகையே போதும் என்று விட்டுவிட்டார்.
தங்கள் சொத்துக்களை விற்பதற்கு இந்தியர்களை சீனர்கள் நாடுகிறார்கள் என்றால் உடனே நாம் விழிப்படைந்து விட வேண்டும். நடக்காத ஒன்று எப்படி நடக்கிறது என்று யோசிக்க வேண்டும். சிந்திக்க வேண்டும்.
ஏமாந்த பின்னர் ஒப்பாரி வைப்பதில் புண்ணியமில்லை.
எனக்குத் தெரிந்த - என் அருகில் உள்ள - மூன்று சீனர்களின் கடைகள் சீனர்களுக்குத் தான் விற்றார்கள். அதிகம் பணம் கொடுக்கிறோம் என்று சொல்லியும் அவர்கள் இந்தியர்களுக்கு விற்பனைச் செய்யவில்லை. அதே சமயத்தில் ஒர் இந்தியரின் கடை சீனருக்குத் தான் விற்கப்பட்டது. கூடுதலாகப் பணம் கொடுக்கிறோம் என்று சொல்லியும் அவர்கள் சீனருக்குத்தான் விற்றார்கள்.
சில சமயங்களில் சீனர்கள் சொத்துக்கள் விற்பனையாவது கூட ஒரு மூடுமந்திரமாகவே இருக்கும். அவர்களின் கடைகளை வாடகை எடுத்தவர்களுக்குக் கூட அவர்கள் அறிவிப்பதுமில்லை. எல்லாம் ரகசியமாகவே நடைபெறும். காரணம் உண்டு. நாம் அந்தக் கடையை வாங்குகிறோம் என்று அவர்களிடம் சொல்லியிருப்போம். அதனைத் தவிர்ப்பதற்காக அவர்கள் செய்கின்ற மூடுமந்திரங்களில் இதுவும் ஒன்று.
எந்தவித அறிவிப்பும் இன்றி கடையை விற்றுவிட்டோம் என்பார்கள். நாம் காலி செய்வதைத் தவிர வேறு வழி இல்லாமல் போய்விடும்.
முதலில் சீனர்கள் தங்கள் கடைகளை இந்தியர்களிடம் வாடகைக்கு விடுவதற்கே யோசிப்பார்கள். அப்படிக் கொடுத்தார்கள் என்றால் அங்கு எப்படி வியாபாரம் நடைபெறுகிறது என்பதைப் பொறுத்திருந்து பார்ப்பார்கள். நல்ல முறையில் வியாபாரம் நடைபெறுகின்றது என்றால் தங்களது ஒப்பந்தத்தை நீட்டிக்க மாட்டர்கள். அவர்கள் உள்ளே வந்து விடுவார்கள்.
பொதுவாகவே சீனர்கள் தங்களைத் தவிர பிற இனத்தவர்கள் வியாபாரம் செய்வதை விரும்பவதில்லை. நாட்டின் பொருளாதாரம் தங்கள் கையில் இரூப்பதையே விரும்புபவர்கள்.ஆனாலும் நாட்டில் ஏற்பட்ட சட்டதிட்டங்கள் கடுமையாக்கபட்ட பின்னர் பலவித மாற்றங்கள் ஏற்பட்டுவிட்டன.அதனால் தான் எந்த இனத்தவரும் தொழில் செய்யலாம் என்னும் நிலைமை இப்போது ஏற்பட்டுவிட்டது.
இந்தோனேசிய மக்கள் தொகயில் மூன்றே விழுக்காட்டைக் கொண்ட சீனர்கள் அந்நாட்டின் பொருளாதாரத்தை தங்களது கட்டுப்பாட்டில் தான் வைத்திருக்கின்றனர்.என்பது ஆச்சரியம் தானே!
ஆனாலும் என்ன தான் அவர்கள் திறமைசாலிகள் என்றாலும் நமது செட்டியார்கள், நமது தமிழ்/இந்திய முஸ்லிம் சமூகத்தினர், நமது குஜாராத்தி சமூகத்தினர், பஞ்சாபியர் அவர்களோடு ஒப்பிடும் போது சீனர்களைப் பற்றி பெரிதாகச் சொல்வதற்கு ஒன்றுமில்லை. அப்போதும் சரி, இப்போதும் சரி அவர்களை அசைக்க இவர்களால் முடியவில்லை என்பது பெருமைக்குரிய விஷயம் தானே!
சீனர்களிடம் சொத்து வாங்குவது மட்டும் அல்ல, எந்தவிதமான கொடுக்கல்-வாங்கள் அனைத்தும் பலமுறை யோசித்துச் செய்ய வேண்டிய ஒரு விஷயம். எந்த ஒரு விஷயத்திலும் தயவு தாட்சண்யம், நீதி, நேர்மை பார்க்காத ஒர் இனம் அவர்கள்.
யோசித்துச் செயல்படுங்கள்!
Wednesday, 27 January 2016
எங்கே இந்த குறைபாடு?
இன்று நமது இளைஞர்கள் பலவித தொழில்களில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றனர். மகிழ்ச்சியளிக்கும் செய்தியே!
வீடுகள் செப்பனிடுவது, பைப்புகளைப் பழுது பார்ப்பது போன்று இன்னும் பல பல தொழில்கள். சிறு சிறு தொழில்கள். இன்னும் பெறும் பெறும் தொழில்கள்.
