இந்தியப் பெண்களைப் "வா!வா! என்று அழைக்கிறது வணிக உலகம்.
அரசாங்கத்தின் அரவணைப்போடு இயங்குகிற அமானா இக்தியார் மலேசியா, மலேசிய இந்திய பெண்களை, தகுதி உள்ளவர்களை இரு கரம் கூப்பி அழைக்கிறது.
அவர்களைப் பற்றிய குறைபாடுகள் நம்மிடம் நிறையவே உள்ளன. காரணம் விளம்பரங்கள் நறையவே வருகின்றன. உதவி கிடைப்பதோ ஏதோ அவர்களுக்கு வேண்டிய ஒரு சிலருக்குத்தான் என்பன போன்ற குறைபாடுகள்.
இருந்தாலும் அதற்காக நாம் அலட்சியமாக இருந்து விட முடியாது.
ஏற்கனவே கடனுதவி பெற்ற பெண்களில் 90 பேரைத் தேர்ந்தெடுத்து அவர்களை வெற்றிப் பெற்ற தொழிலதிபர்களாக உயர்த்துவதற்கும் திட்டங்களைத் தீட்டிக் கொண்டிருக்கிறது அமானா இக்தியார்.
இந்தியப் பெண்களை வணிகப்பக்கம் உறுதிப்படுத்தவும் மேலே சொன்னது போல 90 பெண்களைத் தொழிலதிபர்களாக உயர்த்தவும் கங்கணம் கட்டிக் கொண்டிருக்கிறார் அதன் தலைமை நிர்வாகி பிரேமா நாயகி. பெண்களுக்குத் தேவையான உதவிகளையும் தேவைகளையும் அவர் செய்யக் காத்துக் கொண்டிருக்கிறார்.
இதுவரை அமானா இக்தியார் மூலம் 8,237 இந்தியப் பெண்கள் 8 கோடியே 76 இலட்சம் வெள்ளியைக் கடனுதவியாகப் பெற்றிருக்கின்றனர்.
இந்தியப் பெண்களுக்காக சுமார் 10 கோடி வெள்ளியை வியாபாரக் கடனுதவியாக பிரதமர் நஜிப் ஒதுக்கீடு செய்திருந்தார். அதில் இன்னும் 2 கோடியே 25 இலட்சம் வெள்ளி பயன்படுத்தப் படாமல் அப்படியே போட்டு வைத்திருப்பதைப் பார்த்தால் நாம் எப்பொது விழித்தெழப் போகிறோம் என்று கேட்கத் தோன்றுகிறது!
போனது போகட்டும். இனி நடப்பது நல்லவைகளாக இருக்கட்டும். அமானா இக்தியார் உங்களுக்காக காத்துக் கிடக்கிறது என்பது மட்டும் உண்மை.
மேல் விவரங்களுக்கு நீங்கள் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி:
AMANAH IKHTIAR MALAYSIA,
Persiaran Cempaka, Bandar Sri Damansara, 52200 Kuala Lumpur.
Tel: 03-62748810
great article
ReplyDelete