ஒரு காலத்தில் சீனர்கள் ஆதிக்கத்தில் இருந்த இது போன்ற தொழில்கள் இப்போது நமது இனத்தினரும் பங்கு பெறுவது என்பது மகிழ்ச்சியை அளிக்கின்றது.
நம்மிடையே திறமை இருக்கிறது. தொழிற்திறன் இருக்கிறது. யாருக்கும் நாம் குறைந்தவர்கள் அல்ல.
ஆனாலும் நம்மிடம் ஏதோ குறைபாடுகள் உண்டு. நமது இனத்தவர்களே அவர்களைப் புறக்கணிக்கின்றோம்.
அவர்களிடம் என்ன இல்லை? நேர்மைக் குறைவு.என்பது எனது கணிப்பு. காரணம் நானே இரண்டு மூன்று முறை அவர்களிடம் ஏமாந்து போயிருக்கிறேன்.
அவர்களிடம் நேர்மைக் குறைவு என்பது மட்டும் அல்ல. பெரும்பாலான இளைஞர்கள் குடிகாரர்களாகவும் இருக்கின்றனர். எல்லாவற்றையும் அரைகுறையாகச் செய்வது, முடிந்தால் ஏமாற்றுவது, ஏதோ பொழுது போக்காகச் செய்வது; இவைகளே இவர்களுக்குக் கண்ணிகளாகி விட்டன.
நான் முதன் முதலில் ஏமாந்த கதை: வீட்டின் குளியலறைக் கதவு மாற்ற வேண்டியிருந்தது. ஒருவர் சிபாரிசு செய்த இளஞன் வந்தான். 300 வெள்ளி என்றான். பேசி முடிவாயிற்று. வேலை ஆரம்பிக்கவில்லை. பணம் கொடுத்தாயிற்று. பணத்தோடு போனவன் "போனவன் போனாண்டி" என்றாயிற்று! சிபாரிசு செய்தவரை விசாரித்தோம். "நீங்க ஏங்க மொத்தமா பணத்தைக் கொடுத்தீங்க? அவன் குடிகாரப்பய" என்று அவர் முற்றுப்புள்ளி வைத்தார்!
எனது மகனின் நண்பன் வீட்டில் கொஞ்சம் வேலை இருந்தது. எனது மகனுக்குத் தெரிந்த ஒர் இளைஞனிடம் அந்த வேலை ஒப்படைக்கப்பட்டது. சுமார் ஆயிரம் வெள்ளீ வேலை. வீட்டுக்கார இளைஞர் கையிலிருந்தால் பணம் செலவாகிவிடும் என்பதால் ஆயிரம் வெள்ளியையும் மொத்தமாகக் கொடுத்து விட்டார். காரணம் அவன் நமக்குத் தெரிந்த இளைஞன் என்பதால்.கொஞ்சம் நம்பிக்கையோடு அனைத்தும் நடந்தன. அதன் பின் அந்த இளைஞனைப் பார்க்கவே முடியவில்லை! போனான்! போனான்! போய்க்கொண்டே இருந்தான்! அவன் வீடு தெரியும். அவன் அப்பா, அம்மா அனைவரையும் தெரியும். இருந்தும் என்ன பயன்? வீட்டில் குடிபோதையோடு இருந்தான்.நாளை நாளை என்று சொன்னானே தவிர மற்றபடி எதுவும் நடக்கவில்லை! எந்தப் பயமுறுத்தலும் எடுபடவில்லை! உதைத்தாலும் வாங்கத் தயாராக இருந்தான்!
இந்தச் சூழலில் நமது இன இளைஞர்களை நம்பி எப்படி வேலைகளை ஒப்படைக்க முடியும்?
இங்கு தான் சீனர்கள் முன்னணியில் நிற்கின்றனர். போட்டிகள் அதிகம் என்பது அவர்களுக்குத் தெரிகிறது. தங்களது கட்டணங்களைக் குறைப்பதில்லை. ஆனால் தங்களது வேலைகளில் கவனம் செலுத்தி மிக நேர்த்தியாகத் தங்களது வேலைகளைச் செய்து முடிக்கின்றனர்.
நிச்சயமாக சீனர்களிடம் தான் நம்பிக்கையோடு வேலைகளை ஒப்படைக்க முடியும் என்னும் சூழிலலில் நாம் இருக்கிறோம். வேறு வழி?
நல்ல இளைஞர்களும், நல்ல தொழில் முனைவோரும் நம்மிடையே இருக்கத்தான் செய்கின்றனர். அவர்களைத் தேடி கண்டடைவது ......? எனினும் நம்பிக்கையோடு இருப்போம். நமது இளைஞர்களும் வெற்றி பெறுவார்கள் என நம்புவோம்.
Sunday, 24 January 2016
அமானா இக்தியார் மலேசியா அறநிறுவனம்
இந்தியப் பெண்களைப் "வா!வா! என்று அழைக்கிறது வணிக உலகம்.
அரசாங்கத்தின் அரவணைப்போடு இயங்குகிற அமானா இக்தியார் மலேசியா, மலேசிய இந்திய பெண்களை, தகுதி உள்ளவர்களை இரு கரம் கூப்பி அழைக்கிறது.
அவர்களைப் பற்றிய குறைபாடுகள் நம்மிடம் நிறையவே உள்ளன. காரணம் விளம்பரங்கள் நறையவே வருகின்றன. உதவி கிடைப்பதோ ஏதோ அவர்களுக்கு வேண்டிய ஒரு சிலருக்குத்தான் என்பன போன்ற குறைபாடுகள்.
இருந்தாலும் அதற்காக நாம் அலட்சியமாக இருந்து விட முடியாது.
ஏற்கனவே கடனுதவி பெற்ற பெண்களில் 90 பேரைத் தேர்ந்தெடுத்து அவர்களை வெற்றிப் பெற்ற தொழிலதிபர்களாக உயர்த்துவதற்கும் திட்டங்களைத் தீட்டிக் கொண்டிருக்கிறது அமானா இக்தியார்.
இந்தியப் பெண்களை வணிகப்பக்கம் உறுதிப்படுத்தவும் மேலே சொன்னது போல 90 பெண்களைத் தொழிலதிபர்களாக உயர்த்தவும் கங்கணம் கட்டிக் கொண்டிருக்கிறார் அதன் தலைமை நிர்வாகி பிரேமா நாயகி. பெண்களுக்குத் தேவையான உதவிகளையும் தேவைகளையும் அவர் செய்யக் காத்துக் கொண்டிருக்கிறார்.
இதுவரை அமானா இக்தியார் மூலம் 8,237 இந்தியப் பெண்கள் 8 கோடியே 76 இலட்சம் வெள்ளியைக் கடனுதவியாகப் பெற்றிருக்கின்றனர்.
இந்தியப் பெண்களுக்காக சுமார் 10 கோடி வெள்ளியை வியாபாரக் கடனுதவியாக பிரதமர் நஜிப் ஒதுக்கீடு செய்திருந்தார். அதில் இன்னும் 2 கோடியே 25 இலட்சம் வெள்ளி பயன்படுத்தப் படாமல் அப்படியே போட்டு வைத்திருப்பதைப் பார்த்தால் நாம் எப்பொது விழித்தெழப் போகிறோம் என்று கேட்கத் தோன்றுகிறது!
போனது போகட்டும். இனி நடப்பது நல்லவைகளாக இருக்கட்டும். அமானா இக்தியார் உங்களுக்காக காத்துக் கிடக்கிறது என்பது மட்டும் உண்மை.
மேல் விவரங்களுக்கு நீங்கள் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி:
AMANAH IKHTIAR MALAYSIA,
Persiaran Cempaka, Bandar Sri Damansara, 52200 Kuala Lumpur.
Tel: 03-62748810

Thursday, 21 January 2016
உணவுகளை வீணடிக்காதீர்.......!
உணவுகளை வீணடிக்கும் பழக்கும் நம்மைப் போல வேறு யாருக்கும் இருக்குமா என்பது கேள்விக்குறியே!
பொதுவாக திருமண நிகழ்வுகளில் நடைபெறுகின்ற இந்த அலங்கோலங்களைப் பார்க்கின்ற போது "நெஞ்சு பொறுக்குதில்லையே இந்த நிலைகெட்ட மனிதரை நினைந்துவிட்டால்" என்று பாடத் தோன்றுகிறது.
உணவுகளை எப்படியெல்லாம் வீணடிக்கிறார்கள்?
உண்மையைச் சொன்னால் நமது தாய்மார்களுக்கே இந்த வீணடிப்பு செய்வதில் அதிக பங்கு இருப்பதாகச் சொல்லலாம். உணவு என்றாலே ஏதோ அலட்சியம்.
சாப்பிட முடியவில்லையென்றால் சும்மா குப்பைத் தொட்டியில் போட்டுவிட்டு அவர்கள் பாட்டுக்குப் போய்க் கொண்டே இருக்கிறார்கள். என்ன அலட்சியம்; என்ன எகத்தாளம்! மனசாட்சி என்று ஒன்று இல்லையா?
உணவு என்ன அவ்வளவு மலிவாகப் போய்விட்டதா? இந்த உணவுக்காக மனிதன் படுகின்ற பாட்டை கொஞ்சமாவது நினைத்துப் பார்க்கிறார்களா இந்த அலட்சியவாதிகள்!
ஏன் வெளிநாடுகளுக்குப் போக வேண்டும்? நமது நாட்டிலேயே பாருங்கள். ஒரு வேளைச் சாப்பாட்டுக்காக பல குடும்பங்கள் பலவித கஷ்டங்களை அனுபவிக்கிறார்கள் என்பதையாவது இவர்கள் தெரிந்து வைத்திருக்கிறார்களா?
உணவை அலட்சியப் படுத்துகிற இவர்கள் யார்? எல்லாம் படித்தவர்கள்! இது தான் மிகவும் ஆச்சரியமான செய்தி. படித்தவர்கள் என்பதை ஏதோ உடை அணிவதில் தான் காட்டுகிறார்களே தவிர அவர்கள் பண்பாட்டில் காட்டுவதில்லை.
பெரியவர்கள் இப்படி உணவை அலட்சியம் செய்வதால் நாளை இவர்கள் பிள்ளைகளும் அவர்களையே பின்பற்றுவார்கள் என்பது தான் நிதர்சனம்.
இந்த உணவுக்காக மக்கள் படுகின்ற அவஸ்தை, படுகின்ற கஷ்ட நஷ்டங்களைக் கொஞ்சம் யோசித்துப் பார்க்க வேண்டும். உலக நாடுகளைப் பாருங்கள். எதியோப்பியா என்னும் ஒரு ஆப்பரிக்க நாட்டைப் பற்றித் தெரியாதவர் யாரும் இல்லை. அந்த அளவுக்குப் பஞ்சம், பட்டினி. உண்ண உணவு இல்லை; உடுத்த உடையில்லை.
தமிழ் நாட்டில் எத்தனையோ விவசாயிகள் உணவின்றி தற்கொலைச் செய்து கொள்கின்றனர் என்பதைப் பத்திரிக்கைகள் செய்திகள் வெளியிடுகின்றன.
இதையெல்லாம் நாம் அனுபவித்துத் தான் தெரிந்து கொள்ள வேண்டும் என்பது அவசியமில்லை.
இன்று, இந்த உணவை அலட்சியப் படுத்தும் நம்மை, நாளை இந்த உணவு நம்மை அலட்சியப் படுத்தும் என்பதை நாம் மறக்க வேண்டாம். இதற்குத் தான் இனிப்பு நீர்,இரத்த அழுத்தம் என்று நாம் பல வியாதிகளைக் கொண்டிருக்கிறோம்.
மீண்டும் மீண்டும் சொல்லுகிறேன் உணவுகளை வீணடிக்க வேண்டாம். உங்களால் சாப்பிட முடியவில்லை என்றால் அந்த உணவைப் பொட்டலமாகக் கட்டி உங்கள் வீட்டில் உள்ள செல்லப் பிராணிகளுக்குக் கொடுங்கள். யாராவது சாப்பிட்டால் சரி.
உணவில் அலட்சியம் காட்ட வேண்டாம் நீங்கள் அலட்சியப்பட்டுப் போவீர்கள்!

Friday, 15 January 2016
பொங்கலோ பொங்கல்! பொங்கட்டும் புதிய எழுச்சி!
தமிழர் திருநாளாம் இந்தப் பொங்கல் திருநாளில் பொங்கட்டும் புதிய எழுச்சி!
நமது வாழ்க்கையில் புதிய சிந்தனைகள், புதிய முயற்சிகள் புதிய வாழ்க்கை முறைகள் அனைத்தும் புதியவைகளாகவே இருக்கட்டும்.
பழைய சிந்தனைகளைப் புறந்தள்ளுவோம். வேலை செய்து தான் பிழைக்க வேண்டும் என்னும் கண்மூடித்தனமான சிந்தனைகளிலிருந்து விடுபடுவோம். பெரிய படிப்புப் படித்துவிட்டோம் அதனால் பெரிய வேலை தான் வேண்டும் என்னும் பெருமையை எல்லாம் மூட்டைக்கட்டி வைப்போம்.
நாம் எங்கும் போக வேண்டாம். நம்மைச் சுற்றியுள்ள சீனர்களைப் பார்த்தாலே போதும். புதிய பார்வைக் கிடைக்கும். புதிய கோணங்கள் கிடைக்கும்.புதிய தெம்பு கிடைக்கும்.
குறைவான சம்பளத்தில் சீனர்கள் வேலை செய்வதைப் பார்த்திருக்கிறீர்களா? ஏன்? பெரிய சம்பளத்தில் வேலை செய்யும் தமிழர்களைப் பார்த்திருக்கிறீர்களா? நமக்கும் சீனர்களுக்கும் ஒரு பெரிய இடைவெளி எப்போதும் உண்டு. குறைவான சம்பளம் என்றாலே அவர்கள் அந்தப்பக்கம் தலை வைத்துக் கூடப் படுப்பதில்லை. நாமோ குறைவானச் சம்பளத்தைக் கூட ஒரு பெரிய சம்பளமாக நினைக்கும் மனப்போக்கைக் கொண்டிருக்கிறோம்!
இந்தப் பொங்கல் நந்நாளில் நமது எண்ணங்களை மாற்றுவோம். புதிய முயற்சிகளில் ஈடுபடுவோம். அதுவும் குறிப்பாக வியாபாரத்துறையில் நமது கவனத்தைச் செலுத்துவோம்.
சிறிய தொழில்கள் தான் பிற்காலத்தில் பெரிய நிறுவனங்களாக மாற்றியமைக்கப் பட்டிருக்கின்றன.
பணம் இல்லையே என்று ஒலமிடுவதைவிட ஏதாவது ஒரு சிறிய தொழில் ஒன்றைப் பிடித்துக் கொள்ளுவோம். அல்லது நாட்டில் ஏகப்பட்ட நேரடித் தொழில்கள் உள்ளன.
அதில் ஏதேனும் ஒன்றைத் தேர்ந்து எடுத்து நமது வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக மாற்றி அமைத்துக் கொள்ளுவோம்.
காப்புறுதி தொழில் பற்றி நாம் அனைவரும் அறிந்தது தான். புதிதாகச் சொல்வதற்கு ஒன்றுமில்லை. ஆனால் அந்தத் தொழிலில் வெற்றி பெற்றவர்களை நீங்கள் அறிவீர்களா? நமது இளைஞர்கள் பலர் காப்புறுதித் தொழிலில் கொடிகொட்டிப் பறக்கின்றனர் என்பதை எத்தனை பேர் அறிவீர்கள்? பலர் மிகச் செல்வச் செழிப்பான வாழ்க்கையை வாழுகின்றனர்.
நிலங்கள் விற்பனைச் செய்வது, வீடுகள் விற்பனைச் செய்வது போன்ற தரகர்களாக இருந்து செயல் படுபவர்கள் நல்லதொரு வாழ்க்கையை வாழ்கின்றனரே! நாம் தரகர் என்றோ புரோக்கர் என்றோ எப்படி வேண்டுமானாலும் சொல்லலாம். இந்தத் தொழிலுக்காக பல நிறுவனங்கள் இயங்குகின்றன.
எந்தத் தொழில் செய்தாலும் அதற்கான சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் அனைத்தும் உஙளுக்குத் தேவையான பயிற்சிகளைக் கொடுக்கின்றன.
ஆனால் எந்தத் தொழிலில் நீங்கள் ஈடுபட்டாலும் தேவையானது நேர்மை மட்டுமே. நேர்மையற்ற முறையில் செய்யப்படுகின்ற எந்தத் தொழிலும் உங்களுக்குச் சரிவைக் கொண்டு வரும்.
நேரடித் தொழில் என்பது நமது சொந்தத் தொழில். வேலை நேரம் நம்மால் தீர்மானிக்கப்படுகிறது. வருமானம் என்பது நம்மால் தீர்மானிக்கப்படுகிறது. எந்த முதலாளியாலும் தீர்மானிக்கப் படுவதில்லை!
இந்தப் பொங்கல் திருநாளில் புதிய எழுச்சி பெறுவோம். நமது வாழ்க்கையில் புதிய மாற்றங்களைக் கொண்டு வருவோம்.
பொங்கி எழுவோம்! புத்துணர்வு பெறுவோம்!
பொங்கலோ பொங்கல்!

Tuesday, 12 January 2016
இது சரியான முடிவு தான்!
இது ஒரு சீனப் பெண்ணின் துணிச்சல் மிக்க முடிவு.
சிங்கப்பூரில் கணக்காளராக வேலை செய்தவர் அந்த 30 வயது பெண். 9,000/- வெள்ளி சம்பளம் வாங்கியவர்.
ஜொகூரில் வசித்து வந்த அவரது தந்தை தீடிரென இறந்து போனார். அவர் செய்ததோ ஒரு சிறிய தொழில். சீனப் பலகாரங்கள் செய்து விற்று வந்தார்.
தந்தையின் தொழிலைப் பற்றி மகள் எதுவும் அறிந்திருக்கவில்ல. முதலில் அந்தத் தொழிலைப் புரிந்து கொள்ள வேண்டும். செய்யத் தெரிந்திருக்க வேண்டும். தனது தந்தை செய்து வந்த அந்த 16 வகையானப் பலகாரங்களைக் கற்றுக்கொள்ள 18 மாதங்கள் அவருக்குப் பிடித்தன.
கணக்காளராக வேலை செய்த போது அவருடைய வேலை நேரம் 9.00 லிருந்து 5.00 மணி வரை. ஆனால் இபொழுதோ தலை கீழ்மாற்றம்! காலையில் 6..00 மணிக்கெல்லாம் எழுந்து மார்கெட் சென்று தேவையான பொருட்களை எல்லாம் வாங்க வேண்டும். 10.00 மணிக்குப் பிறகு தான் பலகாரங்கள் செய்யும் வேலை ஆரம்பமாகும். அதன் பின்னர் தனது விற்பனை நிலையத்திற்குக் கொண்டு சென்று விற்பனையை ஆரம்பிக்கும் போது மணி 4.00 ஆகிவிடும். பிறகு இரவு 10.00 மணி வரை வேலை! வேலை! வேலை! இது தான் அவருடைய தினசரி பணி.
தனது தந்தையின் தொழிலை தான் எடுத்து செய்ய வேண்டும் என்று தனது தாயாரிடம் சொன்ன போது அவரது தாயார் அதனை விரும்பவில்லை. இருந்தாலும் மகள் விடுவதாக இல்லை. இது எனது தந்தையின் தொழில், நமது குடும்பத் தொழ்லில். அதனை ஏன் நாம் விட்டுக் கொடுக்க வேண்டும் என்னும் பிடிவாதம் அவரிடம் இருந்தது.
இது போன்ற பிடிவாத குணம் நமது சமூகத்தில் குறைந்த அளவில் தான் காணப்படுகிறது. தந்தையார் நடத்தி வருகிற வெற்றிகரமான தொழிலைக் கூட பிள்ளைகள் தொடருவதில்லை. காரணம் நேரங்காலம் பார்க்காமல் வேலை செய்ய வேண்டுமாம். அதனால் அவர்களுக்குப் பிடிக்கவில்லையாம்! இப்படித்தான் காரணங்களைச் சொல்லிக் கொண்டிருக்கின்றனர் இளைய தலைமுறையினர்.
பெற்றோர்கள், பிள்ளைகள் சிறு வயதாக இருக்கும் போதே தொழிலில் உள்ள சிறப்புக்களைச் சொல்லி வளர்க்க வேண்டும்.
அந்தச் சீனப்பெண்ணுக்குள்ள அந்தத் தைரியத்தை ஊட்டி வளர்க்க வேண்டும்.
நாமும் ஒரு வெற்றிப் பெற்ற சமூகமாக மாற வேண்டும். மாறும்! மாறுவோம்!
கோடிசுவரன்
Monday, 11 January 2016
முதலமைச்சர் சகாயம் ஐ.ஏ.எஸ்!
மீண்டும் தமிழ் நாட்டில் தேர்தல் வரப் போகின்றது!
இப்பொழுதே ஆளுங்கட்சியினர் என்னன்ன இலவசங்களைக் கொடுக்கலாம் என்று திட்டங்கள் தீட்டிக் கொண்டிருப்பார்கள்! இது எப்போதும் உள்ள நடைமுறை தான். புதிது என்று சொல்லவதற்கு இல்லை.
ஒரு வேளை இலவசங்கள் மாறுபடலாம்! இப்போது உள்ள நிலையில் "குடிநீர் இலவசம், புதிய வீடு இலவசம், செத்துப்போன குடும்பங்களுக்கு ஒரு லட்சம் இலவசம்" என்றெல்லாம் அரசியல்வாதிகள் இனி இலவசங்களை அள்ளித்தரலாம்.
ஆனால் நாம் இப்போது அது பற்றிப் பேச வேண்டாம்.
ஒரு நல்ல செய்தி. தமிழக மக்களின் மனதில் சில மாற்றங்கள் ஏற்பட்டிருக்கின்றன. அது வரவேற்கக் கூடிய மாற்றம்.
சகாயம் ஐ.ஏ.எஸ். தமிழக முதலமைச்சர் ஆக வேண்டும் என்று பொது மக்கள் பலர் கருத்து வெளியிட்டிருக்கின்றனர். இதுவே ஒரு பெரிய மாற்றம். நல்ல மாற்றம்.
நிச்சயம் சகாயம் முதலமைச்சர் பதவியை விரும்பமாட்டர். இப்போது அவரின் மாவட்ட ஆட்சியர் பதவியின் மூலம் நல்ல பல காரியங்களை செய்து வருகிறார். அந்த நல்ல காரியங்கள் தமிழகம் முழுவதும் எதிரொலிக்க வேண்டும் என மக்கள் நினப்பதில் தவறு ஏதும் இல்லை.
இங்கு நாம் கவனத்தில் கொள்ள வேண்டியது: மக்கள் நேர்மையான அர்சாங்கத்தை விரும்புகின்றனர். ஊழற்ற, லஞ்சம் இல்லா அரசாங்கத்தை விரும்புகின்றனர். விவசாயம் செய்வோர் நல்ல வாழ்க்கை வாழவேண்டும். ஏழைகளின் துயர் துடைக்கப்பட வேண்டும்.
இலவசங்கள் பிச்சை எடுக்கத்தான் உதவும். பஞ்சாப் மாநில மக்கள் எப்படி தலை நிமிர்ந்து .வாழ்கிறார்களோ அது போன்ற வாழ்க்கை தமிழகத்திலும் வர வேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பு என்பதால் தான் இந்த மன மாற்றம்.
எந்த இலவசங்களும் வேண்டாம். சாராயத்தின் மூலம் வருகின்ற வருமானம் தான் அரசாங்கம் என்றால் அதை விடக் கேவலம் எதுவும் இல்லை என்னும் உணர்வு மக்களுக்கு வர வேண்டும். ஆட்சியில் உள்ளவர்களுக்குக் கேவலம் என்பது அவர்களது அகராதியில் இல்லை. ஆனால் மக்களுக்கு உண்டு.
சீக்கிரம் அந்த "லஞ்சம் தவிர்த்து நெஞ்சம் நிமிர்த்து " நாள் வரத்தான் செய்யும்! வரும் என நம்புவோம்!
Saturday, 9 January 2016
வீட்டுக்கடன் முடியும் தருவாயில் இருக்கிறதா?
வங்கியில் உங்கள் வீட்டுக்கடன் என்ன நிலையில் உள்ளது? முடியும் தருவாயிலா?
உங்களை எச்சரிக்கவே இதனை எழுதுகிறேன். இந்தச் செய்தியைக் கேட்ட பிறகு மனதில் ஒரே நெருடல்.
லாரி ஒட்டுனரான அந்த நண்பரும் அவர் மனைவியும் சேர்ந்து வீடு வாங்கியிருந்தனர். மாதா மாதம் மாதத் தவணையைச் சரியாகக் கட்டி எந்தப் பிரச்சனையும் இல்லாமல் அனைத்தும் சரியாகவே போய்க் கொண்டிருந்தது.
ஒரு முறை மாதத் தவணையைக் கட்டுவதற்காக வங்கிக்குச் சென்றார்.
தவணையைக் கட்டும் போது அங்கிருந்த மலாய்க்கார அலுவலர் ஒருவர் நண்பரின் கணக்கையெல்லாம் பார்த்துவிட்டு: நீங்கள் ஒவ்வொரு மாதமும் பணம் அதிகமாகவே செலுத்துகிறீர்கள். பரவாயில்லை! இனி சில மாதங்களுக்கு உங்களின் தவணைப் பணத்தைச் செலுத்த வேண்டாம். நாங்கள் உங்களுக்குக் கடிதம் அனுப்புவோம்.கடிதம் கிடைத்த பிறகு நீங்கள் உங்கள் பணத்தைச் செலுத்தினால் போதும் என்றார்.
வங்கியில் என்ன சொல்கிறார்களோ அதைத் தானே நாம் செய்ய வேண்டும்?
நண்பரும் அதைத் தான் செய்தார். வங்கியிலிருந்து எந்தக் கடிதமும் வரவில்லை. அவர் போய் 'என்ன, ஏது' என்றும் கேட்கவுமில்லை.
சில மாதங்கள் பறந்தோடின
ஒரு நாள் மலாய்க்காரர் ஒருவர் தான் அந்த வீட்டை வாங்கி விட்டதாகவும் எப்போது நீங்கள் வீட்டைக் காலி செய்கிறீர்கள் என்று கேட்டு வந்தார்.
நண்பருக்குத் தூக்கி வாரி போட்டது. உடனே வங்கிக்குச் சென்று விசாரிக்க ஆரம்பித்தார்.
அவர்களோ மாதத் தவணையை நீங்கள் சரியாகக் கட்டவில்லை. உங்களுக்குக் கடிதங்கள் அனுப்பி எச்சரிக்கைச் செய்தோம். உங்களிடமிருந்து எந்த பதிலும் இல்லை. அதனால் சட்டப்படி நாங்கள் செய்ய வேண்டியதைச் செய்தோம். வீட்டை ஏலத்திற்குக் கொண்டு வந்து விட்டோம். இப்போது அந்த வீட்டை வேறொருவர் வாங்கிவிட்டார். இனி எங்களால் எதுவும் செய்ய இயலாது! என்று கை விரித்து விட்டனர்.
வங்கியிடம், கடிதங்கள் அனுப்பியதற்கான அத்தாட்சி, வீடு ஏலம் போவதற்கான அத்தாட்சி இப்படி எல்லா அத்தாட்சிகளும் அவர்களிடம் இருந்தன.
நண்பரோ கையில் பணம் இருந்தும் நான் இப்படி ஏமாந்தேனே என்று புலம்பிக் கொண்டிருக்கிறார்.
வங்கியில் வேலை செய்பவனெல்லாம் யோக்கியன் என்று நம்பி விடாதீர்கள். அவர்கள் எதைச் சொன்னாலும் கடிதமாகக் கொடுக்கச் சொல்லுங்கள். அது தான் உங்களின் அத்தாட்சி.
கோடிசுவரன்
Wednesday, 6 January 2016
காரில் சிக்குகின்ற குழைந்தைகள்!
காரில் சிக்குகின்ற குழந்தைகளின் எண்ணீக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டு வருகின்றன.
கடைசியாக இரு தினங்களுக்கு முன்னர் 17 மாத குழந்தை ஒன்று காரில் அகப்பட்டுக் கொண்டதாக செய்திகள் வெளியாயின. தாய் குழந்தையிடம் கார் சாவியை சும்மா ஜாலிக்காக குழந்தையின் கையில் கொடுத்து விளையாட வைத்து விட்டு வெளியே போக அந்தக் குழந்தையோ தெரியாத்தனமாக எதனையோ அமுக்க, கார் உள்ளே பூட்டிக் கொண்டது.
பின்னர் தாய் அங்குள்ள தற்காப்புப் படையினரிடம் பிரச்சனையைக் கொண்டு செல்ல அவர்கள் வந்து குழந்தையை மீட்டெடுத்தனர்.
காரினுள் உள்ள குழந்தைகளிடம் கார் சாவியைக் கொடுத்து விளையாட வைப்பது ஆபத்திலும் ஆபத்து என்பதை இன்னும் நமது இளம் பெற்றோர்கள் புரிந்து கொள்ளவில்லை.
இதே போன்று என் கண் முன்னே நடந்த ஒரு நிகழ்வை நான் சொல்லியே ஆக வேண்டும்.
காரின் உள்ளே கைக்குழந்தை. நல்ல தூக்கம் பையன் பெரியவன். விவரமானப் பையன். அவன் குழந்தைக்குக் காவல். பையனிடம் உள்ளே பூட்டிக்கச் சொல்லி விட்டு, சாவியையும் அவனிடமே கொடுத்துவிட்டு அந்தத் தாய் கடைக்குச் சென்று பொருள்களை வாங்கிக்கொண்டுத் திரும்பினார்.
பிரச்சனை ஒன்றுமில்லை. பையன் உள்ளே தூங்கிக் கொண்டிருந்தான்! தூக்கமோ தூக்கம்! கும்பகர்ணன் தூக்கம்! அவன் தூக்கத்தை யாராலும் அசைக்க முடியவில்லை! காரைச் சுற்றி பெரிய கூட்டம். அனைவரும் சேர்ந்து கதுவுகளைத் தட்டியும், சத்தம் போட்டும், கத்தோ கத்து என்று கத்தியும் ......ஊகூம் ....பையன் அசையவில்லை! காரின் கதவை உடைப்பதைத் தவிர வேறு வழி இல்லை! அந்தத் தாயோ காரின் கதவை உடைக்க வேண்டாம், அசிங்கமாகப் போகும் என்கிறார்!
கடைசியாக "நீயாச்சி,உன் பிள்ளை ஆச்சி" என்று ஒருவர் பின் ஒருவராக களைய ஆரம்பித்தார்கள்.
பின்னர் கண்ணாடியை உடைக்க அவர் ஒத்துக்கொள்ள கண்ணாடியை உடைத்து பையனிடம் உள்ள சாவியைப் பிடுங்கி பையனை ஒரு மொத்து மொத்தி காரை எடுத்துக் கொண்டு போனார்!
பெற்றோர்களே! சிறு குழந்தைகளிடம் கார் சாவியைக் கொடுப்பதைத் தவிருங்கள்.
Tuesday, 5 January 2016
சிவில் நீதிமன்றமா? ஷரியா நீதிமன்றமா?
சமீபத்தில் உயர்நீதிமன்றம் கொடுத்த தீர்ப்பு ஒன்று இஸ்லாம் அல்லாதவரிடையே அதிர்ச்சி அலையை ஏற்படுத்தியிருக்கிறது.
இந்திராகாந்தி என்னும் பெண்மணி ஏழு ஆண்டுகளுக்கு முன்னர் தனது ஒரு வயது பெண் குழந்தையை தீடீர் என மதம் மாறிய தனது கணவரிடம் பறி கொடுத்தார். அந்தக் குழந்தையை தன்னிடமே ஒப்படைக்க வேண்டும் என்று நீதிமன்றப் படிகளை கடந்த ஏழு ஆண்டுகளாக ஏறி இறங்கிக் கொண்டிருக்கிறார். ஈப்போ உயர் நீதிமன்றம் அவரது கணவரால் மதம் மாற்றப்பட்ட மூன்று குழந்தைகளின் மதமாற்றம் செல்லாது என்றும் அவர்கள் தாயிடமே ஒப்படைக்க வேண்டும் எனவும் தீர்ப்பளித்து விட்டது.
இந்திராகாந்தியின் இரண்டு வளர்ந்து விட்ட குழந்தைகள் அவரிடமே சேர்ந்து விட்டனர். ஒரு வயதே ஆகிய குழந்தையோடு கணவர் தலைமறைவாகி விட்டார். அவரைக் காவல் துறையினர் கண்டுபிடிக்க இயலவில்லை என்று கையை விரித்து விட்டனர், இஸ்லாமிய அதிகாரிகளின் பின்னால் ஒளிந்து கொண்டிருக்கும் அவரை யாரும் நெருங்க முடியவில்லை.
கடைசியாக இந்த வழக்கு மேல் முறையிட்டு நீதிமன்றத்திற்குக் கொண்டு செல்லப்பட்டது.
இப்போது மேல் முறையீட்டு நீதிமன்றம் விசித்திரமானத் தீர்ப்பை அளித்திருக்கிறது. இந்த வழக்கை விசாரிக்க ஷரியா நீதிமன்றமே பொருத்தமான இடம் என்பதாகத் தீர்ப்பளித்திருக்கிறது.
அது எப்படி?
ஷரியா நீதிமன்றம் என்பது இஸ்லாமிய வழக்குகளை விசாரிக்கும் ஒரு நீதிமன்றம். ஒர் இந்துவான இந்திராகாந்தி எப்படி ஷரியா நீதிமன்றதிற்குச் செல்ல முடியும்?
இங்கு நாம் ஒன்றைக் கவனிக்க வேண்டும். இஸ்லாமிய நீதிபதிகள் தீர்ப்பளிக்கும் போது இது போன்ற மதம் சம்பந்தப்பட்ட வழக்குகளில் அவர்கள் சுதந்திரமாக இயங்க முடியவில்லை. இஸ்லாம் அல்லாத நீதிபதிகளிடம் இது போன்ற வழக்குகள் கொடுக்கப்படுவதும் இல்லை.
இப்போது இந்த வழக்கின் உச்சக்கட்டம் இந்திராகாந்தி இந்த வழக்கை கூட்டரசு நீதிமன்றத்திற்கு எடுத்து செல்லுவார் என எதிர்பார்க்கப் படுகின்றது.
நியாயம் கிடைக்கும் என எதிர்பார்ப்போம்.
Sunday, 3 January 2016
நான் புதியவன்
நண்பர்களே!
புத்தாண்டு வாழ்த்துகள்!
வலைப்பதிவை இப்போது தான் ஆரம்பித்திருக்கிறேன். நான் புதியவன். இன்னும் சரியாகப் பிடிபடவில்லை! குழந்தை எப்படித் தத்தித்தத்தி நடக்குமோ அந்த நிலையில் உள்ளேன். கணனி அறிவு மகாக்குறைவு. ஆசையோ அதிகம். அதாவது எழுத வேண்டும் என்னும் ஆசையோ அதிகம்.
தனியாக வலைப்பதிவு உள்ளோர் பலர் இணையத்தில் உள்ளனர். அவர்கள் உதவியை இந்த நேரத்தில் நாடுகிறேன். எனக்கும் கொஞ்சம் கை கொடுங்கள்!
உண்மையைச் சொன்னால் கடந்த நான்கு நாட்களாக எப்படி ஆரம்பிப்பது, எங்கே தொடங்குவது என்று ஒன்றும் புரியாமல் தட்டுத்தடுமாறி இப்போது தான் ஒரு பள்ளி மாணவனின் துணையோடு இதனை எழுதிக் கொண்டிருக்கிறேன்.
இந்த 2016-ம் ஆண்டில் இணையத்தில் இணைந்து விட்டேன். இனி பின்வாங்குவதாக இல்லை!
மீண்டும் புத்தாண்டு வாழ்த்துகள் நண்பர்களே!
நண்பன்

Subscribe to:
Posts (Atom)